செய்திகள் :

`நீங்க கண்டிப்பா வரணும்..!' - உயிர்களைக் காப்பாற்றிய இந்திய கேப்டனை இஸ்ரேலுக்கு அழைத்த நெதன்யாகு!

post image

ஃப்ளைதுபாய் (Flydubai) விமானத்தில் ஏற்பட்ட திடீர் தாக்குதலில் பயணிகளின் உயிரைக் காப்பாற்றிய இந்திய கேப்டன் ஸ்மித் மச்சாரை, அடுத்த ஆண்டு நடைபெறும் இஸ்ரேல் சுதந்திர தின விழாவில் பங்கேற்க அந்த நாட்டுப் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு அழைப்பு விடுத்துள்ளார்.

நெதன்யாகுவின் சிறப்பு அழைப்பு

எஃப்.இசட் 1073 (FZ1073) விமானத்தில் நடந்த சம்பவத்துக்குப் பிறகு அபுதாபியில் சிகிச்சை பெற்று வரும் கேப்டன் ஸ்மித் மச்சாரை தொலைபேசியில் தொடர்பு கொண்டு நெதன்யாகு பேசினார். அப்போது, விமானத்தில் நடந்த சம்பவம் குறித்து ஸ்மித்திடம் கேட்டறிந்த அவர், அவரது துணிச்சலைப் பாராட்டினார். மேலும், அவரை "இஸ்ரேல், இந்தியா மற்றும் உலகின் ஹீரோ" என்றும் குறிப்பிட்டார்.

அடுத்த ஆண்டு நடைபெறவுள்ள இஸ்ரேல் சுதந்திர தின விழாவில் ஸ்மித் மச்சார் மற்றும் பிரதமர் நரேந்திர மோடி பங்கேற்று, அங்கு நடைபெறும் பாரம்பரிய தீபமேற்றும் (Torch Lighting) நிகழ்வில் கலந்துகொள்ள வேண்டும் என்றும் நெதன்யாகு அழைப்பு விடுத்துள்ளார். இந்த விழாவில் தீபமேற்றுவது நாட்டின் முக்கியமான தேசிய கௌரவங்களில் ஒன்றாகக் கருதப்படுகிறது.

விமானத்தில் நடந்தது என்ன?

செப்டம்பர் 30 அன்று துபாயில் இருந்து டெல் அவிவ் நோக்கி எஃப்.இசட் 1073 விமானம் புறப்பட்டது. விமானம் நடுவானில் பறந்துகொண்டிருந்தபோது, துணைப் பைலட் திடீரென கேப்டன் ஸ்மித் மச்சார் மீது தாக்குதல் நடத்தினார். இதில் ஸ்மித் கடுமையாகக் காயமடைந்தார். இதனால் விமானத்தின் கட்டுப்பாடு ஆபத்தான நிலைக்குச் சென்றது.

கடுமையான காயங்களுடன் இருந்தபோதும், ஸ்மித் விமானத்தின் கட்டுப்பாட்டை மீட்டெடுக்கவும், காக்பிட் கதவைத் திறக்கவும் முயன்றார். கதவு திறந்ததும் கேபினில் இருந்த பணியாளர்கள் மற்றும் பயணிகள் காக்பிட்டுக்குள் சென்று தாக்குதல் நடத்திய துணைப் பைலட்டைக் கட்டுப்படுத்தினர்.

பாதுகாப்பான தரையிறக்கம்

விமானத்தில் பயணம் செய்த பணியில் இல்லாத இரண்டு ஃப்ளைதுபாய் பைலட்டுகள் பின்னர் காக்பிட்டின் கட்டுப்பாட்டை ஏற்றுக்கொண்டனர். இதையடுத்து, சவுதி அரேபியாவின் தபூக் நகருக்குத் திசைதிருப்பப்பட்ட விமானம் பாதுகாப்பாகத் தரையிறக்கப்பட்டது.

இந்த சம்பவத்துக்குப் பிறகு இந்தியப் பிரதமர் மோடி உள்ளிட்ட பலரும் ஸ்மித்தின் துணிச்சலைப் பாராட்டினர். ஐக்கிய அரபு அமீரகத்திலும் அவருக்குப் பாராட்டுகள் குவிந்தன. விமானத்தில் ஏற்பட்ட ஆபத்தான சூழலில், தனது உயிரைப் பற்றிக்கூட கவலைப்படாமல் பயணிகளைக் காப்பாற்றிய ஸ்மித் மச்சாரின் துணிச்சல், இப்போது இந்தியாவைக் கடந்து சர்வதேச அளவில் கவனம் பெற்றுள்ளது.

கல்வி உதவித்தொகை வழங்குவதாக மாணவர்களிடம் சைபர் மோசடி - வேலூரில் இவ்வளவு புகார்களா?

வேலூர் மாவட்டத்தில், பள்ளி - கல்லூரி மாணவா்கள் மற்றும் அவா்களின் பெற்றோர்களைக் குறி வைத்து அடையாளம் தெரியாத மர்ம நபா்கள் செல்போன் மூலம் தொடா்பு கொண்டு ``அரசு சாா்பில் கல்வி உதவித்தொகை வழங்கப்பட உள்ளது... மேலும் பார்க்க

மின் கசிவுக்கு 2 குழந்தைகள் பலி: ``6 மாதத்துக்கு முன்பே புகார் அளித்தும்..." - சீமான் காட்டம்

அச்சங்குளம் கிராமத்தைச் சேர்ந்த மோகன்–லதா தம்பதியின் 10 வயது மகள் நிறைமதி மற்றும் 6 வயது மகன் பால பிரவீன், செப்டம்பர் 30-ம் தேதி காலை குடிநீர் சுத்திகரிப்பு நிலையம் அருகே விளையாடிக் கொண்டிருந்தபோது மி... மேலும் பார்க்க

`தெருக்கோடியில் இருக்கிறது கட்சி!’ - அதிமுகவில் அடுத்த விக்கெட்; தவெகவுக்குத் தாவிய முன்னாள் எம்எல்ஏ

கடலூர் மாவட்டம், காட்டுமன்னார்கோயில் சட்டமன்றத் தொகுதியில் கடந்த 2011, 2016 தேர்தல்களில் அ.தி.மு.க சார்பில் வெற்றிபெற்று எம்.எல்.ஏவாக இருந்த முருகுமாறன், அக்கட்சியின் அமைப்புச் செயலாளராகவும் இருந்தவர்... மேலும் பார்க்க

தூத்துக்குடி: வல்லநாடு ஆற்றுப் பாலத்தில் 21வது முறையாக விழுந்த ஓட்டை; சீரமைப்பு பணிகளில் மெத்தனம்!

நெல்லையில் இருந்து தூத்துக்குடி வரை 47 கி.மீ தூரத்திற்கு நான்கு வழிச்சாலை அமைக்கப்பட்டு கடந்த 20.11.2012 அன்று போக்குவரத்து தொடங்கியது. வல்லநாடு தாமிரபரணி ஆற்றங்கரையின் குறுக்கே 400 மீட்டர் தொலைவில் ப... மேலும் பார்க்க

"தோத்தாங்குளி கட்சிகள்தான் தங்கள் தோல்விக்கு SIR-ஐ காரணம் சொல்கின்றன" - நடிகை கஸ்தூரி கிண்டல்

இடைத்தேர்தல் பிரசாரம் உச்சம் எட்டி வருகிறது. இந்த நிலையில் தமிழக அரசியல் சூழல்கள் குறித்தான கேள்விகளை பா.ஜ.க-வைச் சேர்ந்த நடிகை கஸ்தூரி முன்வைத்தோம்..."விஜய் தலைமையிலான த.வெ.க ஆட்சி எப்படியிருக்கிறது?... மேலும் பார்க்க

"கூட்டணி அந்தந்த அரசியல் சூழ்நிலைக்கு தக்கவாறு மாறுபடும்"- எடப்பாடி பழனிசாமி கூறியதென்ன?

மதுராந்தகம் தொகுதியில் அதிமுக சார்பில் போட்டியிடும் கனிதா சம்பத்தை ஆதரித்து அதிமுக பொதுச் செயலாளரும் முன்னாள் முதல்வருமான எடப்பாடி பழனிசாமி நேற்று (அக்.3) தேர்தல் பரப்புரை மேற்கொண்டார். அப்போது பேசிய ... மேலும் பார்க்க