செய்திகள் :

பரந்தூர்: ``தனிப்பட்ட அரசியல் ஆதாயத்திற்காக..." - முதல்வர் விஜய்யைச் சாடும் நயினார் நாகேந்திரன்!

post image

பரந்தூர் விமான நிலையத் திட்டம் கைவிடப்படும் என்று முதல்வர் விஜய் இன்று (ஆகஸ்ட்.24) சட்டமன்றத்தில் அறிவித்திருக்கிறார். இது குறித்து பேச திமுக அனுமதி கேட்டது. திட்டம் ரத்து செய்யப்பட்டதால் பேச எதுவும் இல்லை என சபாநாயகர் மறுத்து விட்டார். இதனால் திமுக-வினர் வெளிநடப்பு செய்தனர்.

இந்நிலையில் இது தொடர்பாக பா.ஜ.க தலைவர் நயினார் நாகேந்திரன் தன் எக்ஸ் பக்கத்தில்,``உங்களின் அரசியல் வீம்பிற்காக தமிழகத்தின் வளர்ச்சியை முடக்காதீர்கள் முதல்வர் அவர்களே! விமான நிலையத்திற்கான மாற்று இடத்தை தேர்வு செய்யாமல், பரந்தூர் விமான நிலையத் திட்டத்தை கைவிடுவதாக நீங்கள் சட்டமன்றத்தில் அறிவித்திருப்பது, தமிழகத்தின் வளர்ச்சியை பின்னோக்கி இழுப்பதற்கான ஏற்பாடு.

பரந்தூர் விமான நிலையம் மாதிரி திட்டம்
பரந்தூர் விமான நிலையம் மாதிரி திட்டம்

பரந்தூர் விமான நிலையத்திற்கு மாற்று இடம் வேண்டி, இதுவரை எந்த கோரிக்கையும் மத்திய அரசிடம் வைக்காமல், எந்த இடத்தை தேர்வு செய்யப் போகிறோம் என்ற தெளிவும் இல்லாமல், எதற்காக இந்த அவசர முடிவு? விமான நிலையத்திற்கான இடத்தை புதிதாக தேர்வு செய்வது என்பது அத்தனை எளிதா? சென்னை மற்றும் அதை சுற்றியுள்ள பகுதிகளில் ஆய்வுகள் மேற்கொண்டு, பயணப் போக்குவரத்து, மணலின் தன்மை, Need & Demand மற்றும் பல அம்சங்களையும் கோணங்களையும் ஆராய்ந்ததன் அடிப்படையில் தான் புதிய விமான நிலையம் அமைக்க பரந்தூர் இடம் தேர்வு செய்யப்பட்டுள்ளது.

ஆனால், தேர்தலின் போது பரந்தூரை நீங்கள் தேர்தல் பரப்புரைக் களமாக பயன்படுத்திக் கொண்ட ஒரே காரணத்திற்காக, விமான நிலையம் அமைப்பதற்கான மிகப்பெரிய “Process”- ஐயும் மீண்டும் முதலில் இருந்து துவங்க நீங்கள் முடிவு செய்திருப்பது, நேர விரயம், பண விரயம், மற்றும் வளங்களின் விரயம். உங்கள் தனிப்பட்ட அரசியல் ஆதாயத்திற்காக தமிழகத்தின் வளர்ச்சிக்கு நீங்கள் தடை போடுவது கண்டனத்திற்குரியது. அதுமட்டுமன்றி, பரந்தூர் விமான நிலையம் அமைக்க ஏற்கனவே கையகப்படுத்தப்பட்ட1700 ஏக்கர் நிலங்களை உங்கள் அரசு என்ன செய்யப் போகிறது?

முதல்வர் விஜய்
முதல்வர் விஜய்

நிலம் கையகப்படுத்தல் சட்டத்தின் படி, இந்த நிலங்களை விமான நிலையம் தவிர வேறு எதற்கும் பயன்படுத்தக் கூடாது என்பது உங்களுக்கு தெரியாதா? மேலும் இழப்பீட்டுத் தொகை பெற்றுக் கொண்டு தங்கள் நிலங்களை அரசுக்கு கொடுத்த மக்களுக்கு உங்கள் அரசு என்ன பதில் வைத்திருக்கிறது? எனவே ஆரம்பம் முதலே எங்களின் கேள்வி ஒன்றே ஒன்று தான், தவெக அரசுக்கு பரந்தூரில் விமான நிலையம் அமைவது பிரச்சினையா அல்லது தமிழகத்திற்கு ஓர் புதிய விமான நிலையம் கிடைப்பதில் பிரச்சினையா? பதிலளியுங்கள் திரு. ஜோசப் விஜய் அவர்களே!" எனக் கேள்வி எழுப்பியிருக்கிறார்.

தமிழ்நாட்டில் பட்ஜெட் கூட்டத்தொடர் நிறைவு; ஆளுநரைச் சந்தித்த JCD பிரபாகர் - என்ன பேசினார்கள்?

தமிழ்நாட்டில் தவெக அரசின் முதல் பட்ஜெட் கூட்டத்தொடர் நடந்து முடிந்துள்ளது. இந்தக் கூட்டத்தொடரில் சபாநாயகர் ஜே.சி.டி.பிரபாகருக்கு அரசியல் கட்சியினர் மற்றும் மக்களிடையே பாராட்டுகள் கிடைத்தன. இன்று சென்ன... மேலும் பார்க்க

மதுராந்தகம், தாராபுரம் இடைத்தேர்தல்: தனித்துக் களமிறங்கும் கம்யூனிஸ்ட் கட்சிகள்! - யார் எங்கே?

வருகிற அக்டோபர் 6-ம் தேதி, தமிழ்நாட்டில் மதுராந்தகம் மற்றும் தாராபுரத்தில் இடைத்தேர்தல் நடக்கவிருக்கிறது. கடந்த சட்டமன்றத் தேர்தலில், இந்த இரு தொகுதிகளிலும் அதிமுக வென்றிருந்தது. மதுராந்தகத்தில் மரகதம... மேலும் பார்க்க

BRICS: "இன்று உலகளவில் பதற்றங்கள் தொடர்ந்து அதிகரித்துக்கொண்டே வருகின்றன" - மோடி பேச்சு

டெல்லியில் நடக்கும் பிரிக்ஸ் மாநாட்டின் நிறைவு நாள் இன்று. மாநாட்டில் இன்று இந்தியப் பிரதமர் மோடி காலநிலை மாற்றம் குறித்து, “இந்திய நாகரிகத்தில், இயற்கை அன்னையாகப் போற்றப்படுகிறது. பல நூற்றாண்டுகளாகவே... மேலும் பார்க்க

"தீமைகள் எந்த ரூபத்தில் தமிழகத்திற்கு வந்தாலும் அது தீயசக்தி திமுகவால் மட்டுமே!” - நிர்மல் குமார்

மிசா சட்டத்தின் கீழ் கைதான திமுக தலைவர் ஸ்டாலினை அவதூறாக பேசியதாக, தமிழ்நாடு முதலமைச்சர் விஜய் மற்றும் தமிழ்நாடு சட்டத்துறை அமைச்சர் நிர்மல் குமாரை எதிர்த்துத் திமுகவினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர். அப்போ... மேலும் பார்க்க

"நீங்கள் திருந்தாவிட்டால் திருத்தப்படுவீர்கள்" - தவெகவிற்கு ஆ.ராசா எச்சரிக்கை

தமிழ்நாடு சட்டப்பேரவையில் தமிழ்நாடு முதலமைச்சர் விஜய் திமுகத் தலைவர் ஸ்டாலின் மிசா சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டது குறித்துச் சர்ச்சையாகப் பேசியிருந்தார். விஜய்யின் இந்தப் பேச்சிற்கு எதிர்ப்புத் தெ... மேலும் பார்க்க

"பாஜக-வை எதிர்க்க பயப்படும் தவெக; பாராட்டியாவது கருத்து சொல்லலாம்!" - தோழர் பாலபாரதி கிண்டல்!

சட்டமன்றக் கூட்டத்தொடரில், காவல்துறை மானியக் கோரிக்கையின்போது முதல்வர் அளித்த ஆவேச உரை, அரசியல் அரங்கில் பலத்த சர்ச்சையையும் விமர்சனத்தையும் உருவாக்கியிருக்கிறது. இந்த நிலையில், த.வெ.க அரசுக்கு ஆதரவு ... மேலும் பார்க்க