செய்திகள் :

'பிரசாரத்திற்காக தங்கையை களமிறக்கிய ஆதவ் அர்ஜூனா!' - பின்னணி என்ன?

post image

தவெக சார்பில் சென்னை வில்லிவாக்கம் தொகுதியில் அக்கட்சியின் தேர்தல் மேலாண்மைப் பொதுச்செயலாளர் ஆதவ் அர்ஜூனா வேட்பாளராக களமிறங்குகிறார். இந்நிலையில், வில்லிவாக்கம் தொகுதியில் ஆதவ் அர்ஜூனா தன்னுடைய தங்கையை பிரசாரத்திற்கு களமிறக்கியிருக்கிறார்.

Seetha Lakshmi
Seetha Lakshmi

தவெக சார்பில் வில்லிவாக்கத்தில் கடந்த மார்ச் 8 ஆம் தேதி மகளிர் தின நிர்வாகிகள் கூட்டம் நடந்திருந்தது. அந்தக் கூட்டத்தின் போதே ஆதவ் அர்ஜூனாதான் வில்லிவாக்கத்தில் போட்டியிடப் போகிறார் என்பது உறுதியாகிவிட்டது.

இந்நிலையில் அந்தக் கூட்டத்தில் பேசியிருந்த ஆதவ் அர்ஜூனா, 'அடுத்த வாரத்திலிருந்தி வீடு வீடாக பிரசாரத்தை தொடங்கப் போகிறேன். என் சார்பில் என் தங்கை சீதா லெட்சுமியும் பிரசாரம் செய்வார்' என தங்கையை மேடையிலேயே நிர்வாகிகளுக்கு அறிமுகமும் செய்து வைத்தார். மார்ச் 29 ஆம் தேதி விஜய் தனது 234 வேட்பாளர்களையும் அறிவித்தார்.

Seetha Lakshmi
Seetha Lakshmi

இதைத்தொடர்ந்து ஆதவ் அர்ஜூனாவும் மார்ச் 31 ஆம் தேதி முதல் தொகுதிக்குள் வீடு வீடாக பிரசாரம், தெருமுனைக் கூட்டம், பொதுக்கூட்டம் என செயல்பட்டு வருகிறார். இந்நிலையில் ஆதவ் முன்பு கூறியதைப் போல நேற்றிலிருந்து தனது தங்கையையும் தொகுதியில் களமிறக்கியிருக்கிறார். அவரும் வீடு வீடாக போய் அண்ணனுக்காக வாக்கு சேகரித்துக் கொண்டிருக்கிறார். பெண்களின் வாக்குகளை கவர்வதற்காக ஆதவ் தனது தங்கையை பிரசாரத்துக்கு பயன்படுத்துவதாக கட்சி வட்டாரத்தில் பேசிக்கொள்கின்றனர்.

கரூர்: "சட்டை அவரோடது தான்; ஆனால், மாப்பிள்ளை அவரில்லை.!" - திமுக வேட்பாளரை கிண்டல் செய்த அண்ணாமலை

கரூர், வெங்கமேடு பகுதியில் அதிமுக வேட்பாளர், முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கரை ஆதரித்து பாஜக முன்னாள் மாநில தலைவர் அண்ணாமலை பிரச்சாரம் செய்தார்.இதில் அதிமுக, பாஜக உள்ளிட்ட கூட்டணி கட்சி நிர்வாகிகள... மேலும் பார்க்க

பிரசாரத்துக்கு விடுமுறை எடுக்கும் விஜய் - கவலையில் தவெக வேட்பாளர்கள்?

சட்டமன்றத் தேர்தலுக்கான பிரசாரம் ஓய இன்னும் சரியாக 10 நாட்களே இருக்கிறது. எல்லா கட்சித் தலைவர்களும் அதிகமான தொகுதிகளை கவர் செய்ய சுற்றி சுழன்று ஓடிக்கொண்டிருக்கிறார்கள். ஆனால், தவெக தலைவர் விஜய் மட்டு... மேலும் பார்க்க

தமிழக உள்துறை செயலாளர் மாற்றம்: தேர்தல் ஆணையம் அதிரடி உத்தரவு!

வருகிற தமிழ்நாடு சட்டமன்ற தேர்தலையொட்டி, தமிழ்நாட்டில் தலைமை செயலாளர் உள்ளிட்ட அரசு அதிகாரிகளை மாற்றி வருகிறது இந்திய தேர்தல் ஆணையம்.அதன் ஒரு பகுதியாக, இப்போது தமிழ்நாடு உள்துறை செயலாளர் மாற்றப்பட்டுள... மேலும் பார்க்க

"பா.ஜ.க-வுக்கு பன்முகம் கிடையாது, கோர முகம் தான் இருக்கிறது"- செல்வபெருந்தகை கடும் தாக்கு!

கன்னியாகுமரி மாவட்டத்தில் காங்கிரஸ் சார்பில் போட்டியிடும் கிள்ளியூர் வேட்பாளர் ராஜேஷ்குமார், குளச்சல் வேட்பாளர் தாரகை கத்பர்ட், விளவங்கோடு வேட்பாளர் டி.டி.பிரவீன் ஆகியோரை ஆதரித்து தமிழக காங்கிரஸ் தலைவ... மேலும் பார்க்க

முழுமையாக திறக்கப்படாத ஹார்முஸ் ஜலசந்தி - ஈரான் 'இதை' மறந்ததே காரணம்!

மூன்று நாள்களாக ஹார்முஸ் ஜலசந்தி திறக்கப்பட்டுள்ளது.இருந்தும் ஈரான் அனுமதித்த கப்பல்கள் மட்டும் ஹார்முஸைக் கடந்து வருகிறது‌.ஆனால், அந்தக் கப்பல்களையும் வழக்கமான பாதையில் அல்லாமல், ஹார்முஸிலேயே வேறு பா... மேலும் பார்க்க

TVK Vijay: "அனைவரும் களத்தில் இறங்கி பணியாற்றுங்கள்.!"- தவெக தலைவர் விஜய் வேண்டுகோள்

2026 தமிழக சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய், அனைத்து சட்டமன்ற தொகுதிகளிலும் தனித்து போட்டியிட இருக்கிறார். இந்நிலையில் தவெக தலைவர் விஜய் தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டிருக்க... மேலும் பார்க்க