செய்திகள் :

நெல்லை: விஜய் முதல்வராவதில் ஏற்பட்ட இழுபறி; விரக்தியில் தீக்குளித்த தவெக நிர்வாகி உயிரிழந்த பரிதாபம்

post image

தமிழக சட்டமன்றத் தேர்தல் முடிவுகள் கடந்த 4-ம் தேதி வெளியாகின. இதில் எந்தக் கட்சிக்கும் அறுதிப் பெரும்பான்மை கிடைக்கவில்லை. 108 தொகுதிகளைக் கைப்பற்றிய போதிலும், த.வெ.க தலைவர் விஜய் ஆட்சி அமைப்பதில் இழுபறி நீடித்து வந்தது. இதனால் த.வெ.க நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் சோகத்தில் ஆழ்ந்தனர்.

உயிரிழந்த இச்சக்கியப்பன்

இதனிடையே நெல்லை மாவட்டம், வள்ளியூர் அருகே உள்ள  புதுமனை செட்டிகுளத்தைச் சேர்ந்த த.வெ.க தொண்டரணி அமைப்பாளர் இசக்கியப்பன், விஜய் ஆட்சி அமைக்க முடியாததால் விரக்தியில் இருந்ததாகக் கூறப்படுகிறது. இதனால், மன  உளைச்சலில் இருந்த இசக்கியப்பன், கடந்த 9-ம் தேதி காலை மகாராஜபுரம் சந்திப்பில் தன் உடலில் மண்ணெண்ணெய் ஊற்றி தீ வைத்துக் கொண்டார்.

அவரது அலறல் சத்தம் கேட்டு ஓடி வந்த அக்கம்பக்கத்தினர், சுமார் 90 சதவிகித தீக்காயங்களுடன் அவரை மீட்டு நாகர்கோவில்- ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். இது குறித்து பழவூர் காவல் நிலைய போலீஸார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

பழவூர் காவல் நிலையம்

இதனிடையே சிகிச்சை பலனின்றி இசக்கியப்பன் நேற்று உயிரிழந்தார். கடந்த நான்கு மாதங்களுக்கு முன்பு விஜய் முதல்வராக வேண்டி 16 அடி வேல் எடுத்து அலகு குத்திக்கொண்டு திருச்செந்தூருக்கு பாதயாத்திரையாக நடந்து சென்றார் என்பது குறிப்பிடத்தக்கது. இச்சம்பவம் தமிழக வெற்றிக் கழகத் தொண்டர்களிடையே பெரும் அதிர்ச்சியையும் சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

நாட்டில் குற்றச் சம்பவங்களின் சதவிகிதம் குறைந்தாலும் சிறார்களுக்கு எதிரான குற்றங்கள் அதிகரிப்பு!

தேசிய குற்ற ஆவண காப்பக தரவவுகளின் அடிப்படையில் குழந்தைகள் உரிமை அமைப்பான 'க்ரை' (CRY) வெளியிட்டுள்ள அறிக்கையில், "நாட்டில் ஒட்டுமொத்த குற்றச்சம்பவஙகளின் எண்ணிக்கை 10.8 சதவிகிதம் குறைந்துள்ளது. கடந்த 2... மேலும் பார்க்க

கிருஷ்ணகிரி: எரிந்த நிலையில் ராணுவ வீரர், அவர் தந்தை உடல்கள் - திருமணம் மீறிய உறவால் நடந்த பயங்கரம்

கிருஷ்ணகிரி அருகே இருவர் எரித்து கொலை செய்யப்பட்ட சம்பவம் மக்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்திய நிலையில், கொலையானது ராணுவ வீரரும் அவர் தந்தை என்பதும், திருமணம் மீறிய விவகாரத்தால் இக்கொலை நடந்துள்ளத... மேலும் பார்க்க

NEET : 30 நிமிடத்தில் கைமாறிய வினாத்தாள்:ரூ.10 லட்சத்துக்கு வாங்கி ரூ.15 லட்சத்தில் விற்ற மாணவர்

நாடு முழுவதும் மருத்துவ படிப்புக்காக நடத்தப்பட்ட நீட் நுழைவுத்தேர்வுக்கான வினாத்தாள் தேர்வுக்கு முன்பே கசிந்ததை தொடர்ந்து ஒட்டுமொத்த தேர்வும் ரத்து செய்யப்பட்டுள்ளது. இதனால் ஆண்டு முழுவதும் படித்த மாண... மேலும் பார்க்க

போனுக்கு வந்த திருமண அழைப்பிதழ்; 5 லட்சத்தை இழந்த நபர்- புது வகை மோசடியிலிருந்து தப்பிப்பது எப்படி?

பெங்களூருவைச் சேர்ந்த நூர் நஹித் கான் என்ற 42 வயது தொழிலதிபரின் வாட்ஸ்அப் எண்ணுக்கு ஒரு குறுஞ்செய்தி வந்தது. அதில், "எங்கள் திருமணத்திற்கு உங்களை அன்புடன் அழைக்கிறோம். முழுமையான விவரங்களுக்குக் கீழே இ... மேலும் பார்க்க

மது போதையில் ஆம்னி பேருந்துகளை இயக்கிய டிரைவர்கள்; காட்டிக்கொடுத்த மூச்சு பரிசோதனை கருவி!

தூத்துக்குடி நகர போக்குவரத்துப் பிரிவு ஆய்வாளர் வில்லியம் பெஞ்சமின் தலைமையில் போலீஸார் தூத்துக்குடி புதிய பேருந்து நிலையம் முன்பு இரவில் வாகனச் சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது தூத்துக்குடியில் இரு... மேலும் பார்க்க

"அவர் பக்கத்திலேயே என்னையும் அடக்கம் செய்யுங்கள்" - காதலன் இறந்ததால் பெண் எடுத்த விபரீத முடிவு

கேரளம் மாநிலம் காசர்கோடு மாவட்டம் கும்பளா அருகே உள்ள கிதூர் குண்டங்கேரடுக்கை பகுதியைச் சேர்ந்த ஜெயானந்தன் - தேவி தம்பதியினரின் மகள் பிரபுல்லா (26). பாலக்காட்டில் உள்ள தனியார் நிதி நிறுவனத்தில் ஊழியராக... மேலும் பார்க்க