செய்திகள் :

பிரதமர் மோடியின் முகமூடியை அணிந்துகொண்டு திருட்டு; 40 மொபைல் போன்களைத் திருடியவரைத் தேடும் போலீஸ்

post image

ராஜஸ்தான் மாநிலம் பில்வாரா என்ற இடத்தில் செயல்பட்டு வந்த மாதேஷ்வரி மொபைல் கடையில் மர்ம நபர்கள் திங்கட்கிழமை இரவு புகுந்து ரூ.5 லட்சம் மதிப்புள்ள 40 ஸ்மார்ட் மொபைல் போன்களைத் திருடிச்சென்றுவிட்டனர்.

மொபைல் கடை உரிமையாளர் லட்சுமன் சென் இது தொடர்பாக போலீஸில் கொடுத்துள்ள புகாரில், படிக்கட்டுப் பகுதியிலிருந்த கதவின் பூட்டை உடைத்து, மேற்கூரை வழியாக கடைக்குள் நுழைந்த திருடர்கள், சுமார் 4 முதல் 5 லட்சம் ரூபாய் மதிப்பிலான 35 முதல் 40 ஸ்மார்ட்போன்களைத் திருடிக்கொண்டு தப்பிச் சென்றதாகக் குறிப்பிட்டுள்ளார்.

செவ்வாய்க்கிழமை கடையைத் திறந்தபோது, ​​கடை முழுவதும் சூறையாடப்பட்டிருந்ததையும், விலையுயர்ந்த கைபேசிப் பெட்டிகள் காலியாகக் கிடந்ததையும், பொருட்கள் தரையில் சிதறிக் கிடந்ததையும் கண்டதாக லட்சுமன் சென் தன் புகாரில் தெரிவித்துள்ளார்.

பிரதமர் நரேந்திர மோடியின் முகமூடியை அணிந்திருக்கும் திருடன்
பிரதமர் நரேந்திர மோடியின் முகமூடியை அணிந்திருக்கும் திருடன்

புகார் அளிக்கப்பட்டதைத் தொடர்ந்து, போலீஸார் சம்பவ இடத்திற்கு வந்து குற்ற நடந்த இடத்தை ஆய்வு செய்தனர். கடையின் உள்ளேயும் அதைச் சுற்றியும் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்தபோது, ​​சந்தேகப்படும் நபர் ஒருவர் தனது அடையாளத்தை மறைக்கும் முயற்சியாக பிரதமர் நரேந்திர மோடியைப் போன்ற முகமூடியை அணிந்து மொபைல் போன்களைத் திருடியது கண்காணிப்பு கேமராவில் பதிவாகி இருந்தது.

இங்கு மொபைல் போன் திருடிய கும்பல் அதே இரவில், சான்வாரியா மொபைல் என்ற மற்றொரு மொபைல் கடைக்குள் நுழையவும் இதே கும்பல் முயற்சி செய்துள்ளது. அந்த இடத்திலுள்ள சிசிடிவி காட்சிகளிலும், முகமூடி அணிந்த அதே நபர் கடையின் ஷட்டர் பூட்டை உடைக்க முயன்றுவிட்டு அங்கிருந்து தப்பிச் செல்வது பதிவாகி இருந்தது. இது குறித்து போலீஸார் வழக்குப் பதிவு செய்து குற்றவாளியைத் தேடி வருகின்றனர்.

புதுச்சேரி: 625 வகை போலி மருந்துகள்… நாடு முழுவதும் சப்ளை! - அடுத்தடுத்து சிக்கும் உயரதிகாரிகள் ?

இந்தியாவின் முக்கிய மருந்து நிறுவனங்களில் ஒன்றான சன் ஃபார்மா (Sun Pharmaceutical Industries Limited),தங்களின் உயிர்காக்கும் மருந்துகள் புதுச்சேரியில் போலியாக உற்பத்தி செய்யப்படுவதாக கடந்த 2024-ம் ஆண்ட... மேலும் பார்க்க

தருமபுரி: 3 குழந்தைகளுடன் கிணற்றில் மிதந்த தாயின் சடலம்; சந்தேகம் கிளப்பும் கயிறு - போலீஸ் விசாரணை!

தருமபுரி அருகே 3 குழந்தைகள், தாய் என 4 பேரின் சடலங்கள் கிணற்றிலிருந்து மீட்கப்பட்ட சம்பவம், அதிரச்சியை ஏற்படுத்தியுள்ளது.தற்கொலைதருமபுரி மாவட்டம், நல்லம்பள்ளி வட்டம், தடங்கம் ஊராட்சி, தோக்கம்பட்டி கிர... மேலும் பார்க்க

10 வகுப்பு படித்துவிட்டு மருத்துவம் பார்த்த போலி மருத்துவர் கைது; நத்தத்தில் தொடரும் மோசடி

திண்டுக்கல் மாவட்டம், நத்தம் பகுதிகளில் போலி மருத்துவர்கள் நடமாட்டம் அதிகம் உள்ளதாக மாவட்ட நிர்வாகத்திற்குப் புகார்கள் வந்தன. இதைத்தொடர்ந்து நத்தம் பகுதியில் திண்டுக்கல் மாவட்ட இணை இயக்குநர் நலப்பணிகள... மேலும் பார்க்க

கவின் ஆணவக்கொலை: சுர்ஜித்தின் தந்தை சரவணன் கூலிப்படையை ஏவி மற்றொரு கொலைக்குத் திட்டம்; பின்னணி என்ன?

மாற்றுத்திறனாளி உரிமை செயல்பாட்டாளரும் மாற்றுத்திறனாளி வழக்கறிஞருமான முருகானந்தம் என்பவர் கடந்த 2025-ம் ஆண்டு ஜூலை மாதம் பட்டப்பகலில் கூலிப்படையால் வெட்டி படுகொலை செய்யப்பட்டார். தேன் மொழி மெட்ரிகுலேஷ... மேலும் பார்க்க

ரூ.15,000-க்கு வங்கிகளின் போலி செயலி விற்பனை - பள்ளி படிப்பை கூட முடிக்காதவர் சிக்கியதெப்படி?

நாடு முழுவதும் இணையதள மோசடிகள் அதிக அளவில் நடந்து வருகிறது. இந்த மோசடியில் அதிக அளவில் பெண்கள் மற்றும் முதியவர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். அதுவும் செயற்கை நுண்ணறிவை பயன்படுத்தி இது போன்ற மோசடிகள் அதிக அ... மேலும் பார்க்க

மதுரை: "2 லட்சத்திற்கு மாதம் 20 ஆயிரம் வட்டி" - தற்கொலையில் முடிந்த கந்துவட்டி கொடுமை

மதுரை மாநகர் செல்லூர் கீழத்தோப்பு பகுதியைச் சேர்ந்த ராஜாராம், மாட்டுத்தாவணி காய்கறி சந்தையில் சுமை தூக்கும் தொழிலாளியாகப் பணியாற்றி வருகிறார். இவரது மனைவி பிரேமா. இவர்களுக்கு இரண்டு பெண் பிள்ளைகளும் ஒ... மேலும் பார்க்க