செய்திகள் :

“பால் கொள்முதல் விலையேற்றம் போதாது!” - கொதிக்கும் பால் உற்பத்தியாளர்கள்... திகைக்கும் அரசு!

post image

ஆவின் பால் கொள்முதல் விலையை, அடுத்தடுத்து இரண்டு முறை உயர்த்தியிருக்கும் சூழலிலும் ‘விலையேற்றம் போதாது’ எனக்கூறி பால் உற்பத்தியாளர்கள் பொங்கிவருவது தமிழக அரசுக்கு தலைவலியை ஏற்படுத்தியிருக்கிறது!

கடந்த 2022-ம் ஆண்டு தி.மு.க ஆட்சியின்போது, ஆவின் பால் கொள்முதல் விலை லிட்டருக்கு ரூ.3 உயர்த்தி அறிவிக்கப்பட்டது. அதன்பிறகு கடந்த 4 ஆண்டுகளாக விலை உயர்த்தப்படவில்லை.

இந்த நிலையில், புதிதாக பொறுப்பேற்றுள்ள த.வெ.க அரசு, கடந்த 19-8-2026 அன்று ‘ 4.3% கொழுப்பு சத்து மற்றும் 8.2% இதர சத்துகள் அடங்கிய ஒரு லிட்டர் பாலுக்கு தற்போது ரூ.38 வழங்கப்பட்டு வருகிறது. இனி லிட்டர் ஒன்றுக்கு கூட்டுறவு சங்கம் மூலம் கூடுதலாக ஒரு ரூபாயும் அரசு ஊக்கத் தொகையாக கூடுதலாக இரண்டு ரூபாயும் சேர்த்து, ரூ.41 என்ற விலையில் பால் கொள்முதல் செய்யப்படும்” என்று அறிவித்தது.

பால் கொள்முதல்

ஆனால், இந்த விலையேற்றம் போதாது எனக்கூறி, பால் உற்பத்தியாளர் சங்கங்கள் எதிர்ப்பு தெரிவித்ததையடுத்து, கடந்த 31-8-2026 அன்று மீண்டும் லிட்டருக்கு ரூ.3 என்ற அளவில் விலையை உயர்த்தி அறிவித்துள்ளது தமிழக அரசு. இதனால் பால் கொள்முதல் விலை ரூ.44-ஆக உயர்ந்துள்ளது. ஆனால் ‘இந்த விலையேற்றமும் போதாது’ எனக்கூறி தொடர்ந்து எதிர்ப்புக்குரல் எழுப்பி வருகின்றனர் பால் உற்பத்தியாளர்கள்.

இதையடுத்து, ‘என்னதான் பிரச்னை...?’ என்ற கேள்வியோடு தமிழ்நாடு பால் உற்பத்தியாளர் சங்கத்தின் மாநில பொதுச்செயலாளர் பெருமாளிடம் பேசியபோது, “10 லிட்டர் பால் கொடுக்கக்கூடிய ஒரு மாட்டுக்கு தீவனம் உள்ளிட்ட இடுபொருட்களுக்கான செலவு மட்டுமே 420 ரூபாய் ஆகிறது என்று ஆவின் அதிகாரிகளே புள்ளிவிவரங்கள் வைத்துள்ளனர்.

விஜய்
விஜய்

எனவேதான் ‘ஒரு லிட்டருக்கான கொள்முதல் விலையை 50 ரூபாயாக உயர்த்த வேண்டும்; அரசின் ஊக்கத்தொகையாக 10 ரூபாய் வழங்க வேண்டும்; மாட்டுத் தீவனத்தின் விலையில் 50% மானியமாக வழங்கவேண்டும்’ என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி நாங்கள் பல வருடங்களாக போராடி வருகிறோம்.

ஆனால், தமிழக அரசோ லிட்டருக்கான கொள்முதல் விலையை மட்டும் ரூ.44 என்று உயர்த்தியுள்ளது. ‘கொள்முதல் விலை, ஊக்கத்தொகை என மொத்தமாக ஒரு லிட்டர் பாலுக்கு 20 ரூபாயாக உயர்த்தித் தரவேண்டும்’ என்ற எதிர்பார்ப்பில் இருந்த பால் உற்பத்தி விவசாயிகளுக்கு, அரசின் இந்த அறிவிப்பு மிகுந்த ஏமாற்றத்தைக் கொடுத்துள்ளது.

இப்போதும்கூட பால் விவசாயிகள் அனைவருக்கும் 44 ரூபாய் கிடைத்துவிடாது. ஏனெனில், அரசு அறிவித்திருக்கிற இந்த விலை உயர்வு என்பது, 4.3% கொழுப்பு சத்து, 8.2% இதர சத்துகள் அடங்கிய பாலுக்கு மட்டும்தான்.

தமிழ்நாட்டில் உற்பத்தியாகும் 90% பாலில், இந்த விகிதாச்சாரத்தில் பால் கிடைக்காது. எனவே, பாலின் தரத்தைப் பொறுத்து 2 அல்லது 3 ரூபாய் குறைத்துதான் தருவார்கள். அந்தப் பணத்தையும் வாரம் தோறும் பட்டுவாடா செய்யமாட்டார்கள். மாதக்கணக்கில் இழுத்தடிப்பார்கள்.

இதுவே தனியார் பால் நிறுவனங்கள், ஆவினை விடவும் லிட்டருக்கு 10 ரூபாய் அதிகம் விலை கொடுத்து கொள்முதல் செய்கின்றனர். பாலின் தரத்துக்கு ஏற்ற விலை நிர்ணயம் என்பதும் அவர்களிடம் கிடையாது. அடுத்து, வாரம்தோறும் பணப் பட்டுவாடா செய்துவிடுகின்றனர். எனவே, ஆவினுக்கு வரவேண்டிய பால் அனைத்தும் தனியார் நிறுவனங்களுக்குத்தான் செல்கிறது. இதனால்தான் பொதுமக்களுக்குத் தேவையான அளவில் பால் வழங்க முடியாமல் ஆவின் நிறுவனம் திண்டாடி வருகிறது” என்றார் ஆதங்கத்துடன்.

இவ்விவகாரத்தில் ஆவினின் நடைமுறை சிக்கல்கள் குறித்துப் பேசுகிற ‘தென்னிந்திய பால் போக்குவரத்து சங்க’ தலைவர் வைத்தியநாதன், “மகாராஷ்டிராவில் ஒரு லிட்டர் பால் 110 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. கொள்முதல் விலை 67 ரூபாய்க்கும் அதிகமாக இருக்கிறது. ஆனால், தமிழ்நாட்டிலோ அரிசி, பருப்பு, சர்க்கரை, எண்ணெய் என அனைத்து அத்தியாவசிய பொருட்களின் விலையும் கூடுகிறதே தவிர... பால் விற்பனை விலையோ, கொள்முதல் விலையோ யானைப் பசிக்கு சோளப் பொரி கொடுத்த கதையாக மட்டுமே உயர்கிறது.

ஏற்கெனவே ஆவின் நஷ்டத்தில் இயங்கிக் கொண்டிருக்கிறது. இந்த சூழலில், இப்போது அதிகரிக்கப்பட்டிருக்கும் 6 ரூபாயையும் அரசே நேரடியாக பால் சொஸைட்டிக்கு வழங்க வேண்டும். அதையும் குறைந்தபட்சம் 10 நாட்களுக்கு ஒருமுறையாவது பட்டுவாடா செய்யவேண்டும்." என்கிறார்.

இவ்விவகாரம் குறித்து விளக்கம் கேட்பதற்காக ஆவின் நிர்வாக இயக்குநர் அஜித் யாதவ், பால்வளத்துறை அமைச்சர் விஜயலட்சுமியைத் தொடர்புகொண்டோம். இருவருமே நமது அழைப்பை ஏற்கவில்லை! இதைத்தொடர்ந்து அமைச்சரின் உதவியாளரைத் தொடர்புகொண்டு கேட்டபோது, “அமைச்சர் சட்டமன்றத்தில் பேசியதையே பதிலாக போட்டுக்கொள்ளுங்கள்” எனக்கூறி இணைப்பைத் துண்டித்துக்கொண்டார்.

மணல் கடத்தலில் ரூ.1000 கோடி ஊழல்? - மராத்தா இட ஒதுக்கீடு போராட்டக்காரர் மனோஜ் ஜராங்கே மீது புகார்

மகாராஷ்டிராவில் மராத்தா இட ஒதுக்கீடு கோரி போராட்டம் நடத்தி வருபவர் மனோஜ் ஜராங்கே பாட்டீல். ஏற்கனவே பல முறை இதற்காக உண்ணாவிரதம் இருந்துள்ளார். தற்போது மீண்டும் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளார். தற்போது மனோ... மேலும் பார்க்க

"தியாகி இமானுவேல் சேகரன், சமூக நீதியை நிலைநாட்டுவதற்காக தன் உயிரைத் தந்தவர்" - குடியரசு துணைத்தலைவர்

"தியாகி இமானுவேல் சேகரனைப் போன்ற தேசிய உள்ளம் கொண்ட மகத்தான மனிதர்களைப் போற்றுவது இந்தத் தேசத்திற்கே பெருமை" என்று குடியரசு துணைத் தலைவர் சி.பி. ராதாகிருஷ்ணன் கூறியுள்ளார்.இமானுவேல் சேகரன் நினைவிடம்வி... மேலும் பார்க்க

“சுயநலத்தை மறுத்து நாட்டின் நலனைப் பார்த்தால் தடை?” - BRICS-ல் ட்ரம்ப் மீது புதின் மறைமுகத் தாக்கு!

டெல்லியில் நடக்கும் பிரிக்ஸ் மாநாட்டிற்காக இந்தியாவிற்கு வந்திருக்கிறார் ரஷ்ய அதிபர் புதின். இந்தியப் பிரதமர் மோடி உடனான தனிப்பட்ட சந்திப்பிற்குப் பிறகு, பிரிக்ஸ் வணிக மன்றத்தின் தலைவர்கள் அமர்வில் ப... மேலும் பார்க்க

மேற்கு வங்கம் அசைவ உணவு சர்ச்சை: கோயிலில் மீன் வறுவல் சாப்பிட்ட முதல்வர்; என்ன சொல்கிறது பாஜக?

நாட்டின் பிற பகுதிகளில், கோவிலில் அசைவ உணவு உண்பது அனுமதிக்கப்படாத ஒன்றாக இருக்கிறது. ஆனால் தமிழகத்தில் சில கோயில்களில் அசைவ உணவு போடப்படுகிறது. கோயில்களில் அசைவ உணவுக்கு இருக்கும் நடைமுறையை மாற்றும் ... மேலும் பார்க்க

BRICS: "ஒரு நாட்டின் பொருளாதாரப் பாதுகாப்பும், பிராந்தியப் பாதுகாப்பும் தனித்தனியல்ல" - ஈரான் அதிபர்

டெல்லியில் பிரிக்ஸ் உச்சிமாநாடு நடைபெற்று வருகிறது. இந்த மாநாட்டில் கலந்துகொள்ளப் பல்வேறு உலகத் தலைவர்கள் இந்தியாவிற்கு வந்திருக்கிறார்கள். அதில் ஈரான் அதிபர் மசூத் பெசெஷ்கியானும் ஒருவர். இன்று மாநாட்... மேலும் பார்க்க

"பிரிக்ஸ் தொழில்முறைக் கவுன்சிலிடம் எனக்கு 'மூன்று' வேண்டுகோள்கள்!" - BRICS மாநாட்டில் மோடி பேச்சு

தற்போது டெல்லியில் பிரிக்ஸ் உச்சிமாநாடு நடைபெற்று வருகிறது. இந்த மாநாட்டில் பல்வேறு உலகத் தலைவர்கள் கலந்து கொண்டிருக்கின்றனர். இந்த ஆண்டு பிரிக்ஸ் தலைமை சுழற்சி முறையில் இந்தியாவிற்கு வந்துள்ளதால், இந... மேலும் பார்க்க