செய்திகள் :

'பனை மரத்துக்கு லஞ்சம்' - அலையவிட்ட கிராம நிர்வாக அலுவலர்; கொத்தாகத் தூக்கிய லஞ்ச ஒழிப்புத்துறை

post image

நாமக்கல் மாவட்டம், திருச்செங்கோடு ஒன்றியம் புதுப்புளியம்பட்டி பகுதியைச் சேர்ந்தவர் செந்தில் (40). விவசாயியான இவர், தனது நிலத்திலிருந்த 6 பனை மரங்களை அனுமதியின்றி வெட்டியுள்ளார்.

இதுதொடர்பாக, செந்தில் மீது வழக்குப் பதியாமல் இருக்க, புதுப்புளியம்பட்டி கிராம நிர்வாக அலுவலரான குணசேகரன் ரூ.40 ஆயிரம் செந்திலிடம் லஞ்சம் கேட்டுள்ளார். முதல்கட்டமாக ரூ.20 ஆயிரம் கொடுத்த செந்தில், மீதிப்பணத்தைக் கொடுக்க முடியவில்லை.

இதையடுத்து, மீதிப் பணத்தைத் தரும்படி குணசேகரன், செந்திலுக்கு நெருக்கடி கொடுத்துள்ளார். இதனால், நாமக்கல் லஞ்ச ஒழிப்புத்துறை காவல் ஆய்வாளர் பிரபுவிடம், செந்தில் புகார் அளித்துள்ளார். அதன் அடிப்படையில், ரசாயனம் தடவிய ரூபாய் நோட்டுகளை செந்திலிடம் போலீஸார் கொடுத்து அனுப்பினர்.

அப்போது, கிராம நிர்வாக அலுவலர் குணசேகரன்தான் வெளியில் இருப்பதாகவும், கிராம உதவியாளர் தேவி என்பவர் வீட்டுக்குச் சென்று பணத்தைக் கொடுத்து விடும்படியும் கூறியுள்ளார்.

கைது
கைது

இதையடுத்து, திருச்செங்கோடு சிஎச்பி காலனி கிராம உதவியாளர் தேவி வீட்டுக்குச் சென்ற செந்தில் ரூ.20 ஆயிரம் பணத்தைக் கொடுக்க முயன்றுள்ளார். அப்போது, தனது கணவர் விஜயகுமார் அருகே உள்ள தேநீர்க் கடையில் நின்று கொண்டிருப்பதாகவும், அவரிடம் கொடுத்து விடும்படியும் தேவி கூறியுள்ளார்.

இதையடுத்து, தேநீர்க் கடையில் நின்று கொண்டிருந்த தேவியின் கணவர் விஜயகுமாரிடம், ரசாயனம் தடவிய ரூபாய் நோட்டுகளைக் கொடுத்துள்ளார். அப்போது, மறைந்திருந்த லஞ்ச ஒழிப்பு போலீஸார் விஜயகுமாரைக் கைது செய்தனர். அவர் கொடுத்த தகவலின்படி, கிராம உதவியாளர் தேவி மற்றும் கிராம நிர்வாக அலுவலர் குணசேகரன் ஆகியோரைக் கைது செய்தனர்.

பனை மரம் வெட்டியதற்காக கிராம நிர்வாக அலுவலர், கிராம உதவியாளர் மற்றும் அவரது கணவர் உள்ளிட்ட மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

திண்டுக்கல்: ஜாமீனில் வந்த 21 நாள்களில் கணவன் - மனைவி வெட்டி படுகொலை; பின்னனி என்ன?

திண்டுக்கல் யாகப்பன்பட்டியைச் சேர்ந்தவர் ஜேசுராஜ் (வயது 41). மீன் வியாபாரி. இவர் நேற்று கொசவபட்டியில் புதிதாக மீன் கடை வைப்பதற்காக இடம் பார்த்துவிட்டு அவரது மோட்டார் சைக்கிளில் நத்தத்திலிருந்து திண்டு... மேலும் பார்க்க

சேலத்தில் மருத்துவ மாணவி கொலை; காதல் விவகாரமா? தந்தையைத் தேடும் போலீஸ்! - நடந்தது என்ன?

சேலத்தை அடுத்த சித்தர்கோயில் அருகில் தனியார் ஹோமியோபதி மருத்துவக் கல்லூரி செயல்பட்டு வருகிறது. இந்தக் கல்லூரியில் திருநெல்வேலி மாவட்டம், வீரவநல்லூர் பாரதி நகரைச் சேர்ந்த வரதராஜன் என்பவரின் மகள் வர்ஷின... மேலும் பார்க்க

சேலம்: பட்டா பெயர் மாற்றத்திக்கு லஞ்சம்; ஓய்வுபெற இருந்த வருவாய் ஆய்வாளர் கைது; நடந்தது என்ன?

சேலம் மாவட்டம், ஆத்தூர் மந்தவெளி பகுதியைச் சேர்ந்தவர் ஈஸ்வரன். இவரது தாய் பச்சியம்மாள் பெயரில் உள்ள பட்டாவை தனது பெயருக்கு மாற்றம் செய்ய ஆத்தூர் வட்டாட்சியர் அலுவலகத்தில் மனு அளித்திருந்தார். அந்த மனு... மேலும் பார்க்க

`திறமையை சோதிக்க வேண்டுமென அழைத்தார்' - 17 வயது வீராங்கனையை வன்கொடுமை செய்த பயிற்சியாளர்

டெல்லியில் நடந்த துப்பாக்கிச் சுடும் போட்டியில், 17 வயது வீராங்கனை கலந்து கொண்ட நிலையில், அவர் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாகி இருக்கிறார். அந்த வீராங்கனைக்கு காமன்வெல்த் போட்டியில் துப்பாக்கி சுடுவதில் த... மேலும் பார்க்க

தூத்துக்குடி:`இன்ஸ்டாவில் சக நண்பர்களுடன் பேசக்கூடாது' - சமாதானம் பேச அழைத்து காதலியை கொன்ற காதலன்

விருதுநகர் மாவட்டம், ராஜபாளையம் அருகிலுள்ள தளவாய்புரத்தைச் சேர்ந்தவர் உமா. இவர், தென்காசி மாவட்டம், பாறைப்பட்டியில் உள்ள தனியார் காவலர் பயிற்சிப்பள்ளியில் படித்து வந்தார். இதே பள்ளியில் திருவேங்கடம் அ... மேலும் பார்க்க

நெல்லை: திருமணம் மீறிய உறவு - கார் வாங்குவது போல் வரவழைத்து வியாபரி கொலை செய்யபட்ட கொடூரம்!

தூத்துக்குடி மாவட்டம், சாத்தான்குளம் அருகிலுள்ள முதலூரைச் சேர்ந்தவர் மார்ட்டின் ஸ்டான்லி. இவருக்கு மனைவி மற்றும் இரண்டு குழந்தைகள் உள்ளனர். பழைய கார்களை வாங்கி விற்கும் தொழில் செய்து வந்த இவர், கடந்த ... மேலும் பார்க்க