செய்திகள் :

'பரிதாபத்தில்தான் தலித்தை பொதுத் தொகுதியில் நிறுத்தினீர்களா?' - அவையில் வன்னி அரசு சரமாரி கேள்வி!

post image

அமைச்சர் வன்னி அரசுவின் சமூகநீதித்துறையின் மீதான மானியக் கோரிக்கை விவாதம் சட்டமன்றத்தில் இன்று நடந்திருந்தது. விவாதத்தின் போது சில திமுக, அதிமுக உறுப்பினர்கள், 'நாங்கள் தலித்தை பொதுத் தொகுதியில் நிறுத்தியிருக்கிறோம்' என பேசியதற்கு அமைச்சர் வன்னி அரசு கடுமையாக பதிலளித்திருந்தார்.

வன்னி அரசு

அமைச்சர் வன்னி அரசு பேசியதாவது, 'தலித்தை பொதுத்தொகுதியில் நிறுத்தினோம் என திமுக, அதிமுக உறுப்பினர்கள் பேசினார்கள். இதை கோட்பாட்டின் அடிப்படையில் பேசுகிறீர்களா? இல்லை பச்சாதாபத்தின் அடிப்படையில் பேசுகிறீர்களா? என்னைப் பொறுத்தவரை நீங்கள் பச்சாதாபத்தின் அடிப்படையில் பேசுவதைப் போலத்தான் தெரிகிறது.

கடந்த முறை நாங்கள் நான்கு சட்டமன்ற உறுப்பினர்கள் அவையில் இருந்தோம். உண்மையாகவே கோட்பாட்டின் அடிப்படையில் செயல்படுகிறீர்கள் என்றால் எங்களுக்கு ஏன் அதிகாரத்தில் பங்கு கொடுக்காமல் விட்டீர்கள்? இப்போது 2 எம்.எல்.ஏக்கள் இருந்தாலும் ஒருவருக்கு இந்த அரசு அதிகாரம் கொடுத்திருக்கிறது.

வன்னி அரசு
வன்னி அரசு

சாதியக் கொடுமைகளால் பாதிக்கப்பட்ட தென் மாவட்ட கிராமங்களிலிருந்து வந்தவன் நான். அங்கே சாதியக் கொடுமைகள் எப்படியிருக்கிறது என தெரிந்துகொள்ள வேண்டும். நாங்கள் புதிய சட்டை போட்டால் வெள்ளை சட்டை போட்டால் இவனுக்கு வந்த வாழ்வை பார் என்பார்கள். அப்படியொரு இடத்திலிருந்து வந்திருக்கிறோம்' என்றார்.

தமிழ்நாட்டில் பட்ஜெட் கூட்டத்தொடர் நிறைவு; ஆளுநரைச் சந்தித்த JCD பிரபாகர் - என்ன பேசினார்கள்?

தமிழ்நாட்டில் தவெக அரசின் முதல் பட்ஜெட் கூட்டத்தொடர் நடந்து முடிந்துள்ளது. இந்தக் கூட்டத்தொடரில் சபாநாயகர் ஜே.சி.டி.பிரபாகருக்கு அரசியல் கட்சியினர் மற்றும் மக்களிடையே பாராட்டுகள் கிடைத்தன. இன்று சென்ன... மேலும் பார்க்க

மதுராந்தகம், தாராபுரம் இடைத்தேர்தல்: தனித்துக் களமிறங்கும் கம்யூனிஸ்ட் கட்சிகள்! - யார் எங்கே?

வருகிற அக்டோபர் 6-ம் தேதி, தமிழ்நாட்டில் மதுராந்தகம் மற்றும் தாராபுரத்தில் இடைத்தேர்தல் நடக்கவிருக்கிறது. கடந்த சட்டமன்றத் தேர்தலில், இந்த இரு தொகுதிகளிலும் அதிமுக வென்றிருந்தது. மதுராந்தகத்தில் மரகதம... மேலும் பார்க்க

BRICS: "இன்று உலகளவில் பதற்றங்கள் தொடர்ந்து அதிகரித்துக்கொண்டே வருகின்றன" - மோடி பேச்சு

டெல்லியில் நடக்கும் பிரிக்ஸ் மாநாட்டின் நிறைவு நாள் இன்று. மாநாட்டில் இன்று இந்தியப் பிரதமர் மோடி காலநிலை மாற்றம் குறித்து, “இந்திய நாகரிகத்தில், இயற்கை அன்னையாகப் போற்றப்படுகிறது. பல நூற்றாண்டுகளாகவே... மேலும் பார்க்க

"தீமைகள் எந்த ரூபத்தில் தமிழகத்திற்கு வந்தாலும் அது தீயசக்தி திமுகவால் மட்டுமே!” - நிர்மல் குமார்

மிசா சட்டத்தின் கீழ் கைதான திமுக தலைவர் ஸ்டாலினை அவதூறாக பேசியதாக, தமிழ்நாடு முதலமைச்சர் விஜய் மற்றும் தமிழ்நாடு சட்டத்துறை அமைச்சர் நிர்மல் குமாரை எதிர்த்துத் திமுகவினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர். அப்போ... மேலும் பார்க்க

"நீங்கள் திருந்தாவிட்டால் திருத்தப்படுவீர்கள்" - தவெகவிற்கு ஆ.ராசா எச்சரிக்கை

தமிழ்நாடு சட்டப்பேரவையில் தமிழ்நாடு முதலமைச்சர் விஜய் திமுகத் தலைவர் ஸ்டாலின் மிசா சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டது குறித்துச் சர்ச்சையாகப் பேசியிருந்தார். விஜய்யின் இந்தப் பேச்சிற்கு எதிர்ப்புத் தெ... மேலும் பார்க்க

"பாஜக-வை எதிர்க்க பயப்படும் தவெக; பாராட்டியாவது கருத்து சொல்லலாம்!" - தோழர் பாலபாரதி கிண்டல்!

சட்டமன்றக் கூட்டத்தொடரில், காவல்துறை மானியக் கோரிக்கையின்போது முதல்வர் அளித்த ஆவேச உரை, அரசியல் அரங்கில் பலத்த சர்ச்சையையும் விமர்சனத்தையும் உருவாக்கியிருக்கிறது. இந்த நிலையில், த.வெ.க அரசுக்கு ஆதரவு ... மேலும் பார்க்க