செய்திகள் :

'பாஜகவும் தேர்தல் ஆணையமும் கைகோத்து ஒரு கட்சியைப் பிளவுபடுத்துகின்றன'- மம்தாவுக்கு ராகுல் ஆதரவு

post image

மேற்கு வங்க சட்டப்பேரவைத் தேர்தலுக்குப் பிறகு திரிணமுல் காங்கிரஸ் கட்சி இரண்டாக உடைந்த நிலையில் மம்தா பானர்ஜி தலைமையில் ஒரு பிரிவினரும், சட்டப்பேரவை எதிர்க்கட்சித் தலைவர் ரிதப்ரத பானர்ஜி தலைமையில் மற்றொரு பிரிவினரும் செயல்பட்டு வருகின்றனர்.

தேர்தல் ஆணையத்திடம் ரிதப்ரத பானர்ஜி பிரிவினர் சார்பில் தங்களுக்கே திரிணமுல் காங்கிரஸ் எம்எல்ஏக்களில் பெரும்பாலானோரின் ஆதரவு இருப்பதாகக் கூறி, கட்சியின் சின்னத்துக்கு அரூப் ராய் உரிமை கோரினார். இதற்கு மம்தா தரப்பினர் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.

மம்தா பானர்ஜி
மம்தா பானர்ஜி

இதைத்தொடர்ந்து திரிணமுல் காங்கிரஸ் கட்சியின் பெயர் மற்றும் சின்னத்தைப் பயன்படுத்த மேற்கு வங்க முன்னாள் முதல்வர் மம்தா பானர்ஜி தலைமையிலான கட்சி பிரிவுக்கும், அதிருப்தி எம்எல்ஏக்கள் பிரிவுக்கும் தேர்தல் ஆணையம் நேற்று (செப்.17)தடைவிதித்தது.

இந்நிலையில் காங்கிரஸ் எம்பியும், மக்களவை எதிர்க்கட்சித் தலைவருமான ராகுல் காந்தி, மம்தா பானர்ஜிக்கு ஆதரவு குரல் கொடுத்திருக்கிறார்.

மம்தா பானர்ஜிக்கு ஆதரவாக ராகுல் காந்தி வெளியிட்டிருக்கும் பதிவில், " முதலில் சிவசேனா, அடுத்து தேசியவாத காங்கிரஸ், தற்போது திரிணமுல் காங்கிரஸ். பாஜகவும் தேர்தல் ஆணையமும் கைகோத்து ஒரு கட்சியைப் பிளவுபடுத்துகின்றன. பின்னர், கட்சியின் சின்னமும் பறிக்கப்படுகிறது.

ஒரு கட்சியையே திருட முடியும் என்றால், கோடிக்கணக்கான இந்தியர்களின் வாக்குகளையும் திருட முடியும் என்பதில் ஆச்சரியப்படுவதற்கு எதுவுமில்லை.

வாக்குத் திருட்டு; அரசாங்கத் திருட்டு; தற்போது கட்சியும் திருடப்படுகிறது. இவை நம்முடைய ஜனநாயக வீழ்ச்சியின் அடையாளமாக மாறிவிட்டன.

இந்திய தேர்தல் ஆணையம்
இந்திய தேர்தல் ஆணையம்

இந்தியத் தேர்தல் ஆணையத்தின் அரசியலமைப்பு ரீதியிலான பொறுப்பு, மக்களின் தீர்ப்பைப் பாதுகாப்பதுதான். ஆனால், மக்கள் தீர்ப்பை மதிக்காதோருக்கு ஆதரவாகவே தேர்தல் ஆணையம் செயல்பட்டு வருகிறது.

இது மம்தா பானர்ஜியின் போராட்டம் மட்டுமல்ல. ஒவ்வொரு அரசியல் கட்சி மற்றும் நியாயமான தேர்தல்களை விரும்பும் ஒவ்வொரு வாக்காளரின் போராட்டம்” எனப் பதிவிட்டிருக்கிறார்.

தொடரும் பெண்களுக்கு எதிரான சமத்துவமின்மை: `இலக்கு 2030; எட்டப்போவதோ 2197!' - ஐ.நா அறிக்கை

2030-ம் ஆண்டுக்குள் பாலின சமத்துவத்தை அடைய வேண்டும் என்ற உலகளாவிய இலக்கு நிர்ணயிக்கப்பட்டிருந்தாலும், தற்போதைய முன்னேற்ற வேகத்தின்படி பார்த்தால் அந்த இலக்கு 2197-ம் ஆண்டில்தான் சாத்தியமாகும் என ஐ.நா.... மேலும் பார்க்க

`திமுக-வைத்தான் சொன்னேன், தேமுதிகவை அல்ல!’ - பிரேமலதா விஜயகாந்துக்கு திருமாவளவன் பதில்

வி.சி.க தலைவரும், எம்பியுமான திருமாவளவன் சமீபத்தில் கலந்துகொண்ட திருமண நிகழ்ச்சியில் பேசியபோது, "நீண்டகாலம் திமுகவோடு பயணித்த கட்சிகளுக்கான தொகுதிகளைக் குறைத்து, திடுமெனக் கூட்டணியில் இணைந்த கட்சிக்கு... மேலும் பார்க்க

"காங்கிரஸுக்காக மிகப்பெரிய ரிஸ்க் எடுத்திருக்கிறது த.வெ.க!" - சொல்கிறார் ரவிக்குமார் எம்.பி

"த.வெ.க தலைவர் விஜய், கரூர் கூட்டத்துக்கு வேண்டுமென்றே காலம் தாழ்த்தி வந்ததால்தான் கூட்ட நெரிசல் ஏற்பட்டு அத்தனை உயர் பலிகளும் நடந்தன. எனவே, விஜய் மீது வழக்குப் பதிந்து அவரது அரசியலை அம்பலப்படுத்த வேண... மேலும் பார்க்க

"சௌமியாவுக்கு Fans Club தொடங்க இருக்கோம்னு சொன்னாங்க..!"- பாமக தலைவர் அன்புமணி சொன்ன தகவல்!

பாமக பொதுக்குழு கூட்டம் நேற்று விக்ரவாண்டியில் நடைபெற்றது. இதில் கலந்துகொண்டு பேசிய பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ், "இப்போது தான் நம்மைப் பற்றி எல்லோரும் கொஞ்சம் நன்றாக பேசுகிறார்கள். இல்லையென்றால் அய்ய... மேலும் பார்க்க

அயலக மாணவர் விவகாரம்: ``இதோ ஆதாரம்; உங்க IT Wing மூலம் தவறான தகவல பரப்புறீங்க" - மாணவர் பாரதிதாசன்

அண்ணல் அம்பேத்கர் அயலக உயர்கல்வி திட்டத்தின் கீழ் மலேசியா தேசிய பல்கலைக்கழகத்தில் படிக்கச் சென்ற பாரதிதாசன் என்ற மாணவர், கல்வி உதவித்தொகை கிடைக்காமல் தாம் மிகவும் சிரமப்படுவதாக ஏப்ரல் மாதம் முதல் தொடர... மேலும் பார்க்க

அயலக மாணவரின் குற்றச்சாட்டு: ``அவப்பெயர் ஏற்படுத்தும் நோக்கத்துடன்"- சமூக நீதித்துறை அமைச்சகம் பதில்

அண்ணல் அம்பேத்கர் அயலக உயர்கல்வி திட்டத்தின் கீழ் மலேசியா தேசிய பல்கலைக்கழகத்தில் படிக்கச் சென்ற பாரதிதாசன் என்ற மாணவர், கல்வி உதவித்தொகை கிடைக்காமல் தாம் மிகவும் சிரமப்படுவதாக ஏப்ரல் மாதம் முதல் தொடர... மேலும் பார்க்க