செய்திகள் :

'பார்த்து ரொம்ப நாளாச்சுன்னு வந்தோம்!'- கம்யூனிஸ்ட் அலுவலகத்துக்கு தவெக அமைச்சர்களின் திடீர் விசிட்!

post image

தவெக அமைச்சர்கள் ஆனந்த், ஆதவ், நிர்மல் குமார், ராஜ்மோகன் ஆகியோர் திடீரென மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அலுவலகத்துக்கு சென்று அக்கட்சியின் தலைவர்களோடு ஆலோசனை நடத்தியிருக்கிறார்கள்.

பெ.சண்முகம் - அமைச்சர் ஆனந்த்
பெ.சண்முகம் - அமைச்சர் ஆனந்த்

இந்த ஆலோசனைக்குப் பிறகு பத்திரிகையாளர்களை சந்தித்த அமைச்சர் நிர்மல் குமார், 'சி.பி.எம் அலுவலகத்தில் அக்கட்சி தலைவர்களை சந்தித்தோம். இவர்களை சந்தித்து நீண்ட நாட்கள் ஆகிவிட்டதால் மரியாதை நிமித்தமாக சந்தித்தோம்.

தூய்மைப் பணியாளர்களின் கோரிக்கையை பேசி முடித்திருக்கிறோம். டாஸ்மாக் ஊழியர்களுக்கு சம்பளத்தை உயர்த்தி கொடுத்தும் போராட்டம் நடந்து கொண்டிருக்கிறது. அதைப் பற்றியெல்லாம் பேசினோம். கம்யூனிஸ்ட்டுகளின் புள்ளிவிவரத்தை கேட்ட தாசில்தார் மீது நடவடிக்கை எடுத்திருக்கிறோம்.

தவெக அமைச்சர்கள்
தவெக அமைச்சர்கள்

அது அரசுக்கு தெரியாமல் நடந்திருக்கிறது. பல்கலைகழகங்களுக்கு இடதுசாரி மாணவர்கள் குறித்து சுற்றறிக்கை அனுப்பப்பட்ட சம்பவத்துக்கும் வருத்தம் தெரிவித்தோம். இது மரியாதை நிமித்தமான சந்திப்பு' என்றார்.

அடுத்ததாக இந்திய கம்யூனிஸ்ட் கட்சி அலுவலகம் மற்றும் மதிமுக பொதுச்செயலாளர் வைகோவின் இல்லத்துக்கும் தவெக அமைச்சர்கள் செல்லவிருப்பதாக தகவல். நாளை விசிக தலைவர் திருமாவளவனை சந்திக்கவும் திட்டமிட்டிருக்கின்றனராம்.

தூய்மைப் பணியாளர்கள் போரட்டம்: "உறுதியாக முதல்வர் சந்திப்பார்; பணி நிரந்தரம்.?" - ராஜ்மோகன்

கடந்த 16 நாட்களாக, சென்னை ரிப்பன் பில்டிங்கில் தூய்மைப் பணியாளர்கள் போராட்டம் நடத்தி வந்தனர்.இன்று காலை அவர்களைச் சந்தித்து அமைச்சர்கள் ஆனந்த், ஆதவ் அர்ஜூனா, ராஜ்மோகன், நிர்மல் குமார் ஆகியோர் பேச்சுவா... மேலும் பார்க்க

பிரதமர் வேட்பாளராக விஜய்: ’என்னை சிக்கலில் விட்டு விடாதீர்கள்?’ – அமைச்சர் செங்கோட்டையன்

கோவை விமான நிலையத்தில் வருவாய்த்துறை அமைச்சர் செங்கோட்டையன் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார் அப்போது பேசிய அவர், “முதலமைச்சர் தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு பேணி காக்கவும், போதை பொருளை கட்டுப்படுத்தவும்... மேலும் பார்க்க

'தலைமைச் செயலகத்தில் அம்மா உணவகம் அமைக்கப்படுமா?' - மக்கள் கோரிக்கை!

தலைமைச் செயலகத்தில் முதல்வர் தனிப்பிரிவிலும் அமைச்சர்களின் அறையிலும் மனு கொடுக்க அதிக எண்ணிக்கையிலான மக்கள் கூடி வருகின்றனர். அவர்கள் ஏழை எளிய மக்கள் அதிகம் கூடும் தலைமைச் செயலகத்தில் அம்மா உணவகம் இரு... மேலும் பார்க்க

"இத்தாலியின் நீண்ட காலப் பிரதமர்; என் தோழிக்கு வாழ்த்துகள்"- மெலோனிக்கு மோடி வாழ்த்து

இந்தியப் பிரதமர் மோடியும், இத்தாலியப் பிரதமர் ஜார்ஜியா மெலோனியும் நல்ல நண்பர்கள்.தற்போது மெலோனி ‘இத்தாலியின் பிரதமராக நீண்ட காலம் பதவி வகிப்பவர்’ என்கிற பெருமையை அடைந்துள்ளார்.இதையொட்டி மெலோனிக்குத் த... மேலும் பார்க்க

`Rapido நிறுவனத்தால் மட்டுமே 2.5 கோடி பேருக்கு வேலைவாய்ப்பு; எனவே, மாநில அரசுகள்..!' - நிதின் கட்கரி

இந்தியாவின் வேலைவாய்ப்பின்மைப் பிரச்னை குறித்தும், 22 லட்சம் வேலைவாய்ப்புகள் குறித்தும் மத்திய போக்குவரத்துத் துறை அமைச்சர் நிதின் கட்கரி பேசியுள்ளதாவது...“நமது நாட்டில் கிட்டத்தட்ட 22 லட்சம் டிரைவர்க... மேலும் பார்க்க

`புதுச்சேரி வருகிறார் நித்தியானந்தா!' - முதல்வர் ரங்கசாமியிடம் தியான பீட நிர்வாகிகள் சொன்னதென்ன ?

புதுச்சேரி அடுத்த ஏம்பலம் கிராமத்தில் அமைக்கப்பட்டிருக்கும் கைலாசா நித்யானந்தா தியான பீடத்துக்கு, குடமுழுக்கு செய்வதற்கான நடவடிக்கைகளை அதன் நிர்வாகிகள் மேற்கொண்டு வருகின்றனர். அதன் ஒரு பகுதியாக புதுச்... மேலும் பார்க்க