செய்திகள் :

பான் கார்டு முதல் பென்சன் வரை: நெருங்கும் கடைசி தேதி; உடனே `இவற்றை' செஞ்சுடுங்க!

post image

இந்த ஆண்டின் இறுதி மாதத்தை நெருங்கிவிட்டோம். சில நடைமுறைகளுக்கும் இறுதி நாள்கள் நெருங்குகின்றன. அவை என்னென்ன என்பதை வரிசையாக பார்த்துவிடலாமா?

1. பான் - ஆதார் இணைப்பு: வரும் டிசம்பர் 30-ம் தேதிக்குள் பான் கார்டை ஆதார் அட்டையுடன் இணைத்துவிட வேண்டும். இல்லையென்றால், 2026-ம் ஆண்டு, ஜனவரி 1-ம் தேதி முதல் பான் கார்டு செல்லுபடியாகாமல் போய்விடும்.

பான் - ஆதார் இணைப்பு
பான் - ஆதார் இணைப்பு

2. தாமத ஐ.டி.ஆர் ஃபைலிங்: கடந்த செப்டம்பர் 16-ம் தேதிக்குள் வருமான வரிக் கணக்குத் தாக்கல் செய்யவில்லையா? பரவாயில்லை. 2024-25 நிதியாண்டிற்கான வருமான வரிக் கணக்குத் தாக்கலை 'தாமத வருமான வரிக் கணக்குத் தாக்கலாக' செய்யலாம். ஆனால், இந்தக் கணக்குத் தாக்கலுக்கு அபராதம் உண்டு மக்களே.

3. வருமான வரித் தணிக்கை செய்ய: தனிநபர்கள் மற்றும் நிறுவனங்கள் 'வரித் தணிக்கை' செய்வதற்கான தேதி இந்த ஆண்டு அக்டோபர் 31-ம் தேதியில் இருந்து டிசம்பர் 10-ம் தேதி என மாற்றப்பட்டுள்ளது. இதை விரைவில் முடிப்பது நல்லது.

இன்றும், நாளையும் உடனே செய்ய வேண்டியவை...

1. பென்சன்தாரர்கள் தொடர்ந்து பென்சன் பெற நாளைக்குள் (நவம்பர் 30) 'உயிர்வாழ் சான்றிதழை' சமர்ப்பிக்க வேண்டும். 'கடைசி தேதி ஆகிவிட்டதே' என்கிற பதற்றம் வேண்டாம். இதை டிஜிட்டலிலேயே எளிதாக சமர்ப்பித்து கொள்ளலாம்.

2. தேசிய பென்சன் திட்டத்தில் (NPS) இருந்து ஒருங்கிணைந்த பென்சன் திட்டத்திற்கு (UPS) மாற நினைப்பவர்களுக்கு நாளையே கடைசி தேதி. உடனே இதற்கான வேலையை தொடங்குவது நல்லது.

நாம் தமிழர் : 'சாட்டை துரைமுருகனுக்கு வரும் தேர்தலில் சீட் இல்லை?' - பின்னணி என்ன?

நாம் தமிழர் கட்சியின் நட்சத்திர பிரமுகரும் கொள்கைப் பரப்புச் செயலாளருமான சாட்டை துரைமுருகனின் பெயர் சட்டமன்றத் தேர்தல் வேட்பாளர் பட்டியலில் இடம்பெறவில்லை என்கிறார்கள் உட்கட்சி விவரமறிந்த சிலர்.நாம் தம... மேலும் பார்க்க

திருப்பரங்குன்றம்: `மாநில அரசின் மனு தள்ளுபடி' - உயர் நீதிமன்ற மதுரைக் கிளை தீர்ப்பு விவரம்

திருக்கார்த்திகை தினமான நேற்று (டிசம்பர் 3) திருப்பரங்குன்றம் மலையில் வழக்கமாக தீபம் ஏற்றப்படும் உச்சிப் பிள்ளையார் கோயிலின் தீபத் தூணில் கார்த்திகை தீபம் ஏற்றப்பட்டது.ஆனால், உயர் நீதிமன்ற மதுரைக் கிள... மேலும் பார்க்க

தேதி குறித்த திருமா; 234 மா.செ-க்கள்; மறுசீரமைக்கப்படும் வி.சி.க? - பரபரக்கும் அம்பேத்கர் திடல்!

2026 சட்டமன்றத் தேர்தல் ஆயத்த பணிகள் தமிழகத்தில் அனலடிக்கத் தொடங்கியிருக்கும் சூழலில், விடுதலை சிறுத்தைகள் கட்சியின் மறுசீரமைப்பு பணிகளில் தீவிரம் காட்டி வருகிறார் திருமாவளவன். வி.சி.க-வில் நடக்கவிருக... மேலும் பார்க்க

திருப்பரங்குன்றம்: `தீபத்தூண் கோவிலை விட பழமையானதா?’ - நீதிபதிகள் கேள்வி

முருகக் கடவுளின் முதல் படை வீடான திருப்பரங்குன்றத்தில் திருக்கார்த்திகை திருவிழா மிக விமர்சையாக நடைபெறுவது வழக்கம். அதனை ஒட்டி திருக்கார்த்திகை தினமான நேற்று மலையில் வழக்கமாக தீபம் ஏற்றப்படும் உச்சிப்... மேலும் பார்க்க

திருப்பரங்குன்றம்: மலை உச்சியில் ஏற்றப்படாத தீபம்; வெடித்த ஆர்ப்பாட்டம், 144 தடை; நிலவரம் என்ன?

திருப்பரங்குன்ற மலையில் கடந்த 40 ஆண்டுகளுக்கும் மேலாகஅருள்மிகு சுப்பிரமணியசுவாமி திருக்கோவிலுக்கு மேல் மலையில் இருக்கும் உச்சிப் பிள்ளையார் கோவில் தீப மண்டபத்தில் கார்த்திகை மகாதீபம் ஏற்றப்பட்டு வந்தத... மேலும் பார்க்க

`தாயுள்ளம் கொண்ட தாயுமானவராக முதல்வர்; இதுவே திராவிட மாடல் ஆட்சி!' - அமைச்சர் ராமச்சந்திரன்

உலக மாற்றுத்திறனாளிகள் தினத்தை முன்னிட்டு நடைபெற்ற நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவில் பேசிய வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறை அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரன், "யார் நமக்கு நல்லது செய்க... மேலும் பார்க்க