செய்திகள் :

'நோ' அணுசக்தி டு ஃப்ரீ ஆகும் ஈரான் சொத்துகள்: அமெரிக்கா, ஈரான் MoU-ன் 14 புள்ளிகள்? | Simplified

post image

நேற்று (ஜூன் 17) ஈரான், அமெரிக்கா இடையே புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தாகியுள்ளது.

அந்தப் புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் இடம்பெற்றுள்ள 14 புள்ளிகளாக அமெரிக்கா வெளியிட்டுள்ளவை... (புள்ளிகள் எளிமையாக்கப்பட்டிருக்கிறது)

1. அமெரிக்கா, ஈரான் மற்றும் அவற்றின் கூட்டாளிகள் லெபனான் உட்பட அனைத்து முனைகளிலும் போரை உடனடியாக நிறுத்தவும், இனி மோதலில் ஈடுபடாமல் லெபனானின் இறையாண்மையைப் பாதுகாக்கவும் இந்த ஒப்பந்தம் மூலம் உறுதியளிக்கப்படுகிறது.

ஈரான் போர்
ஈரான் போர்

2. அமெரிக்காவும் ஈரானும் பரஸ்பரம் ஒருவருக்கொருவர் நாட்டின் எல்லையையும் இறையாண்மையையும் மதிக்க வேண்டும்; எந்தச் சூழலிலும் அடுத்த நாட்டின் உள்விவகாரங்களில் தலையிடக் கூடாது என ஒப்புக்கொள்ளப்படுகின்றன.

3. இரு நாடுகளும் அடுத்த 60 நாட்களுக்குள் இறுதி ஒப்பந்தத்தை பேச்சுவார்த்தை மூலம் முடிக்க வேண்டும். தேவைப்பட்டால், இரு தரப்பு சம்மதத்துடன் இந்தக் கால அவகாசத்தை நீட்டித்துக் கொள்ளலாம்.

4. ஒப்பந்தத்திற்குப் பின் அமெரிக்கா தன் கடல் முற்றுகையை 30 நாள்களுக்குள் நீக்கும். இடைப்பட்ட காலத்தில் கப்பல் போக்குவரத்து நடக்கும். ஒப்பந்தம் முடிந்த 30 நாட்களுக்குள் எல்லையிலிருந்து அமெரிக்க படைகள் விலகும்.

5. பாரசீக வளைகுடாவில் வணிகக் கப்பல்கள் 60 நாட்களுக்குக் கட்டணமின்றி பாதுகாப்பாகச் செல்ல ஈரான் வழிவகை செய்யும். மேலும், ஹார்முஸ் நீர்ச்சந்தி நிர்வாகம் குறித்து ஓமனுடன் ஈரான் சர்வதேச விதிப்படி பேச்சுவார்த்தை நடத்தும்.

6. ஈரானின் பொருளாதார வளர்ச்சிக்கு 300 பில்லியன் டாலர் மதிப்பிலான கூட்டுத் திட்டத்தை அமெரிக்கா உருவாக்கும். இதற்கான வழிமுறைகள் 60 நாட்களுக்குள் முடிவாகி, தேவையான நிதிப் பரிவர்த்தனை அனுமதிகளை அமெரிக்கா வழங்கும்.

7. ஐ.நா மற்றும் அமெரிக்காவின் அனைத்து ஒருதலைப்பட்சத் தடைகளும் இறுதி ஒப்பந்தப்படி நீக்கப்படும். இந்தத் தடை நீக்க விவகாரம் மிகவும் முக்கியமானது என்பதால், உடனடியாகப் பேச்சுவார்த்தை நடத்த இரு நாடுகளும் சம்மதிக்கின்றன.

ஹார்முஸ் நீர்ச்சந்தி
ஹார்முஸ் நீர்ச்சந்தி

8. ஈரான் அணு ஆயுதம் தயாரிக்காது. தன் செறிவூட்டப்பட்ட பொருட்களை ஐநா (IAEA) மேற்பார்வையில் தரம் குறைக்கும். ஈரானின் அணுசக்தித் தேவைகள் குறித்த திருப்திகரமான கட்டமைப்பு இறுதி ஒப்பந்தத்தில் பேசி முடிவெடுக்கப்படும்.

9. இறுதி ஒப்பந்தம் நடக்கும் வரை தற்போதைய நிலையே தொடரும். ஈரான் தன் அணுசக்தி திட்டத்தை தற்போதைய நிலையிலேயே வைத்திருக்கும்; அமெரிக்கா புதிய தடைகளையோ அல்லது கூடுதல் படைகளையோ பிராந்தியத்தில் நிறுத்தாது.

10. ஒப்பந்தம் கையெழுத்தான உடனே, ஈரானிய கச்சா எண்ணெய் மற்றும் பெட்ரோலிய பொருட்கள் ஏற்றுமதி, அதற்கான வங்கி மற்றும் காப்பீட்டுச் சேவைகளுக்கு அமெரிக்க கருவூலத் துறை தற்காலிகத் தளர்வு உரிமங்களை வழங்கும்.

11. ஈரானின் முடக்கப்பட்ட நிதியை அமெரிக்கா உடனடியாக விடுவிக்கும். இந்த நிதியை ஈரான் மத்திய வங்கி குறிப்பிடும் பயனாளருக்கு எவ்வித தடையுமின்றி மாற்றுவதற்கான அனைத்து அனுமதிகளையும் அமெரிக்கா முழுமையாக வழங்கும்.

ட்ரம்ப் - ஷெபாஸ் ஷெரீப் - மொஜ்தபா காமேனி
ட்ரம்ப் - ஷெபாஸ் ஷெரீப் - மொஜ்தபா காமேனி

12. இந்த தற்காலிகப் புரிந்துணர்வு ஒப்பந்தம் மற்றும் எதிர்காலத்தில் வரவிருக்கும் இறுதி ஒப்பந்தம் ஆகியவற்றை இரு நாடுகளும் சரியாகச் செயல்படுத்துகின்றனவா என்பதைக் கண்காணிக்க ஒரு கூட்டுக் கண்காணிப்பு வழிமுறை உருவாக்கப்படும்.

13. இந்த ஒப்பந்தத்தின் குறிப்பிட்ட முக்கியப் பிரிவுகள் (1, 4, 5, 10, 11) முழுமையாகச் செயல்படத் தொடங்கிய பின்னரே, மீதமுள்ள இதர விவகாரங்கள் குறித்து இரு நாடுகளும் இறுதி ஒப்பந்தத்திற்கான பேச்சுவார்த்தையைத் தொடங்கும்.

14. இரு நாடுகளும் பேசி முடிக்கவிருக்கும் இறுதி ஒப்பந்தமானது, சர்வதேச அளவில் சட்டப்பூர்வமாகச் செல்லுபடியாகும் வகையில் ஐக்கிய நாடுகள் பாதுகாப்புச் சபையின் (UNSC) பிணைப்புக்குரிய அதிகாரப்பூர்வ தீர்மானத்தின் மூலம் அங்கீகரிக்கப்படும்.

`மேகதாது அணை, தமிழ்நாடு கடன், சாதிவாரி கணக்கெடுப்பு, கனிமவளம்.!' - அர்லேகர் உரையின் ஹைலைட்ஸ்!

தவெக ஆட்சி பொறுப்பேற்றதும் கூடும் முதல் தமிழ்நாடு சட்டமன்றக் கூட்டத்தொடர் இது. வழக்கப்படி, ஆளுநரின் உரையுடன் தான் முதல் கூட்டத்தொடர் தொடங்கும். இன்று கூட்டத்தொடர் ஆளுநர் அர்லேகரின் உரையுடன் தான் தொடங்... மேலும் பார்க்க

அமெரிக்கா - இரான் போர் : வரைவு ஒப்பந்தம் முழுமையான அமைதிக்கு இட்டுச்செல்லுமா? | மணிவண்ணன் திருமலை

மேனாள் ஆசிரியர், பிபிசி உலக சேவை, லண்டன்மணிவண்ணன் திருமலைஅமெரிக்காவுக்கும் இரானுக்கும் இடையே நடந்த மூன்று மாதப் போர் ஒரு வழியாக முடிவுக்கு வரும் அறிகுறிகள் தென்படத் தொடங்கி விட்டன. கடந்த ஒரு மாதமாக நட... மேலும் பார்க்க

அமைதிகாக்கும் உத்தவ் கட்சி அதிருப்தி எம்.பி.க்கள் - இன்றைய கூட்டத்தில் பங்கேற்பார்களா?

மகாராஷ்டிராவில் சிவசேனா(உத்தவ்) கட்சியில் எம்.பி.க்களிடையே பிளவு ஏற்பட்டுள்ளது. உத்தவ் தாக்கரே கட்சியை சேர்ந்த சேர்ந்த 6 மக்களவை உறுப்பினர்கள் தங்களை ஒரு தனிப் பிரிவாக அங்கீகரிக்கக் கோரி நேற்று மக்களவ... மேலும் பார்க்க

தாக்கரே கட்சியில் `பிளவு 2.0' தனிஅணியாக அங்கீகரிக்க சபாநாயகரிடம் உத்தவ் கட்சி எம்.பி.க்கள் மனு!

மகாராஷ்டிரா சிவசேனாவில் 2022-ம் ஆண்டு ஏற்பட்ட பிளவுக்கு பிறகு உத்தவ் தாக்கரே தனி கட்சி மற்றும் தனி சின்னத்துடன் செயல்பட்டு வருகிறார். ஆனாலும் தற்போது சிவசேனாவின் பெயர் மற்றும் சின்னத்தை தன் வசம் வைத்த... மேலும் பார்க்க

தேர்தல் பிரசாரத்தில் `ப்ரோ', `அங்கிள்' என்று பேசிய விஜய் எங்கே? - நயினார் நாகேந்திரன் காட்டம்

நெல்லையில் செய்தியாளர்களை சந்தித்த தமிழக பா.ஜ.க தலைவர் நயினார் நாகேந்திரன், “விஜய் தலைமையிலான ஆட்சி அமைந்து 30 நாட்களுக்கும் மேல் ஆகிவிட்டது. தமிழகத்தில் கடந்த ஒரு வாரத்தில் மட்டும் 40 வன்கொடுமை சம்பவ... மேலும் பார்க்க

தமிழ்த்தாய் வாழ்த்தோடு தொடங்கிய சட்டமன்றக் கூட்டத்தொடர்!

தவெக ஆட்சியின் முதல் சட்டமன்றக் கூட்டத்தொடர் இது என்பதைத் தாண்டி, இன்றைய சட்டமன்றம் மிகவும் கவனமாகக் கவனிக்கப்படக் காரணம் — தமிழ்த்தாய் வாழ்த்து.தமிழ்நாட்டின் வழக்கப்படி, தமிழ்நாடு அரசு நிகழ்வுகளில் ம... மேலும் பார்க்க