செய்திகள் :

`பாமக பிரிவுக்கு பணம்தான் காரணம்' - புதிய கட்சி தொடங்கிய குரு மகள் கடும் தாக்கு

post image

பாட்டாளி மக்கள் கட்சியின் மூத்த தலைவராகவும்,வன்னியர் சங்கத் தலைவராகவும் இருந்தவர் ஜெ.குரு. இரண்டு முறை எம்.எல்.ஏ-வாக இருந்த குரு, உடல்நலக்குறைவு காரணமாக கடந்த 2018-ஆம் ஆண்டு உயிரிழந்தார். குருவின் மரணத்துக்கு பாமக கட்சித் தலைவர் ராமதாஸும், அவரது மகன் அன்புமணியும் உயர்சிகிச்சை அளிப்பதற்கான உதவி செய்யாததுதான் காரணம் என அவரது குடும்பத்தினர் குற்றஞ்சாட்டி வருகின்றனர். குருவுக்கு கனல் அரசு என்ற மகனும், விருதாம்பிகை என்ற மகளும் உள்ளனர். இந்நிலையில், குருவின் மகள் விருதாம்பிகை "ஜெ.குரு பாட்டாளி மக்கள் கட்சி" என்ற புதிய கட்சியை தொடங்கினார். சேலம் மாவட்டம், ஓமலூரில் கட்சியின் பெயர் மற்றும் கொடியை விருதாம்பிகை அறிமுகப்படுத்தினார். இதைத் தொடர்ந்து அவர் செய்தியாளர்களிடம் பேசுகையில், "வன்னியர் சமூக மக்களின் ஒற்றுமைக்காகவும், அனைத்து சமுதாய மக்களின் நலன் கருதி ஜெ.குரு பாட்டாளி மக்கள் கட்சி தொடங்கப்பட்டுள்ளது. கட்சியின் கொள்கை என்பது வன்னியர் உள்பட அனைத்து சமுதாய மக்களுக்கும் சமூகநீதி கிடைக்க வேண்டும் என்பதுதான். வன்னியர் சங்கமும் இதற்காகத்தான் தொடங்கப்பட்டது.

புதிய கட்சி

மருத்துவர் ராமதாஸ் தன்னுடைய மகனுக்காக சங்கம் மற்றும் பாமக கொள்கையில் இருந்து பின்வாங்கினார். ஆனால், என் தந்தை தனது உயிர்மூச்சு இருக்கும் வரை வன்னியர் சமுதாயத்துக்காகப் போராடினார். எந்த மகனுக்காக, அவரை நம்பியிருந்த வன்னியர் சமுதாயத்தை ராமதாஸ் புறந்தள்ளினாரோ, இன்று பதவிக்காக அன்புமணி ராமதாஸை இழிவுபடுத்தி பேசி வருகிறார். ராமதாஸ் மீது எனக்கு மாற்றுக் கருத்து இருக்கலாம். ஆனால், வயதான காலத்தில் அவரை அன்புமணி இழிவுபடுத்தி பேசுவதை ஏற்றுக் கொள்ள முடியாது. பாமக பிரிந்து கிடப்பதக்கு காசு தான் காரணம். 10.5 சதவீதம் தருகிறேன் என்று வன்னியரை ஏமாற்றியவர் எடப்பாடி பழனிசாமி. தற்போது, அன்புமணி அதிமுக-வுடன் கூட்டணி வைக்கிறார். வன்னியரை ஒட்டுமொத்தமாக ஒதுக்கும் எடப்பாடி பழனிசாமியுடன் கைகோர்த்து நிற்கிறார் அன்புமணி. ஊழல் குற்றச்சாட்டு இருப்பதால் அதிலிருந்து தப்பிக்க பாஜக-வுடன் கூட்டணி வைத்துள்ளார் அன்புமணி. அரசியல் லாபத்துக்காகவும், காசுக்காகவும் அன்புமணி செயல்படுகிறார். அப்பா, மகனின் துரோகத்தை வன்னியர் மக்கள் மெல்ல மெல்ல புரிந்துகொண்டு வருகிறார்கள். அதை மக்களிடம் கொண்டு செல்லவே கட்சி தொடங்கியுள்ளேன்" என்றார்.

`ஆரம்பிக்கலாங்களா..!' - கோவையில் வேலுமணி கேம் ஸ்டார்ட் - செந்தில் பாலாஜி ஷாக்!

தமிழ்நாடு அரசியல் கட்சிகள் 2026 சட்டமன்ற தேர்தலுக்கு தயாராகி வருகிறார்கள். கோவை மாவட்டம் அதிமுகவின் கடந்த சட்டமன்ற தேர்தல்களில் கோட்டையாகவே இருந்துள்ளது. இந்தமுறை அங்கு வெற்றி பெறுவதற்கு திமுக தீவிரமா... மேலும் பார்க்க

"அவருக்கு கோபம், மனக்கசப்புகள் இருந்தாலும்கூட..!"- டிடிவி NDA கூட்டணியில் இணைந்தது குறித்து அண்ணாமலை

தமிழக பா.ஜ.க முன்னாள் தலைவர் அண்ணாமலை சென்னையில் இன்று (ஜன.22) செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசியிருக்கிறார்."அண்ணன் டி.டி.வி.தினகரன் என்னிடம் முதலில் இருந்து பேசிக்கொண்டிருக்கிறார். அவரின் மனநிலை என்... மேலும் பார்க்க

`இன்றைக்கு அரசியல் வியாபாரமாக மாறிவிட்டது..!' - சமூக மாற்றத்திற்காகச் சுழலும் காந்தியவாதி ரமேஷ்!

நாமக்கல் மேற்கு பாலப்பட்டி கிராமத்தைச் சேர்ந்த ரமேஷ், காந்திய வழியில் பொதுமக்களுக்கு அரசியல் மற்றும் சமூக விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகிறார். சுற்றுச்சூழல் மேம்பாட்டிற்காகவும் தொடர்ந்து இயங்கி வரும் ர... மேலும் பார்க்க

`அப்செட் வைத்தி; இதை கொஞ்சமும் எதிர்பார்க்கல' - எடப்பாடியுடன் இணையும் வைத்திலிங்கம் ஆதரவாளர்கள்

ஓ.பன்னீர்செல்வம் அணியான அதிமுக தொண்டர்கள் உரிமை மீட்பு கழக்கத்தில் இருந்த வைத்திலிங்கம், நேற்று தனது எம்.எல்.ஏ பதவியை ராஜினாமா செய்ததுடன் நேராக அறிவாலயம் சென்று முதல்வர் ஸ்டாலின் முன்னிலையில் தன்னை தி... மேலும் பார்க்க

"ஜெயலலிதாவின் படத்தை அகற்றுவாயானு கேட்டார்; அதனால்" - அரசியலிலிருந்து விலகும் குன்னம் ராமச்சந்திரன்

பெரம்பலூர் மாவட்டம், குன்னம் சட்டமன்றத் தொகுதி முன்னாள்உறுப்பினரும், ஓ.பி.எஸ்ஸின் அதிமுக தொண்டர் உரிமை மீட்புக் குழுவின் அம்மா பேரவை மாநிலச் செயலாளர் செயலாளருமாகச் செயல்பட்டு வந்தார் ஆர்.டி.ராமச்சந்தி... மேலும் பார்க்க