செய்திகள் :

பிற ஆண்களுடன் பேசுகிறார்: சென்னையில் இருந்து காதலியை வரவழைத்து ஹோட்டல் அறையில் குத்திக்கொன்ற காதலன்

post image

அசாம் மாநிலம் உடல்புரி மாவட்டத்தைச் சேர்ந்த அபிஜித் கிண்டோ, குரியா என்ற பெண்ணைக் காதலித்து வந்தார். குரியா சென்னையில் தங்கி இருந்தார். குரியா சென்னையிலிருந்து வேறு இரண்டு பெண்களுடன் அசாமில் உள்ள கம்ரூப் அருகில் உள்ள ரங்கியா ரயில் நிலையத்திற்கு வந்து சேர்ந்ததார்.

அவர்களை ரயில் நிலையத்தில் வரவேற்க கிண்டோ சென்றிருந்தார். அவர்களை வரவேற்று அங்குள்ள ஓட்டல் ஒன்றில் தங்கவைத்தார். தானும் அதே ஹோட்டலில் ஒரு அறை எடுத்து தனியாகத் தங்கினார். குரியா தனி அறையில் தங்கி இருந்தார்.

நள்ளிரவு அபிஜித் கிண்டோ, குரியா தங்கி இருந்த அறைக்கு மெதுவாகச் சென்றார். அங்கு அவர்கள் இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இந்த வாக்குவாதம் முற்றிய நிலையில் ஏற்கனவே தன்னுடன் எடுத்து சென்று இருந்த இரண்டு கத்திரிக்கோலால் குரியாவைச் சரமாறியாக கிண்டோ குத்தினார். இதில் ரத்த வெள்ளத்தில் சரிந்த குரியா சம்பவ இடத்திலேயே இறந்து போனார்.

காலையில் பக்கத்து அறையில் தங்கி இருந்த குரியாவின் தோழிகளைத் தொடர்பு கொண்டு உங்களது தோழியைக் கொலை செய்துவிட்டேன் என்று தெரிவித்தார். அதோடு தன்னை தானே தற்கொலை செய்துகொள்ளவும் முயற்சி செய்தார். இது குறித்து கிண்டோ நிருபர்களுக்கு அளித்த பேட்டியில்,''அவள் எனக்கு துரோகம் செய்துகொண்டிருந்தாள். மற்றவர்களுடன் பேசிக்கொண்டிருந்தாள். அவள் சென்னையில் இருந்து வருவதற்கு முன்பே நான் கொலை செய்ய திட்டமிட்டிருந்தேன்," என்று கூறிய அவர், கத்தரிக்கோலால் அந்தப் பெண்ணைக் கொன்றதை ஒப்புக்கொண்டார்.

இருப்பினும், தற்கொலைக்கு முயன்றது குறித்து அவர் எதுவும் கூறவில்லை. இது குறித்து போலீஸார் வழக்கு பதிவு செய்து கிண்டோவை கைது செய்தனர். அவரது உடலில் காயங்கள் இருந்ததால் அவரை மருத்துவமனையில் சேர்த்தனர். கிண்டோ கத்தரிக்கோல் மற்றும் டெஸ்டரைப் பயன்படுத்தி குரியாவைத் தாக்கியதாக போலீஸார் தெரிவித்துள்ளனர். கூடுதல் பரிசோதனைகள் மற்றும் தடயங்களைச் சேகரிப்பதற்காக கவுகாத்தியிலிருந்து தடயவியல் நிபுணர்கள் குழு ஒன்று அந்த ஹோட்டலுக்கு வந்தது.

மீன்களை பாலியல் வன்கொடுமை செய்த நபர்: சிசிடிவி ஆதாரத்துடன் கைது செய்த காவல்துறை! - என்ன நடந்தது?

பாங்காக் நகரின் துங் சோங் ஹோங் பகுதியில் உள்ள ஒரு வீட்டின் வெளிப்புறத்தில், சிமெண்டால் கட்டப்பட்ட பெரிய மீன் தொட்டி இருக்கிறது. இந்த மீன் தொட்டியில் வளர்க்கப்படும் வண்ண மீன்கள் தொடர்ந்து திடீர் திடீரெ... மேலும் பார்க்க

கோவையில் 14 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை – குற்றவாளியை துப்பாக்கியால் சுட்டு பிடித்த போலீஸ்!

கோவை கடந்த 12ம் தேதியன்று இரவு சுமார் 7.30 மணி அளவில் 14 வயது சிறுமியை இருசக்கர வாகனத்தில் கடத்திச் சென்று பாலியல் வன்கொடுமைக்கு உட்படுத்தியதாக கோவை தெற்கு அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளிக... மேலும் பார்க்க

தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு வழக்கு: குற்றஞ்சாட்டும் தவெக; சவால்விடும் திமுக; காத்திருக்கும் நீதி

முந்தைய அ.தி.மு.க ஆட்சியில் 2018, மே 22-ம் தேதி தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிரான மக்கள் போராட்டத்தில் ஏற்பட்ட கலவரத்தில், 2 பெண்கள் உட்பட 13 பேர் போலீஸாரால் கொல்லப்பட்டனர். 100-க்கும் மேற்பட்டோர... மேலும் பார்க்க

கேரளம்: ஒரு வயது குழந்தையின் கழுத்தை அறுத்து கொன்ற தாய்; திருமண நாளில் இளம்பெண் செய்த கொடூரம்

கேரள மாநிலம் ​திருவனந்தபுரம் மாவட்டம் விளவூர்க்கல் பொற்றா பகுதியைச் சேர்ந்தவர் அபிஜித். மருத்துவப் பிரதிநிதியாகப் பணியாற்றி வருகிறார். இவரது மனைவி கிறிஸ்டி (29). இவர்களுக்கு நான்கு ஆண்டுகளுக்கு முன்பு... மேலும் பார்க்க

காட்பாடி: தேவாலய கட்டுமானப் பணி விபத்தில் 3 பேர் பலி; ஒப்பந்ததாரர் மீது வழக்குப் பதிவு!

வேலூர் மாவட்டம், காட்பாடி அடுத்த ஆந்திர மாநில எல்லையில் மந்தி கிருஷ்ணாபுரம் கிராமம் உள்ளது. இந்த கிராமத்தில், புதிதாக சி.எஸ்.ஐ தேவாலயம் கட்டும் பணிகள் நடைபெற்று வந்தன. இந்த நிலையில், நேற்று மாலை கான்க... மேலும் பார்க்க

ஈரோடு: 3.50 ஏக்கர் நிலத்தை ரிஜிஸ்டர் செய்ய ரூ.7 லட்சம் லஞ்சம்; சப்-ரிஜிஸ்டர், பத்திர எழுத்தர் கைது

ஈரோடு மாவட்டம் கவுந்தப்பாடி ராயர் பாளையத்தைச் சேர்ந்தவர் விவசாயி கார்த்திக். இவருக்குச் சொந்தமான மூன்றரை ஏக்கர் நிலத்தைப் பதிவு செய்வதற்காக கவுந்தப்பாடி சப்-ரிஜிஸ்டர் சங்கரை அணுகியுள்ளார். 3.50 ஏக்கர்... மேலும் பார்க்க