செய்திகள் :

பிரதமர் வேட்பாளராக விஜய்: ’என்னை சிக்கலில் விட்டு விடாதீர்கள்?’ – அமைச்சர் செங்கோட்டையன்

post image

கோவை விமான நிலையத்தில் வருவாய்த்துறை அமைச்சர் செங்கோட்டையன் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார் அப்போது பேசிய அவர், “முதலமைச்சர் தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு பேணி காக்கவும், போதை பொருளை கட்டுப்படுத்தவும் நடவடிக்கை எடுத்து வருகிறார். புதிய தலைமைச் செயலகம் குறித்து ஒவ்வொருவரும் ஒரு கருத்தை சொல்கிறார்கள். தி.மு.க ஆட்சியில் இருக்கும் பொழுது புதிய தலைமைச் செயலகத்தை அமைத்து, அனைத்து அலுவலகமும் கொண்டு வர முயற்சிக்கபட்டது. அது தற்போது சிறந்த மருத்துவமனையாக மாற்றியமைக்கப்பட்டுள்ளது. ராணி மேரி கல்லூரியில் தலைமைச் செயலகத்தை கொண்டு வர ஜெயலலிதா முயற்சி செய்தார்கள்.

ஒவ்வொரு முதலமைச்சரும் தலைமை செயலகம் கொண்டு வர  மும்மரமாக கவனம் செலுத்தி, சிறந்த தலைமைச் செயலகத்தை கொண்டு வர முயற்சிக்கின்றனர். கர்நாடக மாநிலத்தில் கட்டப்பட்டுள்ள அன்றைய சட்டமன்றம் இன்றும் வரலாற்றை படைத்து கொண்டு இருக்கிறது. சட்டமன்றத்துக்கு அவ்வளவு செலவாகிறது என்பது எல்லாம், இன்றைய சூழ்நிலையில் தேவைப்படுகின்ற ஒன்று. 110 விதியின் கீழ் அறிவிப்புகள் வெளியிடுவது நடைமுறையில் இருப்பது. முதலமைச்சர் சிலவற்றை 110 விதியில் அறிவிக்கிறார். மானிய கோரிக்கை முடிந்த பிறகு அறிவிக்கிறார். இதில்  தவறு எதுவும் கிடையாது” என்றார்.

செங்கோட்டையன்
செங்கோட்டையன்

த.வெ.க ஆட்சி ஐந்து ஆண்டு நிலைக்காது என எடப்பாடி பழனிச்சாமி சொல்லி இருப்பது குறித்த கேள்விக்கு, ”அப்படி சொல்லிக் கொண்டு இருந்த காரணத்தால் தான்  மூன்றாவது இடத்திற்கு சென்று இருக்கிறார்கள்” என பதிலளித்தார்.

சட்டமன்ற உறுப்பினர்களின் கேள்விகளுக்கு துறை சார்ந்த அமைச்சர்கள் பதில் சொல்வது இல்லை என்ற கேள்விக்கு,  ”இது நடைமுறையில் இருக்கும் ஒன்று. எல்லா கேள்விக்கும் முதல்வர் பதில் சொல்ல வேண்டியது இல்லை. முதல்வராக ஸ்டாலின் இருக்கும் பொழுது அன்றைய சட்டத்துறை அமைச்சர் ரகுபதி தீயணைப்பு துறை தொடர்பான விஷயங்களை பேசினார். இது வரலாற்றில் இருக்கிறது” என பதிலளித்தார்.

பிரதமர் வேட்பாளராக விஜய் த.வெ.க-வினரால்  முன் நிறுத்தப்படுகிறாரா என்ற கேள்விக்கு, “எங்களைப் பொறுத்தவரை, தலைவரை பொறுத்த வரை தெளிவாக இருக்கிறார். தமிழகம் அவரை நம்பி வாக்களித்து இருக்கிறது. இரண்டு ஆண்டுகளில் மாபெரும் வெற்றி பெற்றிருக்கிறோம். இரண்டு மாதத்தில் புதிய சின்னம் பெற்று வெற்றி பெற்றுள்ளோம். தமிழ்நாட்டு மக்களை காப்பதற்காக, எந்தெந்த முயற்சிகளை மேற்கொள்ள வேண்டுமோ அனைத்து முயற்சிகளையும் மேற்கொண்டு, மக்கள் விரும்பு திட்டங்களை மேற்கொள்வதற்கு நடவடிக்கை மேற்கொண்டு வருகிறார். மேற்கொண்டு கேட்டு, என்னை சிக்கலில் விட்டு விடாதீர்கள்”  என பதிலளித்தார்.

தூய்மைப் பணியாளர்கள் போரட்டம்: "உறுதியாக முதல்வர் சந்திப்பார்; பணி நிரந்தரம்.?" - ராஜ்மோகன்

கடந்த 16 நாட்களாக, சென்னை ரிப்பன் பில்டிங்கில் தூய்மைப் பணியாளர்கள் போராட்டம் நடத்தி வந்தனர்.இன்று காலை அவர்களைச் சந்தித்து அமைச்சர்கள் ஆனந்த், ஆதவ் அர்ஜூனா, ராஜ்மோகன், நிர்மல் குமார் ஆகியோர் பேச்சுவா... மேலும் பார்க்க

'பார்த்து ரொம்ப நாளாச்சுன்னு வந்தோம்!'- கம்யூனிஸ்ட் அலுவலகத்துக்கு தவெக அமைச்சர்களின் திடீர் விசிட்!

தவெக அமைச்சர்கள் ஆனந்த், ஆதவ், நிர்மல் குமார், ராஜ்மோகன் ஆகியோர் திடீரென மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அலுவலகத்துக்கு சென்று அக்கட்சியின் தலைவர்களோடு ஆலோசனை நடத்தியிருக்கிறார்கள். பெ.சண்முகம் - அ... மேலும் பார்க்க

'தலைமைச் செயலகத்தில் அம்மா உணவகம் அமைக்கப்படுமா?' - மக்கள் கோரிக்கை!

தலைமைச் செயலகத்தில் முதல்வர் தனிப்பிரிவிலும் அமைச்சர்களின் அறையிலும் மனு கொடுக்க அதிக எண்ணிக்கையிலான மக்கள் கூடி வருகின்றனர். அவர்கள் ஏழை எளிய மக்கள் அதிகம் கூடும் தலைமைச் செயலகத்தில் அம்மா உணவகம் இரு... மேலும் பார்க்க

"இத்தாலியின் நீண்ட காலப் பிரதமர்; என் தோழிக்கு வாழ்த்துகள்"- மெலோனிக்கு மோடி வாழ்த்து

இந்தியப் பிரதமர் மோடியும், இத்தாலியப் பிரதமர் ஜார்ஜியா மெலோனியும் நல்ல நண்பர்கள்.தற்போது மெலோனி ‘இத்தாலியின் பிரதமராக நீண்ட காலம் பதவி வகிப்பவர்’ என்கிற பெருமையை அடைந்துள்ளார்.இதையொட்டி மெலோனிக்குத் த... மேலும் பார்க்க

`Rapido நிறுவனத்தால் மட்டுமே 2.5 கோடி பேருக்கு வேலைவாய்ப்பு; எனவே, மாநில அரசுகள்..!' - நிதின் கட்கரி

இந்தியாவின் வேலைவாய்ப்பின்மைப் பிரச்னை குறித்தும், 22 லட்சம் வேலைவாய்ப்புகள் குறித்தும் மத்திய போக்குவரத்துத் துறை அமைச்சர் நிதின் கட்கரி பேசியுள்ளதாவது...“நமது நாட்டில் கிட்டத்தட்ட 22 லட்சம் டிரைவர்க... மேலும் பார்க்க

`புதுச்சேரி வருகிறார் நித்தியானந்தா!' - முதல்வர் ரங்கசாமியிடம் தியான பீட நிர்வாகிகள் சொன்னதென்ன ?

புதுச்சேரி அடுத்த ஏம்பலம் கிராமத்தில் அமைக்கப்பட்டிருக்கும் கைலாசா நித்யானந்தா தியான பீடத்துக்கு, குடமுழுக்கு செய்வதற்கான நடவடிக்கைகளை அதன் நிர்வாகிகள் மேற்கொண்டு வருகின்றனர். அதன் ஒரு பகுதியாக புதுச்... மேலும் பார்க்க