செய்திகள் :

`பிரதமர் முகம் விஜய்'- தவெக ஸ்டன்ட், அப்செட்டில் விசிக; கொந்தளிக்கும் இரண்டாம் கட்ட நிர்வாகிகள்!

post image

'இன்றைய முதல்வர் விஜய், நாளைய பிரதமர்' என தமிழக வெற்றிக் கழக நிர்வாகிகள் பிரசாரம் செய்துவருவதால், கடும் அப்செட்டில் இருக்கிறார்கள் வி.சி.க நிர்வாகிகள். 'பாஜக-வை வீழ்த்துவதே நோக்கம்' என்பதை முதல்வர் விஜய் அறிவிக்க வேண்டும் எனக் கோரிக்கை விடுத்திருக்கிறார், வி.சி.க துணைப் பொதுச்செயலாளர் எழில் கரோலின். அவர் மட்டுமல்லாமல் தொடர்ச்சியாக வி.சி.க-வின் இரண்டாம் கட்ட நிர்வாகிகள் த.வெ.க செயல்பாடுகளை விமர்சித்துவருகிறார்கள்!

விஜய் - திருமாவளவன்
விஜய் - திருமாவளவன்

இது தொடர்பாக நம்மிடம் பேசிய வி.சி.க சீனியர்கள், "குடியரசுத் தலைவர் ஆட்சி வந்துவிடக் கூடாது என்பதால்தான் த.வெ.க ஆட்சியமைக்க ஆதரவளித்தோம். ஆனால் சமீப காலமாக த.வெ.க அரசின் செயல்பாடுகள் எங்களுக்கு திருப்தியளிக்கவில்லை. பா.ஜ.க எதிர்ப்பில் அவர் கூர்மையாக இல்லை. தலைமைச் செயலாளர் சாய்குமார் வலதுசாரி கண்ணோட்டத்துடன் செயல்படுவதாக இடதுசாரித் தலைவர்கள் ஆர்ப்பாட்டம் நடத்தியும், அவர்மீது நடவடிக்கை இல்லை. இப்போது புதிதாக, இந்தியா கூட்டணியை சீண்டிப் பார்க்கும் ஆயதத்தைக் கையிலெடுத்திருக்கிறார்கள்" என்றனர் கொதிப்புடன்.

அக்கட்சியின் துணைப் பொதுச்செயலாளர் ஏழில் கரோலின் விடுத்துள்ள அறிக்கையில், "தமிழகத்திலிருந்து எதிர்காலத்தில் ஒரு பிரதமர் உருவாக்கப்பட வேண்டும். நம் குரல் சட்டமன்றத்தில் ஒலித்ததைப் போலவே, நாடாளுமன்றத்திலும் ஒலிக்க வேண்டும்" என்று அமைச்சர் ஆதவ் அர்ஜுனா கூறினார். அதைத் தொடர்ந்து பேசிய தவெக நிர்வாகிகள், "இன்றைய முதல்வர் விஜய்... நாளைய பிரதமர்" எனப் பேசி வருகின்றனர். தங்கள் கட்சியின் தலைவர் உயர்ந்த பதவிகளுக்குச் செல்ல வேண்டும் என தொண்டர்கள் நினைப்பது தவறில்லை. ஆனால் அரசியல் சூழலைப் புரிந்துகொள்ளாமல், இந்தியா கூட்டணியின் ஒற்றுமையை உரசிப் பார்க்கும் அளவுக்கு தவெகவினர் பேசி வருவது வருத்தமளிக்கிறது.

ராகுல் காந்தி
ராகுல் காந்தி

2024 நாடாளுமன்றத் தேர்தலில், பாஜகவை வீழ்த்துவதுதான் ஒற்றை நோக்கம் என பிரதமர் வேட்பாளரையே முன்னிறுத்தாமல் இந்தியா கூட்டணிக் கட்சிகள் தேர்தலைச் சந்தித்தன. அதன் விளைவாகவே, பெரும்பான்மை கிடைக்காமல் கூட்டணிக் கட்சிகளை நம்பி நிற்கும் நிலைக்கு பாஜக தள்ளப்பட்டுள்ளது. இத்தகைய சூழலில், இந்தியா கூட்டணி முழு ஒற்றுமையுடன் செயல்பட்டு, பாஜகவை ஆட்சியிலிருந்து அகற்ற உற்ற துணையாக இருக்க வேண்டும்.

அவ்வாறில்லாமல், "முதல்வர் விஜய்தான் பிரதமர்" எனக் கூறி, தவெக ஆட்சிக்கு ஆதரவளித்து வரும் காங்கிரஸ் கட்சியை சீண்டிப் பார்ப்பது தேவையற்ற குழப்பத்தையே விளைவிக்கும். எனவே, கூட்டணிக்கு குந்தகம் விளைவிக்கும் வகையில் தவெகவினர் பேசுவதை முதல்வர் தடுக்க வேண்டும். மேலும், "பாஜகவை வீழ்த்துவதே நோக்கம்" என்பதை முதல்வர் பேரறிவிப்பாக வெளியிட வேண்டும் எனக் கேட்டுக் கொள்கிறேன்" என்றிருக்கிறார்.

ஆளூர் ஷாநவாஸ்

மற்றொரு துணைப் பொதுச்செயலாளரான ரஜினிகாந்த், அ.தி.மு.க எம்.எல்.ஏ-க்களை த.வெ.க-வில் இணைப்பது, த.வெ.க-வின் சட்டமன்ற நடவடிக்கைகள், காவல்துறை நடவடிக்கைகளை தொடர்ந்து விமர்சித்து வருகிறார். முதன்மைச் செயலாளரான ஆளூர் ஷாநவாஸ், ``நடப்பது மறைமுக பா.ஜ.க ஆட்சி" என மொத்தமாக போட்டுடைத்துவிட்டார். வி.சி.க-வின் வன்னி அரசு அமைச்சரவையில் பங்கேற்றுள்ள நிலையில், வி.சி.க இரண்டாம் கட்ட தலைவர்கள் தொடர்ச்சியாக விமர்சித்து வருவது, கட்சியை கலகலத்துப்போக வைத்திருக்கிறது.

`பரந்தூர் அருகே மதுரமங்கலத்தில் புதிய சிப்காட் தொழில் பூங்கா' - தமிழக அரசு எடுத்த முடிவு!

காஞ்சிபுரம் மாவட்டம் பரந்தூரில் அமையவிருந்த சென்னையின் 2-வது புதிய பசுமை விமான நிலையத் திட்டத்திற்கு அப்பகுதி விவசாயிகளும் ஏகனாபுரம் மக்களும் கடும் எதிர்ப்பு தெரிவித்துப் போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனர... மேலும் பார்க்க

``இன்றுமுதல் 4 நாள்களுக்கு வங்கிகள் இயங்காது" - ஐக்கிய வங்கிகள் சங்க கூட்டமைப்பு அறிவிப்பு!

வாரத்தில் ஐந்து நாட்கள் வேலை, பழைய ஓய்வூதியத் திட்டத்தை மீண்டும் அமல்படுத்துவது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை மத்திய அரசு நிறைவேற்றாததைக் கண்டித்து, நாடு முழுவதும் சுமார் 8 லட்சம் வங்கி ஊழியர்கள் இன்று... மேலும் பார்க்க

தமிழகம் பின்னோக்கிச் சென்றுவிடக் கூடாது... கவனத்தில்கொள்வாரா முதல்வர்?

வேகமாக வளரும் மாநிலம் என பெயரெடுத்த தமிழ்நாடு 2024-25-ல் 15.98% ஜி.எஸ்.டி.பி (Gross State Domestic Product) வளர்ச்சியைப் பதிவு செய்துள்ளது. ஆனால், இந்த வளர்ச்சி அதே வேகத்தில் அரசின் கஜானாவிலும் பிரதிப... மேலும் பார்க்க

மதுராந்தகம் இடைத்தேர்தல்: 'வெளியூர் வேட்பாளர்களைக் களமிறக்கிய கழகங்கள்...' - பின்னணி என்ன?

மதுராந்தகம், தாராபுரம் ஆகிய இரண்டு தொகுதிகளுக்கு இடைத்தேர்தலை இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்த வேகத்தில், வேட்பாளர்களையும் அறிவித்திருக்கின்றன த.வெ.க, தி.மு.க, அ.தி.மு.க. மதுராந்தகம் தொகுதிக்கு மூன்று த... மேலும் பார்க்க

நாதக: 'இடைத்தேர்தலில் கண்டிப்பா போட்டியிடணுமா?' - தயக்கத்தில் தம்பிகள்.. சீமான் முடிவென்ன?

மதுராந்தகம், தாராபுரம் இடைத்தேர்தலில் 'நாம் கண்டிப்பாக போட்டியிட வேண்டுமா..' என்ற கேள்விகள் நா.த.க சீனியர்கள் மத்தியில் எழுந்துள்ளது. நிர்வாகிகளின் விருப்பத்துக்கு மாறாக 'கண்டிப்பாக போட்டியிட வேண்டும்... மேலும் பார்க்க

`பட்டினப்பாக்கத்தில் புதிய ஒருங்கிணைந்த தலைமைச் செயலகம்' - வெளியானது அரசாணை!

தமிழகத்தின் புதிய ஒருங்கிணைந்த தலைமைச் செயலகம் மற்றும் சட்டமன்ற வளாகம் கட்டப்படும் என முதல்வர் விஜய் கடந்த செப்டம்பர் 3-ஆம் தேதி சட்டமன்றத்தில் 110-வது விதியின் கீழ் அறிவித்திருந்தார். ரூ.1,200 கோடி ம... மேலும் பார்க்க