செய்திகள் :

`பச்சைக்கிளி முத்துச்சரம்' பாடல் புகழ் நடிகை தற்கொலை... துப்பாக்கியால் சுட்டுக்கொண்டு விபரீத முடிவு!

post image

பச்சைக்கிளி முத்துச்சரம் முல்லைக்கொடி...

உலகம் சுற்றும் வாலிபன் படத்தில் இடம்பெறும் இந்தப் பாடல் எண்பதுகளில் பட்டித் தொட்டி எங்கும் பட்டையைக் கிளப்பியது நினைவிருக்கலாம்.

இந்தப் பாடல் காட்சியில் எம்.ஜி.ஆர்., உடன் ஆடிய நடிகை மெட்டா ரூங்ராட். தாய்லாந்தைச் சேர்ந்த இவர், அங்கு பிரபலமான நடிகை. சுமார் 200 படங்களில் நடித்துள்ளார்.

மெட்டா

தாய்லாந்தின் தங்க விருது உள்ளிட்ட பல விருதுகளைப் பெற்றவர்.

ஹாலிவுட் படங்களிலும் நடித்துள்ள இவரை, உலகம் சுற்றும் வாலிபன் படத்தில் நடிக்க வைத்தார் எம்.ஜி.ஆர்.

படத்தின் படப்பிடிப்பு தாய்லாந்தில் நடந்ததையடுத்து அங்கு புகழ் பெற்ற நடிகையாக இருக்கும் ஒருவர் படத்திலிருந்தால் நன்றாக இருக்குமென நினைத்து அவரை கமிட் செய்தாராம் எம்.ஜி.ஆர்.

எம்.ஜி.ஆர் வாழ்க்கையில் மிகப்பெரிய திருப்புமுனையை உண்டாக்கிய இந்தப் படத்தில் பாடல் காட்சியில் எம்.ஜி.ஆரை `கனவு நாயகனாக' நினைத்தபடி நடனம் ஆடுவார் மெட்டா.

உலகம் சுற்றும் வாலிபன்…!

தற்போது 83 வயதான மெட்டா தாய்லாந்தில் வசித்து வந்த நிலையில், கடந்த சில வருடங்களாகப் பல்வேறு உடல்நலப் பிரச்னைகளால் அவதிப்பட்டு வந்ததாகக் கூறப்படுகிறது.

சிகிச்சைகள் எடுத்து வந்தபோதும் பிரச்னைகள் தீராததால், மனம் நொந்தவராய் துப்பாக்கியால் சுட்டுத் தற்கொலை செய்து கொண்டதாகத் தெரிய வருகிறது.

தாய்லாந்து போலீஸார் மெட்டாவின் மரணம் குறித்து விசாரித்து வருகின்றனர்.

Arasan Promo: தீபாவளிக்கு வெளியாக வேண்டிய முன்னோட்ட வீடியோ தள்ளிப்போகிறதா? காரணம் இதுதான்!

கடந்த ஒருசில வாரத்திற்கு முன்னர், சிலம்பரசன் ரசிகர்களுக்கு தீபாவளிக்கு விருந்து காத்திருக்கிறது என்றும், தீபாவளி அன்று 'அரசன்' முன்னோட்ட வீடியோவான `The World of Arasan' என்ற வெளியாகவிருக்கிறது என்றும்... மேலும் பார்க்க

"'நூறு சாமி'-ஐ 'பூ' படம் போல பேசப்படும் படமாக மாற்றி இருக்க முடியும்; ஆனால்.."- இயக்குநர் சசி பேட்டி

இயக்குநர் சசி இயக்கத்தில் உருவாகியிருக்கிற '100 கோடி வானவில்' திரைப்படம், நாளை நேரடியாக 'ஜீ5' ஓடிடி தளத்தில் வெளியாகிறது. இது சில வருடங்களுக்கு முன்பே எடுத்து முடிக்கப்பட்ட திரைப்படம். ஆனால், ரிலீஸில்... மேலும் பார்க்க

Scene: "மூன்று படங்களில் சூர்யா சாருடன் பணியாற்றும் வாய்ப்பை மிஸ் செய்துவிட்டேன்; ஆனால்..."- நஸ்ரியா

கருப்பு, விஸ்வநாத் & சன்ஸ் என இரண்டு ஹிட் படங்களைக் கொடுத்ததற்குப் பிறகு சூர்யா நடிப்பில் உருவாகியிருக்கும் புதிய திரைப்படம் 'சீன்' (Scene). சூர்யாவின் 47வது திரைப்படமான இப்படத்தை 'ரோமஞ்சம்', 'ஆவே... மேலும் பார்க்க

மூக்குத்தி அம்மன் 2: "20 நிமிஷ க்ளைமாக்ஸிற்காக 1 வருடம் வேலை பார்த்திருக்கிறோம்" - சுந்தர்.சி

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு நாளை (அக்.6) 'மூக்குத்தி அம்மன்- 2' படம் வெளியாக இருக்கிறது. சுந்தர்.சி இயக்கியிருக்கும் இந்தப் படத்தில் நயன்தாரா, ரெஜினா கசாண்ட்ரா, அபிநயா, ஊர்வசி, யோகிபாபு, மைனா நந்தினி... மேலும் பார்க்க

Exclusive: 6 ஏக்கரில் பிரமாண்ட வீடு; இணையும் நடிகர்கள்... `கார்த்தி 30', `மார்ஷல்' Shoot Update!

படத்திற்கு படம் வித்தியாசமான ஜானர்களில் நடித்து வரும் கார்த்தி, அடுத்தும் ஆச்சர்யங்கள் கொடுக்க காத்திருக்கிறார். அண்ணன் சூர்யாவைத் தொடர்ந்து கார்த்தியும் நேரடி தெலுங்கில் கால் பதித்திருக்கிறார்.. 'விஸ... மேலும் பார்க்க

``'பத்தா' படத்தை இரண்டாவது முறையாகப் பார்த்து ரொம்பவே அழுதேன்..!" - அனுராக் காஷ்யப்

விஜய் சேதுபதி நடிப்பில், பாலாஜி தரணிதரன் இயக்கத்தில் வெளியானப் படம் 'பத்தா'. மக்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்ற இந்தத் திரைப்படம், நெட்ஃப்ளிக்ஸ் ஓடிடி-யில் வெளியாகி இருக்கிறது. இந்தப் படத்தில் லிஜோ மோல்... மேலும் பார்க்க