செய்திகள் :

பட்டம் விடும் திருவிழா: ECR வானில் பிரமாண்ட வர்ணஜாலம் நிகழ்த்தும் ஆயிரக்கணக்கான பட்டங்கள்!

post image

செங்கல்பட்டு மாவட்டம், கிழக்கு கடற்கறை சாலையில் அமைந்துள்ள தமிழ்நாடு சுற்றுலாத்துறை வளாகத்தில் பல்வேறு நாட்டு காத்தாடிகளும், நம் இந்திய நாட்டு காத்தாடிகளும், தமிழக கலாசாரத்தை சிறப்பிக்கும் காத்தாடிகளும் வானத்தை வர்ண ஜாலமாக்குகின்றன.

தமிழ்நாடு சுற்றுலாத் துறை மற்றும் குளோபல் மீடியா பாக்ஸ் நிறுவனம் இணைந்து நடத்தும் 5 வது தமிழ்நாடு சர்வதேச பட்டத் திருவிழா ஆகஸ்ட் 14,15,16 ஆகிய தேதிகளில் மாலை 3.00 மணிமுதல் 7.00 மணிவரை நடைபெறுகிறது. இது குறித்து குளோபல் மீடியா பாக்ஸ் நிறுவனர் பென்னடிக்ட் சேவியோ,

``தமிழ்நாடு சுற்றுலாத்துறையுடன் இணைந்து வருடா வருடம் இந்த விழாவை நடத்தி வருகிறோம். இந்த நிகழ்வுக்கு இந்தியா, தாய்லாந்து, வியட்நாம், சிங்கப்பூர், மலேசியா மற்றும் இந்தோனேசியா போன்ற நாடுகளில் இருத்து 40 குழுக்கள் வந்து உள்ளனர். தினமும் 200 பட்டங்கள் இந்த 40 குழுக்களாலும் பறக்க வைக்கப்படுகின்றன.

தமிழ்நாடு குழு சார்பில் பொய்க்கால் குதிரை, ஜல்லிக்கட்டு காளை, இந்தியா தேசிய கொடி போன்றவற்றை பட்டங்களாக பறக்கவத்து உள்ளோம். சென்ற வருடம் தமிழ் கலாசாரத்தை பறைசாற்றும் விதமாக ஜல்லிக்கட்டு காளை போன்ற அமைப்பு கொண்ட பட்டத்தினை பறக்க வைத்தோம். இந்த வருடம் உலக அமைதி என்ற கருத்தியல் கொண்ட பட்டத்தினை பறக்க வைத்தோம்.

பட்டங்கள் இரண்டு வகைப்படும்: அவை காட்சிப் பட்டங்கள் (Show kites) மற்றும் அரபிக் பட்டங்கள் (Arabic kites) ஆகும். இந்த பட்டங்கள் நாம் காகிதத்தில் செய்யும் பட்டங்கள் போன்ற சாதாரண பட்டங்கள் அல்ல: இவை நோமேக்ஸ் (Nomex) என்னும் பாராசூட் செய்யும் துணியில் செய்யப்படுகிறது. இந்த பட்டங்கள் அனைத்தும் இங்கு வடிவமைக்கப்பட்டு வியட்நாம், ஹாங்காங் போன்ற நாடுகளில் தயாரிக்கப்படுகிறது. இந்த பட்டங்கள் ஒவ்வொன்றும் அதன் அளவைப் பொறுத்து 3 லட்சங்கள் முதல் 10 லட்சங்கள் வரை வருகிறது.

இந்த காட்சிப் பட்டங்கள் (show kites) அனைத்தும் விமானி பட்டங்கள் (Pilot kites) என்ற பட்டங்களின் கயிற்றுச்சரங்களில் பொம்மை பட்டங்களை அதில் பறக்க விடுவோம். இரவில் ஒளிரக்கூடிய பட்டங்களும் உள்ளன. அது இல்லாமல் ஒளி விளக்குகள் பொருத்திய பட்டங்களும் மக்களின் காட்சிக்காக வைக்கப்படுகின்றன.

இது போன்ற பட்டத்திருவிழாவை மக்கள் வெளிநாடு சென்றுதான் பார்க்கமுடியும் என்று இருந்ததை, இந்தப் பட்டத்திருவிழா மூலம் நாங்கள் மாற்றி மக்கள் தமிழகத்திலும் காணலாம் என்பதை மகிழ்ச்சியாக உள்ளது.

இந்த திருவிழாவை அனைத்து கடலோர மாவட்டத்திலும் உள்ள கடற்கரைகளில் நிகழ்த்தும் போது நமது தமிழ்நாடு சுற்றுலாத்துறை இன்னும் உத்வேகத்துடன் வளர்ச்சி பெறும். எனவே இதனை கருத்தில் கொண்டு மற்ற கடலேர மாவட்டங்களிலும் இந்த பட்டத்திருவிழாவை நடத்த வேண்டும்” என்று கூறினார்.

இன்று மாலையுடன் இந்த பட்டத்திருவிழா நிறைவு பெற உள்ளது, எனவே அனைவரும் தவறாது கோணமில்லா வானத்தில் பலகோணத்தில் வர்ணஜாலமிடும் பட்டங்களை காணச்செல்வோமா?

தி.,காங்கிரஸ் அலுவலகத்தில் தற்கொலை செய்துகொண்ட முன்னாள் துணை சபாநாயகர் - மேற்கு வங்கத்தில் அதிர்ச்சி

மேற்கு வங்கத்தில் மம்தா பானர்ஜி முதல்வராக இருந்தபோது துணை சபாநாயகராக பணியாற்றியவர் ஆசிஷ் பானர்ஜி. ராம்பூர்ஹாட்டில் இருந்து ஐந்து முறை எம்எல்ஏ-வாக இருந்தவர். கடந்த முறை நடந்த சட்டமன்றத் தேர்தலில் தோல்வ... மேலும் பார்க்க

தடை செய்யப்பட்ட பான் மசாலாவிற்கு விளம்பரம்: நடிகர் ஷாருக் கான், அஜய் தேவ்கனுக்கு நோட்டீஸ்!

மகாராஷ்டிராவில் பான் மசாலாவிற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. ஆனால் பாலிவுட் நடிகர் அஜய் தேவ்கன் மற்றும் நடிகர் ஷாருக் கான் ஆகியோர் விமல் எலைச்சி எனப்படும் ஒருவகை பான் மசாலாவிற்கு தொடர்ந்து விளம்பரம் செய்... மேலும் பார்க்க

மனைவியுடன் ஏற்பட்ட வாக்குவாதத்தில் விபரீதம்: செல்ஃபி எடுப்பதாகக் கூறி, மகளை ஆற்றில் வீசிய தந்தை!

உத்தரப்பிரதேச மாநிலம் ஆக்ரா அருகில் உள்ள கிராமத்தில் வசிப்பவர் ரிங்கு. இவரது மனைவி லட்சுமி. இவர்களுக்கு ஒரு வயதில் ஒரு மகள் இருக்கிறாள். கணவன் மனைவி ஆகிய இரண்டு பேரும் தங்களது மகளுடன் ஆக்ராவை சுற்றிப்... மேலும் பார்க்க

ஆட்டை தேடிவந்த மலை பாம்பு; பிடித்து கழுத்தில் மாலையாக போட்டுக்கொண்டு போதையில் விளையாடிய மதுப்பிரியர்

உத்தரப்பிரதேச மாநிலத்தின் பாரபங்கி என்ற இடத்தில் 15 அடி நீளமுள்ள பெரிய பாம்பு ஒன்று அங்கிருந்த இறைச்சிக்கடைக்குள் நுழைந்தது. அந்த பாம்பு அங்கு நின்று கொண்டிருந்த ஆடு ஒன்றை கடித்து விழுங்குவதற்காக ஆட்ட... மேலும் பார்க்க

` திருமணம் ஆகாத இளைஞர்கள் மது குடிக்க தடை; மீறினால் அபராதம்' - நல்வழிப்படுத்தும் முன்மாதிரி கிராமம்

இன்றைய இளைஞர்களில் பெரும்பாலானவர்கள் மதுக்குடிக்கும் பழக்கத்திற்கு ஆளாகின்றனர். இதனால் அவர்களது வாழ்க்கை வளர்ச்சியடையாமல் பாதிப்பை சந்திக்கிறது. பலரது வாழ்க்கை மதுப்பழக்கத்தால் சீரழிகிறது. இப்போதுள்ள ... மேலும் பார்க்க

வீரர்கள் தற்கொலை முயற்சி; ஆபிரகாம் லிங்கனுக்கு ஓய்வு கொடுக்க வரும் ஜார்ஜ் வாஷிங்டன் போர்க்கப்பல்!

ஈரான் மீது அமெரிக்காவும், இஸ்ரேலும் கடந்த பிப்ரவரி இறுதியில் தாக்குதல் நடத்த தொடங்கின. இத்தாக்குதல் தொடங்கிய நாளில் இருந்து அமெரிக்காவின் அதிகமான போர்க்கப்பல்கள் மத்திய கிழக்கு ஆசிய பகுதியில் நிறுத்தி... மேலும் பார்க்க