செய்திகள் :

பாலியல் வன்கொடுமை செய்து சிறுமி கொலை: சிக்கிய `4' முடிகளால் திருப்பம்; 17 ஆண்டுகளாக தொடரும் விசாரணை!

post image

குஜராத் மாநிலம், அகமதாபாத்தைச் சேர்ந்த சங்கீதா (7) என்ற சிறுமி, 2009ம் ஆண்டு பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலைசெய்யப்பட்டார். 2009ம் ஆண்டு பிப்ரவரி மாதம், பாபுநகரில் வசித்து வந்த சங்கீதா பக்கத்து வீட்டில் விளையாடச் சென்று, பின்னர் தனது வீட்டிற்கு அருகில் ஐஸ் கோலா வாங்கச் சென்றார். அங்கிருந்து அவர் காணாமல் போனார். மூன்று நாள்களுக்குப் பிறகு, அவர் உடல் அருகிலுள்ள அரசுப் பள்ளியின் பொதுக் கழிப்பறையில் கண்டெடுக்கப்பட்டது. விசாரணையில் அவர் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலைசெய்யப்பட்டது உறுதியானது. இக்கொலை தொடர்பாக விசாரித்த போலீஸார், அப்பகுதியைச் சேர்ந்த செக்யூரிட்டி கார்டு ஒருவரை கைதுசெய்தனர்.

ஆனால் இறுதியில் அவர் குற்றவாளி இல்லை என்று தெரியவந்தது. அதேசமயம் கடந்த 17 ஆண்டுகளாக குற்றவாளி யார் என்று கண்டுபிடிக்கப்படாமல் இருந்தது. கொலைசெய்யப்பட்ட சிறுமியின் ஆடைகளை தடயங்களாக போலீஸார் பாதுகாத்து வைத்திருந்தனர். சிறுமியின் தந்தை போபாஜி தனது மகளுக்கு நீதி கிடைக்க தொடர்ந்து போராடி வந்தார். தொண்டு நிறுவனம், மனித உரிமை கமிஷன் மற்றும் பிரதமர் அலுவலகம் என தொடர்ந்து ஒவ்வோர் இடத்திலும் முறையிட்டுக்கொண்டே இருந்தார்.

அவரது இடைவிடாத முயற்சி காரணமாக இவ்வழக்கு 2024ம் ஆண்டு மறுவிசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது. புதிதாக விசாரிக்க நியமிக்கப்பட்ட அதிகாரிகள், கொலை செய்யப்பட்ட போது சிறுமி அணிந்திருந்த ஆடையை மறு ஆய்வு செய்தனர். அவ்வாறு ஆய்வு செய்யப்பட்டதில் அந்த ஆடையில் 4 முடிகள் ஒட்டிக்கொண்டிருந்தன.

அந்த முடிகளை மீட்டு டி.என்.ஏ.பரிசோதனைக்கு அனுப்பி இருக்கின்றனர். அதோடு அந்த முடிகளின் அடிப்படையில் போலீஸார் அப்பகுதியைச் சேர்ந்த 4 பேரை பிடித்துச் சென்று விசாரித்து வந்தனர். அவர்களில் இரண்டு பேர் விடுவிக்கப்பட்டுவிட்ட நிலையில், எஞ்சிய இரண்டு பேரிடம் தொடர்ந்து விசாரிக்கப்பட்டு வருகிறது.

சங்கீதாவின் உடையில் கண்டுபிடிக்கப்பட்ட முடி இந்த இரண்டு பேரில் ஒருவரது முடியாகத்தான் இருக்க வேண்டும் என்று போலீஸார் நம்பிக்கை தெரிவித்துள்ளனர். டி.என்.ஏ பரிசோதனை முடிவு வெளியான பிறகுதான் இதற்கு விடை கிடைக்கும். கடந்த 17 ஆண்டுகளில் இவ்வழக்கு தொடர்பாக போலீஸார் 150 பேரிடம் விசாரணை நடத்தி இருக்கின்றனர்.

தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு வழக்கு: குற்றஞ்சாட்டும் தவெக; சவால்விடும் திமுக; காத்திருக்கும் நீதி

முந்தைய அ.தி.மு.க ஆட்சியில் 2018, மே 22-ம் தேதி தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிரான மக்கள் போராட்டத்தில் ஏற்பட்ட கலவரத்தில், 2 பெண்கள் உட்பட 13 பேர் போலீஸாரால் கொல்லப்பட்டனர். 100-க்கும் மேற்பட்டோர... மேலும் பார்க்க

கேரளம்: ஒரு வயது குழந்தையின் கழுத்தை அறுத்து கொன்ற தாய்; திருமண நாளில் இளம்பெண் செய்த கொடூரம்

கேரள மாநிலம் ​திருவனந்தபுரம் மாவட்டம் விளவூர்க்கல் பொற்றா பகுதியைச் சேர்ந்தவர் அபிஜித். மருத்துவப் பிரதிநிதியாகப் பணியாற்றி வருகிறார். இவரது மனைவி கிறிஸ்டி (29). இவர்களுக்கு நான்கு ஆண்டுகளுக்கு முன்பு... மேலும் பார்க்க

காட்பாடி: தேவாலய கட்டுமானப் பணி விபத்தில் 3 பேர் பலி; ஒப்பந்ததாரர் மீது வழக்குப் பதிவு!

வேலூர் மாவட்டம், காட்பாடி அடுத்த ஆந்திர மாநில எல்லையில் மந்தி கிருஷ்ணாபுரம் கிராமம் உள்ளது. இந்த கிராமத்தில், புதிதாக சி.எஸ்.ஐ தேவாலயம் கட்டும் பணிகள் நடைபெற்று வந்தன. இந்த நிலையில், நேற்று மாலை கான்க... மேலும் பார்க்க

ஈரோடு: 3.50 ஏக்கர் நிலத்தை ரிஜிஸ்டர் செய்ய ரூ.7 லட்சம் லஞ்சம்; சப்-ரிஜிஸ்டர், பத்திர எழுத்தர் கைது

ஈரோடு மாவட்டம் கவுந்தப்பாடி ராயர் பாளையத்தைச் சேர்ந்தவர் விவசாயி கார்த்திக். இவருக்குச் சொந்தமான மூன்றரை ஏக்கர் நிலத்தைப் பதிவு செய்வதற்காக கவுந்தப்பாடி சப்-ரிஜிஸ்டர் சங்கரை அணுகியுள்ளார். 3.50 ஏக்கர்... மேலும் பார்க்க

சென்னை: 'ஆபாச செய்கை, போட்டோ மார்பிங்' - GST பெண் ஆபீஸருக்கு செக்ஸ் டார்ச்சர்; சக அதிகாரி கைது

சென்னை முகப்பேரில் ஜி.எஸ்.டி அலுவலகம் செயல்பட்டு வருகிறது. இந்த அலுவலகத்தில் அதிகாரியாக ஆந்திராவைச் சேர்ந்த இளம்பெண் ஒருவர் பணியாற்றி வருகிறார். இவருடன் மேற்கு வங்காளத்தைச் சேர்ந்த சவுரவ் என்பவரும் அத... மேலும் பார்க்க

பிரதீப் ராஜ் கொலை: 'கந்துவட்டி பிரச்னை; விநாயகர் சிலை' - சென்னை துணை நடிகர் கொலையின் பின்னணி என்ன?

சென்னை திருவொற்றியூர் மேற்கு மாடவீதியைச் சேர்ந்தவர் ராணி. இவரின் மகன் பிரதீப்ராஜ் (34). இவர் துணை நடிகராகவும் சென்னை துறைமுகத்தில் ஒப்பந்த அடிப்படையிலும் வேலைப்பார்த்து வந்தார். இந்தநிலையில் சில தினங்... மேலும் பார்க்க