செய்திகள் :

"பதற்றமடையும் சமயங்களில் என்னை அமைதிப்படுத்துவது அவர்தான்" - கணவர் விக்கி கெளஷல் பற்றி கத்ரீனா கைஃப்

post image

பாலிவுட் நடிகை கத்ரீனா கைஃப், தனது கணவர் விக்கி கௌஷல் தனக்கு அளிக்கும் ஆதரவு குறித்தும், தாய்மை மற்றும் நடிப்பு குறித்தும் சமீபத்திய பேட்டியில் பகிர்ந்திருக்கிறார்.

Vicky Kaushal - Katrina Kaif
Vicky Kaushal - Katrina Kaif

2021-ம் ஆண்டு டிசம்பரில் திருமணம் செய்துகொண்ட கத்ரீனா கைஃப் - விக்கி கௌஷல் தம்பதிக்கு, 2025-ஆம் ஆண்டு நவம்பர் 7-ம் தேதி விஹான் என்ற ஆண் குழந்தை பிறந்தது.

கணவர் விக்கி கௌஷல் குறித்து கத்ரீனா கைஃப், "ஒரு தொழிலை நடத்தும்போது அதற்கு எனக் குறிப்பிட்ட நேர வரையறை இருப்பதில்லை. நாம் செய்யும் வேலையை உண்மையாகவே நேசிக்கும்போது, கடிகாரத்தைப் பார்ப்பதோ அல்லது வேலை நேரத்தைக் கணக்கிடுவதோ கிடையாது.

சில சமயங்களில் ஞாயிற்றுக்கிழமைகளில் கூட நாங்கள் வேலை தொடர்பாகப் பேசிக்கொண்டிருப்போம். ஆனால், வீட்டில் ஒருவர் மட்டும் என் நேரத்தைக் கணக்கிட்டுக்கொண்டே இருப்பார். அது என் கணவர்தான்.

எப்போதும் 'போனைக் கீழே வைத்துவிட்டுக் கொஞ்சம் ஓய்வெடு' என்று என்னிடம் சொல்லிக்கொண்டே இருப்பார்" என்றவர் தொடர்ந்து, "ஒரே நேரத்தில் திருமணம், தாய்மை மற்றும் பிசினஸ் எல்லாவற்றிலும் சிறந்து விளங்க வேண்டும் என்று எதிர்பார்க்கக் கூடாது.

Vicky Kaushal - Katrina Kaif
Vicky Kaushal - Katrina Kaif

நடிகையாக, தொழிலதிபராக, மனைவியாக, தாயாக என ஒவ்வொரு கதாபாத்திரத்திற்கும் பழகுவதற்கு நமக்கு நாமே போதிய கால அவகாசமும் இடமும் கொடுக்க வேண்டும்.

எல்லாவற்றையும் சமாளிக்க முடியாமல் திணறும் தருணங்களில், நம்மை நாமே கடிந்துகொள்ளாமல் கொஞ்சம் அன்பாக நடத்த வேண்டும். என் கணவர் விக்கி கௌஷல் எனக்கு மிகப்பெரிய ஆதரவாக இருக்கிறார். நான் பதற்றம் அடையும் சமயங்களில் என்னை அமைதிப்படுத்துவது அவர்தான்" எனப் பகிர்ந்திருக்கிறார்.

`என்பெயரில் இருப்பதால் எனக்குத்தான் சொந்தம்' - அமிதாப்பச்சன் இல்லத்துக்கு உரிமைகோரும் தம்பி மனைவி

மும்பை ஜுகு பகுதியில் பாலிவுட் நடிகர் அமிதாப்பச்சன் வசித்து வருகிறார். அவர் அங்குள்ள ஜல்சா பங்களாவில் வசித்து வருகிறார். அந்த வீடு அமிதாப்பச்சன் மனைவி ஜெயாபச்சன் பெயரில் இருக்கிறது. ஆனால் இந்த வீட்டிற... மேலும் பார்க்க

ராமாயணா: ``மூவுலகிலும் இனி ஒரே ஒரு ஆட்சிதான் நடக்கும், அது..." - யஷ்க்கு குரல் கொடுத்த நடிகர் ஷரத்!

நிதேஷ் திவாரி இயக்கத்தில் பிரம்மாண்டமாக உருவாகி திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கும் திரைப்படம் 'ராமாயணா'. திரைப்படத்தில், ராவணனாக நடித்துள்ள நடிகர் யஷ்ஷிற்கு இந்திப் பதிப்பில் குரல் கொடுத்... மேலும் பார்க்க

Kiara Advani: " 'டாக்சிக்' படத்திற்கு கிடைத்த விமர்சனங்கள் ஏமாற்றத்தை அளித்தன!" - கியாரா அத்வானி

கீது மோகன்தாஸ் இயக்கத்தில், நடிகர் யஷ் நடிப்பில் வெளியான 'டாக்ஸிக்' திரைப்படம் எதிர்மறையான விமர்சனங்களையே பெற்றிருந்தது. அந்தப் படத்தில் கியாரா அத்வானி நடித்திருந்தார். இந்தப் படத்தில் கியாரா அத்வானிய... மேலும் பார்க்க

"டைகர் ஷெராப்பிற்கு ஏற்பட்ட நிலைதான் உங்களுக்கும்"- ஆயுஷ்மான் குரானாவிற்கு பிஷ்னோய் கேங்க் மிரட்டலா?

பாலிவுட் பிரபலங்களுக்குச் சமீப காலமாக லாரன்ஸ் பிஷ்னோய் கூட்டத்தினர் தொடர்ந்து கொலை மிரட்டல் விடுத்து வருகிறது. சமீபத்தில் மும்பையில் நடிகர் டைகர் ஷெராப் மீது இக்கும்பல் துப்பாக்கிச்சூடு நடத்தியது. இதி... மேலும் பார்க்க

Ranbir Kapoor: "நடிப்பை விட்டு விலகுகிறேனா!?" - தெளிவுபடுத்திய ரன்பீர் கபூர்

நடிகர் ரன்பீர் கபூர் நடித்த 'ராமாயணா' திரைப்படம் திரையரங்குகளில் வெளியாகி நல்ல வரவேற்பைப் பெற்று வருகிறது. நிதேஷ் திவாரி இயக்கியிருக்கும் இந்தப் படத்தில் சீதையாக சாய் பல்லவியும், ராவணனாக யஷ்ஷும் நடித்... மேலும் பார்க்க

ராமாயணா: `சாய் பல்லவியின் சண்டை காட்சி' - முன்னாள் சீதை நடிகை தீபிகா சிக்லியா சொல்வது என்ன?

1987-ம் ஆண்டு வெளியான 'ராமாயணம்' தொலைக்காட்சித் தொடரில் சீதை கதாபாத்திரத்தில் நடித்து புகழ்பெற்றவர் மூத்த நடிகை தீபிகா சிக்லியா. ராமானந்த் சாகர் இந்தியில் இயக்கிய இத்தொடர் இன்றளவும் மக்களால் பெரிதும் ... மேலும் பார்க்க