செய்திகள் :

பாமாயில் கொள்முதல் விவகாரம்: ``ரூ.600 கோடிக்கு மேல் ஊழல்" - உதயநிதி குற்றச்சாட்டு

post image

தமிழ்நாட்டில் உள்ள நியாயவிலைக் கடைகளில் மக்களுக்கு வழங்கப்படும் துவரம் பருப்பைக், கடந்த காலங்களைக் காட்டிலும் குறைவான விலையில் கொள்முதல் செய்து ரூ.187 கோடியை தவெக அரசு மிச்சம் பிடித்திருப்பதாக குடிமைப் பொருள் வழங்கல் துறை தெரிவித்துள்ளது.

இது குறித்து எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் தன் எக்ஸ் பக்கத்தில், ``கழக ஆட்சியில் கிலோ ரூ.109 கொள்முதல் செய்யப்பட்ட துவரம் பருப்பை இந்தக் கோமாளி அரசு, ரூ.77.89-க்கு வாங்கியுள்ளதாகவும், இதனால் இந்த ஆட்சியில் கொள்முதல் விலை ரூ.31 வரை குறைந்து, அரசுக்கு ரூ. 750 கோடி மிச்சமாகும் என்றும், அரைகுறையாகவும் - உண்மைகளை மறைத்தும் வெளியிடப்பட்டுள்ள ஓர் செய்தியை ஆளுங்கட்சியின் Toolkits பரப்பிக் கொண்டிருக்கின்றன.

முதல்வர் விஜய்

இத்தகைய விலைக்குறைப்புக்குக் காரணம், இந்த Circus சர்க்கார் அல்ல - கழக அரசுதான் என்பதே நிதர்சனமான உண்மை. 2024 நவம்பரில் ரூ.112.69 ஆக இருந்த துவரம் பருப்பின் கொள்முதல் விலையை, படிப்படியாகக் கடந்த பிப்ரவரி மாதம் ரூ.77.99 ஆகக் குறைத்தது கழக அரசு.

இந்த உண்மைகளை மறைத்துவிட்டு, இந்த ஆட்சியில்தான் குறைந்த விலைக்கு துவரம் பருப்பு கொள்முதல் செய்யப்பட்டது என்று கழகத்தின் மீது அவதூறு பரப்புவதை ஏற்க முடியாது.

அதுமட்டுமல்ல, ரேஷன் கடைகளில் வழங்கப்படும் பாமாயில், கழக ஆட்சியில் சென்றாண்டு செப்டம்பரில் லிட்டர் ரூ.124.90 க்கும், டிசம்பரில் ரூ.121.95 க்கும், கடந்த மார்ச் மாதத்தில் ரூ.136.95-க்கும் கொள்முதல் செய்யப்பட்டது. ஆனால், இந்த Circus ஆட்சியில் கடந்த ஜூன் மாதத்தில் ரூ.154.99 க்கும், தற்போது ரூ.148-க்கும் அதிக விலை கொடுத்து கொள்முதல் செய்துள்ளனர்.

உதயநிதி ஸ்டாலின்
உதயநிதி ஸ்டாலின்

கழக ஆட்சியில் குறைந்த விலையில் கொள்முதல் செய்யப்பட்ட பாமாயிலை, கடந்த 3 மாதங்களில், லிட்டருக்கு ரூ.11 அதிகம் கொடுத்து இந்த ஆட்சியில் வாங்குகிறார்கள் என்றால், சுமார் ரூ.600 கோடிக்கு மேல் ஊழல் நடந்து இருக்கிறது என்றுதானே அர்த்தம்.

Abusive Warriorsதான் உண்மையிடம் இருந்து தூரத்தில் நிற்கிறார்கள் என்றால், இந்த ஆட்சியில் சில ஊடகங்களும் Fanboy type Sofa Ecosystem-ல் சிக்கி நிற்பது ஏன்? அவதூறு பரப்புவதை நிறுத்திவிட்டு, விலைவாசி உயர்வால் அன்றாடம் அல்லல்படும் மக்களின் துயர் துடைக்க இந்த ஆட்சியாளர்கள் முன் வர வேண்டும்" எனக் குறிப்பிட்டிருக்கிறார்.

Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group...

இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்... https://tinyurl.com/2b963ppb

வணக்கம்,

BIG BREAKINGS முதல்... அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.

ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்...https://tinyurl.com/2b963ppb

மாணவி கண்முன்னே கொல்லப்பட்ட தந்தை: ``சட்டம் ஒழுங்கு சந்தி சிரிக்கிறது CM Sir" - வானதி சீனிவாசன்

திருத்தணி பெரியார் நகரைச் சேர்ந்தவர் ராஜா. சினிமா தியேட்டர் ஊழியராகப் பணியாற்றி வருகிறார். இவரின் 17 வயது மகளை, அதே பகுதியைச் சேர்ந்த 17 வயது சிறுவன் ஒருதலையாகக் காதலித்து வற்புறுத்தியுள்ளார். காதலை ஏ... மேலும் பார்க்க

இடைத்தேர்தல்: ``பணம் கொடுத்தோம் என்பதற்கு ஆதாரம் இருக்கிறதா?" - அமைச்சர் கீர்த்தனா கேள்வி

தமிழ்நாட்டின் இடைத்தேர்தலை முன்னிட்டு எதிர்க்கட்சிகளான திமுக - அதிமுக தேர்தல் பிரசாரத்தில் தவெக அரசு மீது கடுமையான குற்றச்சாட்டுகளை முன்வைத்தன. அதைத் தொடர்ந்து இடதுசாரி கட்சிகள் தவெக வாக்குக்கு பணம் க... மேலும் பார்க்க

கள்ளக்குறிச்சி: `50 ஆண்டு போராட்டம்’ - கோயிலின் பூட்டை உடைத்து தலித் மக்களை வழிபட வைத்த பெண் எஸ்.பி

கள்ளக்குறிச்சி மாவட்டம், சின்னசேலத்துக்கு அருகிலிருக்கிறது குரால் கிராமம். அங்கு தனிநபர் ஒருவரின் நிலத்தில் பழமையான ஸ்ரீ கலியுக சீனுவாசப் பெருமாள் கோயில் அமைந்திருக்கிறது. அந்தக் கோயிலுக்கு, தலித் மக்... மேலும் பார்க்க

திருச்சி: ``உங்களுக்கு என்னதான் சார் பிரச்னை?"- முதல்வர் பிரசாரம் குறித்த கேள்விக்கு அமைச்சர் ரமேஷ்

திருச்சி ஸ்ரீரங்கம் சட்டமன்றத் தொகுதிக்கு உட்பட்ட பகுதியில் சமூக நலத்துறை சார்பில் கர்ப்பிணித் தாய்மார்களுக்கான சமுதாய வளைகாப்பு விழா நடைபெற்றது. இந்த நிகழ்வில் அமைச்சர் ரமேஷ், எம்.பி கிறிஸ்டோபர் திலக... மேலும் பார்க்க

"தம்பி விஜய்க்கு தேர்தலில் பயம் இருப்பது தெள்ளத்தெளிவாகத் தெரிகிறது" - திமுக எம்.பி. கனிமொழி

மதுராந்தகம், தாராபுரம் தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் நாளை (அக்.6) நடைபெற இருக்கிறது. இந்நிலையில் தூத்துக்குடி விமான நிலையத்தில் திமுக எம்.பி கனிமொழி செய்தியாளர்களைச் சந்தித்து பேசியிருக்கிறார். "தூய சக்... மேலும் பார்க்க

உக்ரைன் போர்: இந்தியாவைப் பாராட்டும் புதின்; இந்தியாவின் திட்டத்திற்கு உக்ரைன் 'டிக்'; என்ன நடந்தது?

உலக நாடுகளுக்கு இடையே ‘நடுநிலை’ என்பதற்கு எப்போதுமே இந்தியாவிற்குத் தனிப்பெயருண்டு... சிறப்புண்டு.இது ரஷ்யா-உக்ரைன் போர் நிறுத்த முயற்சியில் மீண்டும் ஒருமுறை நிரூபணமாகி உள்ளது.இந்தியாவின் நிலைப்பாடே ‘... மேலும் பார்க்க