செய்திகள் :

"பாபநாச அணை திறக்க போராடிய விவசாயிகளை அராஜக கைது செய்த தவெக அரசு" - கனிமொழி கண்டனம்

post image

தூத்துக்குடி விவசாயிகள் கைது செய்யப்பட்டதை எதிர்த்து தனது பக்கத்தில் பதிவிட்டுள்ளார் திமுக நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி.

"பாபநாசம் அணையிலிருந்து பாசனத்துக்கு தண்ணீர் திறக்கக் கோரி, நியாயமான உரிமைக்காகப் போராடிய தூத்துக்குடி மாவட்ட விவசாயிகளை அராஜகமாகக் கைது செய்துள்ள தவெக அரசின் கொடுங்கோன்மை உடனடியாக நிறுத்தப்பட வேண்டும்.

தாமிரபரணி ஆற்றுப்பாசனத்தை சார்ந்துள்ள சுமார் 5,000 ஏக்கர் வாழைப் பயிர்கள் தண்ணீரின்றி கருகும் நிலையில், விவசாயிகளின் வாழ்வாதாரம் கேள்விக்குறியாகியுள்ளது.

பலமுறை மனு அளித்தும், தொடர் போராட்டங்கள் நடத்தியும் மாவட்ட நிர்வாகமும் நீர்வளத்துறையும் நடவடிக்கை எடுக்காமல், விவசாயிகளை சாலையில் போராடும் நிலைக்குத் தள்ளியுள்ளது, இந்த அரசு.

விவசாயிகளின் கோரிக்கையை உடனடியாக ஏற்று, பாபநாசம் அணையிலிருந்து 1,500 கனஅடி தண்ணீரை திறந்துவிட்டு, அவர்களின் வாழ்வாதாரத்தைப் பாதுகாக்க வேண்டும்".

'வழக்குகள் வாபஸ்; உணவுப்படி 50 ரூபாய்...' - தூய்மைப் பணியாளர்களுக்கு அமைச்சர்கள் கொடுத்த வாக்குறுதி!

பணி நிரந்தரம் மற்றும் ஊதிய உயர்வு குறித்து நீண்ட நாட்களாக போராடி வரும் தூய்மைப் பணியாளர்களுடன் தவெக அமைச்சர்கள் ஆனந்த், ஆதவ், ராஜ்மோகன், நிர்மல் குமார் ஆகியோர் பேச்சுவார்த்தை நடத்தியிருந்தனர். இந்தப் ... மேலும் பார்க்க

தூய்மைப் பணியாளர்கள் போரட்டம்: "உறுதியாக முதல்வர் சந்திப்பார்; பணி நிரந்தரம்.?" - ராஜ்மோகன்

கடந்த 16 நாட்களாக, சென்னை ரிப்பன் பில்டிங்கில் தூய்மைப் பணியாளர்கள் போராட்டம் நடத்தி வந்தனர்.இன்று காலை அவர்களைச் சந்தித்து அமைச்சர்கள் ஆனந்த், ஆதவ் அர்ஜூனா, ராஜ்மோகன், நிர்மல் குமார் ஆகியோர் பேச்சுவா... மேலும் பார்க்க

'பார்த்து ரொம்ப நாளாச்சுன்னு வந்தோம்!'- கம்யூனிஸ்ட் அலுவலகத்துக்கு தவெக அமைச்சர்களின் திடீர் விசிட்!

தவெக அமைச்சர்கள் ஆனந்த், ஆதவ், நிர்மல் குமார், ராஜ்மோகன் ஆகியோர் திடீரென மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அலுவலகத்துக்கு சென்று அக்கட்சியின் தலைவர்களோடு ஆலோசனை நடத்தியிருக்கிறார்கள். பெ.சண்முகம் - அ... மேலும் பார்க்க

பிரதமர் வேட்பாளராக விஜய்: ’என்னை சிக்கலில் விட்டு விடாதீர்கள்?’ – அமைச்சர் செங்கோட்டையன்

கோவை விமான நிலையத்தில் வருவாய்த்துறை அமைச்சர் செங்கோட்டையன் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார் அப்போது பேசிய அவர், “முதலமைச்சர் தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு பேணி காக்கவும், போதை பொருளை கட்டுப்படுத்தவும்... மேலும் பார்க்க

'தலைமைச் செயலகத்தில் அம்மா உணவகம் அமைக்கப்படுமா?' - மக்கள் கோரிக்கை!

தலைமைச் செயலகத்தில் முதல்வர் தனிப்பிரிவிலும் அமைச்சர்களின் அறையிலும் மனு கொடுக்க அதிக எண்ணிக்கையிலான மக்கள் கூடி வருகின்றனர். அவர்கள் ஏழை எளிய மக்கள் அதிகம் கூடும் தலைமைச் செயலகத்தில் அம்மா உணவகம் இரு... மேலும் பார்க்க

"இத்தாலியின் நீண்ட காலப் பிரதமர்; என் தோழிக்கு வாழ்த்துகள்"- மெலோனிக்கு மோடி வாழ்த்து

இந்தியப் பிரதமர் மோடியும், இத்தாலியப் பிரதமர் ஜார்ஜியா மெலோனியும் நல்ல நண்பர்கள்.தற்போது மெலோனி ‘இத்தாலியின் பிரதமராக நீண்ட காலம் பதவி வகிப்பவர்’ என்கிற பெருமையை அடைந்துள்ளார்.இதையொட்டி மெலோனிக்குத் த... மேலும் பார்க்க