செய்திகள் :

பாஜக: 10 ஆண்டுகளில் 5-வது அமைச்சர்; கல்வித் துறை கண்ட மாற்றங்களும் திருப்பங்களும்! | ஓர் பார்வை

post image

கடந்த 2014-ம் ஆண்டு முதல் இந்தியாவின் கல்வித் துறை மிகப்பெரிய மாற்றங்களைச் சந்தித்து வந்துள்ளது. ஆரம்பத்தில் 'மனிதவள மேம்பாட்டு அமைச்சகம்' (MHRD) என்ற பெயரிலேயே இயங்கி வந்தது. பின்னர், ஜூலை 29, 2020 அன்று மத்திய அரசு புதிய தேசிய கல்விக் கொள்கைக்கு (NEP 2020) ஒப்புதல் அளித்ததைத் தொடர்ந்து, இந்த அமைச்சகத்தின் பெயர் அதிகாரப்பூர்வமாக 'கல்வி அமைச்சகம்' என மாற்றம் செய்யப்பட்டது.

இந்த பத்து ஆண்டுகளுக்கும் மேலான காலகட்டத்தில் நாட்டின் கல்வித் துறையை வழிநடத்த நான்கு முக்கியத் தலைவர்கள் மத்திய அமைச்சர்களாகப் பணியாற்றியுள்ளனர்.

ஸ்மிருதி இரானி

ஸ்மிருதி இரானி (மே 26, 2014 - ஜூலை 5, 2016)

2014-ல் மோடி தலைமையிலான அரசு அமைந்தபோது மனிதவள மேம்பாட்டு அமைச்சராக ஸ்மிருதி இரானி பொறுப்பேற்றார். டெல்லி பல்கலைக்கழகத்தின் சர்ச்சைக்குரிய நான்கு ஆண்டு இளங்கலை திட்டத்தை (FYUP) ரத்து செய்தது இவரது பதவிக் காலத்தில் நடந்த முக்கிய நிகழ்வாகும். உயர்கல்வி நிறுவன தரவரிசைக்கான 'என்.ஐ.ஆர்.எஃப்' (NIRF) முறையை 2015-ல் அறிமுகப்படுத்தினார்.

வெளிநாட்டு பேராசிரியர்களை இந்திய உயர்கல்வி நிறுவனங்களுக்கு வரவழைக்கும் 'ஜியான்' (GIAN) திட்டம் மற்றும் மாணவிகளின் பொறியியல் கல்வியை ஊக்குவிக்கும் 'உடான்', 'பிரகதி' திட்டங்களைச் செயல்படுத்தினார். 2016 அமைச்சரவை மாற்றத்தின் போது இவர் ஜவுளித்துறைக்கு மாற்றப்பட்டார்.

பிரகாஷ் ஜவடேகர் (ஜூலை 5, 2016 - மே 30, 2019)

ஸ்மிருதி இரானியைத் தொடர்ந்து பொறுப்பேற்ற பிரகாஷ் ஜவடேகர், உயர்கல்வி நிறுவனங்களின் கட்டமைப்பு வசதிகளுக்காக 'உயர்கல்வி நிதி முகமையை' (HEFA) உருவாக்கினார். கஸ்தூரி ரங்கன் குழு மூலம் புதிய கல்விக் கொள்கைக்கான (NEP) வரைவு தயாரிக்கும் பணியை மேற்பார்வையிட்டார்.

மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர்

நீட் (NEET) உள்ளிட்ட தேர்வுகளை நடத்த 'தேசிய தேர்வு முகமை' (NTA) உருவாக்கம் மற்றும் ஐ.ஐ.எம் (IIM) நிறுவனங்களுக்குத் தன்னாட்சி அதிகாரம் அளிக்கும் சட்டத்தைக் கொண்டு வந்தார்.

இவரது காலத்தில், 2018 மார்ச் மாதம் சி.பி.எஸ்.இ (CBSE) 10-ம் வகுப்பு கணிதம் மற்றும் 12-ம் வகுப்பு பொருளாதார வினாத்தாள்கள் வாட்ஸ்அப்பில் கசிந்து பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. மேலும், 8-ம் வகுப்பு வரை அனைத்து மாணவர்களையும் கட்டாயம் பாஸ் செய்ய வேண்டும் என்ற விதியை மாற்றி, 5 மற்றும் 8-ஆம் வகுப்புகளில் மாணவர்கள் சரியாகப் படிக்கவில்லை என்றால் அவர்களை 'ஃபெயில்' ஆக்கலாம் என்ற புதிய சட்டத் திருத்தத்தைக் கொண்டு வந்தார்.

ரமேஷ் போக்ரியால் (மே 30, 2019 - ஜூலை 7, 2021)

இவரது பதவிக் காலத்தில் தான் 'மனிதவள மேம்பாட்டு அமைச்சகம்' அதிகாரப்பூர்வமாக 'கல்வி அமைச்சகம்' எனப் பெயர் மாற்றம் செய்யப்பட்டது. தேசிய கல்விக் கொள்கை 2020-ஐ அமல்படுத்தி 5+3+3+4 பள்ளி முறை, பல்துறை உயர்கல்வி மற்றும் தாய்மொழி வழி கல்விக்கு முக்கியத்துவம் போன்றவற்றை கொண்டுவந்தார். கொரோனா பெருந்தொற்று காலத்தில் கல்வித் துறை பாதிக்கப்பட்டபோது, 'திக்ஷா' (DIKSHA), 'ஸ்வயம்' (SWAYAM) மற்றும் 'பி.எம் இ-வித்யா' (PM eVIDYA) போன்ற டிஜிட்டல் தளங்கள் மூலம் ஆன்லைன் கல்வியை முன்னெடுத்தார். உடல்நலக் குறைவு காரணமாக ஜூலை 2021-இல் தனது பதவியை ராஜினாமா செய்தார்.

மத்திய அமைச்சர் ரமேஷ் போக்ரியால்

தர்மேந்திர பிரதான் (ஜூலை 7, 2021 – ஜூலை 25, 2026)

பதவியேற்ற சில மாதங்களிலேயே நீட்-யுஜி (NEET-UG 2021) தேர்வு வினாத்தாள் கசிவு புகார்களை எதிர்கொண்டார். புதிய கல்விக் கொள்கையை நாடு முழுவதும் தீவிரமாகச் செயல்படுத்திய இவர், 'பி.எம் ஸ்ரீ' (PM SHRI) பள்ளித் திட்டத்தைத் தொடங்கி வைத்தார். பலமொழி வழிக் கல்வியை ஊக்குவித்த இவர் கொண்டு வந்த மூன்று மொழி கொள்கை திட்டம், தமிழ்நாடு அரசுடன் பெரும் அரசியல் மற்றும் கொள்கை ரீதியிலான மோதலுக்கு வழிவகுத்தது. 'இந்தி திணிப்பு' எனத் தமிழ்நாடு கடுமையாக எதிர்த்தது.

யு.ஜி.சி (UGC), ஏ.ஐ.சி.டி.இ (AICTE), என்.சி.டி.இ (NCTE) ஆகிய உயர்கல்வி கட்டுப்பாட்டு அமைப்புகளை ஒன்றிணைத்து 'விக்சித் பாரத் சிக்ஷா அதிஷ்டான் மசோதா' என்ற ஒரே அமைப்பை உருவாக்க நடவடிக்கை மேற்கொண்டார்.

பிரஹலாத் ஜோஷி (ஜூலை 25, 2026 - ...)

நீட் வினாத்தாள் கசிவு, அரசுத் தேர்வுகள் குளறுபடி உள்ளிட்ட பல்வேறு குற்றச்சாட்டுகளை முன்வைத்து, டெல்லி ஜந்தர் மந்தரில் காக்ரோச் ஜனதா கட்சி (சிஜேபி) தலைமையிலான இளைஞர் போராட்டம் நடந்தது.

மத்திய அமைச்சர் பிரகலாத் ஜோஷி
மத்திய அமைச்சர் பிரகலாத் ஜோஷி

போராட்டம் தீவிரமடைந்ததைத் தொடர்ந்து, மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் பதவி விலகினார். மேலும், பிரதமரின் ஆலோசனைப்படி, நுகர்வோர் விவகாரங்கள், உணவு மற்றும் பொது விநியோகத் துறை அமைச்சரான பிரஹலாத் ஜோஷிக்கு, அவர் ஏற்கனவே வகித்து வரும் பொறுப்புகளுடன் கூடுதலாக கல்வி அமைச்சகத்தின் பொறுப்பும் வழங்கப்பட வேண்டும் என்று குடியரசுத் தலைவர் உத்தரவிட்டுள்ளார்.

'சொந்த நாட்டு மாணவர்களுடனேயே ஆரோக்கியமாக விவாதிக்க முடியாத ஒரு கட்சியிடம்.!' - மாணிக்கம் தாகூர்

"டெல்லியில் காக்ரோச் ஜனதா கட்சி போராட்டம் நடத்தியது. இதுவே அமெரிக்காவாக இருந்தால், அவர்கள் மீது துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்டிருக்கும்" என்று தெலங்கானாவைச் சேர்ந்த பாஜக நாடாளுமன்ற உறுப்பினர் கொண்டா விஸ... மேலும் பார்க்க

"அவர்கள் அப்படித்தான் பிறக்கிறார்கள்; அவர்களுக்கும் வாழும் உரிமை உண்டு"- LGBTQ+ குறித்து மோகன் பகவத்

ஐதராபாத்தில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில், நேற்று (ஜூலை 26)ஆர்.எஸ்.எஸ் தலைவர் மோகன் பகவத் LGBTQ+ சமுதாயத்தினர் குறித்து பேசியிருக்கிறார்.அவர் பேசியதாவது..."இங்கே சமுதாயத்தில் LGBTQ+ இருக்கிறது தான். சமூகத்... மேலும் பார்க்க

"சின்ன வயதில் பெற்றோர் சொன்னால் கேட்டுக்கொள்வோம்; ஆனால், இன்று.!" - Gen Z குறித்து மோகன் பகவத்

'மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் ராஜினாமா' - டெல்லி ஜந்தர் மந்தரில் ஜென் Z தலைமுறையினர் வெற்றிகரமாக போராட்டத்தை நடத்தி முடித்துள்ளனர். இந்த நேரத்தில் டெல்லி அம்பேத்கர் சர்வதேச மையத்தில் 'தற்க... மேலும் பார்க்க

`மேற்கு தொடர்ச்சி மலை படம் போல எங்களுடைய நிலத்தை விட்டு அகற்ற போகிறார்கள்' - நடிகர் ஆண்டனி வேதனை

திண்டுக்கல் மாவட்டம் மரியநாதபுரம் கிராமத்தில் சுமார் நூற்றுக்கும் மேற்பட்டவர்கள் வசித்து வருகிறார்கள். இந்த கிராமம் புறம்போக்கு நிலத்தில் இருப்பதாகவும், அதனால் இங்கிருப்பர்கள் வெளியேற வேண்டும் என அரசு... மேலும் பார்க்க

அமெரிக்கா, ஈரான் தாக்குதல் திடீர் நிறுத்தம் ஏன்? ட்ரம்ப் - ஜே.டி.வான்ஸ் சந்திப்பு முக்கிய காரணம்?

கிட்டத்தட்ட இரண்டு வாரங்களாக மாறி மாறி கடும் தாக்குதல் நடத்திக் கொண்டிருந்த அமெரிக்கா, ஈரான் தற்போது மோதலுக்கு சின்ன இடைவேளை கொடுத்துள்ளது. என்ன நடக்கிறது? கடந்த இரண்டு வாரங்களாக, கப்பல்கள் மீது தாக்க... மேலும் பார்க்க

`பினராயி விஜயனுடன் நெருக்கத்தால் மகளுக்கு ஒப்பந்தம்' - சிஎம்ஆர்எல் நிர்வாகி வாக்குமூலத்தால் சிக்கல்!

மாதப்படி வழக்கில் கேரள முதல்வர் பினராயி விஜயனையும் அவரது மகள் வீணா விஜயனையும் மேலும் சிக்கலுக்குள்ளாக்கும் வகையில் சி.எம்.ஆர்.எல் நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர் சசிதரன் கர்த்தா, அமலாக்கத்துறையிடம் அளி... மேலும் பார்க்க