சபரீசன் என்ட்ரி; கேக் வெட்ட மறுத்த முதல்வர்; MLA குழந்தைக்கு பெயர் சூட்டு விழா -...
”பயிர்க்கடன்களை தமிழக அரசு முழுமையாக தள்ளுபடி செய்ய வேண்டும்” - விவசாயிகள் உண்ணாவிரதப் போராட்டம்
தஞ்சாவூரில் பயிர்க்கடன்களை முழுமையாக தமிழக அரசு தள்ளுபடி செய்யக் கோரி தமிழ்நாடு காவிரி விவசாயிகள் சங்கம் சார்பில் மாநிலத் தலைவர் எல்.பழனியப்பன் தலைமையில் உண்ணாவிரதப் போராட்டம் நடைபெற்றது.
இதில் விவசாய சங்கத்தினர் உள்ளிட்ட ஏராளமான விவசாயிகள் பலர் கலந்து கொண்டனர்.

தேர்தல் அறிக்கையில் தவெக கொடுத்த வாக்குறுதியின் படி, விவசாயிகளின் கூட்டுறவு பயிர்க்கடன்களை முழுமையாகத் தள்ளுபடி செய்ய வேண்டும். காவிரியின் குறுக்கே மேகேதாட்டில் கர்நாடக அரசு கட்டும் தடுப்பணைக்கு மத்திய அரசு அனுமதி வழங்கக் கூடாது.
காவிரி மேலாண்மை ஆணையத்தின் உத்தரவுப்படி, காவிரியில் தமிழகத்துக்குரிய மாதாந்திர நீர் பங்கீட்டை உடன் வழங்க வேண்டும். விவசாயிகள் விளைவித்த நெல்மணிகளை தமிழக அரசு உரிய முறையில் பாதுகாக்க வேண்டும்.
குறுவை தொகுப்பு திட்டத்துக்குக் கூடுதல் நிதியை ஒதுக்கீடு செய்ய வேண்டும். பம்புசெட் மூலம் பயிர் சாகுபடி செய்துள்ள விவசாயிகளுக்கு பயிர் கடன்களை உடன் வழங்க வேண்டும். மத்திய அரசு உயர்த்தியுள்ள உரங்களின் விலையைத் திரும்பப் பெற வேண்டும். நடப்பு கொள்முதல் பருவத்தில் நெல் குவிண்டாலுக்கு ரூ.3,500 விலையை தமிழக அரசு அறிவிக்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி முழக்கங்கள் எழுப்பப்பட்டன.



















