செய்திகள் :

`பில் கேட்ஸ் மகளுக்கு 20 ஆண்டுகள் சிறை?' - மோசடி புகார் சிக்கலில் Phoebe Gates!

post image

மைக்ரோசாஃப்ட் நிறுவனத்தின் இணை நிறுவனர் பில் கேட்ஸின் 23 வயதான மகள் Phoebe Gates, தான் இணை நிறுவனராக இருக்கும் 'ஃபியா' (Phia) என்ற ஷாப்பிங் ஸ்டார்ட்அப் நிறுவனத்தில் 'குக்கீ ஸ்டஃப்பிங்' (Cookie stuffing) என்ற முறைகேட்டில் ஈடுபட்டதாகப் புகார்கள் எழுந்துள்ளன.

Phoebe Gates மற்றும் அவரது ஸ்டான்போர்டு பல்கலைக்கழக சக பட்டதாரியான சோஃபியா கியானி இணைந்து 'ஃபியா' என்ற நிறுவனத்தைத் தொடங்கினர். இது இணையவழிப் பொருட்கொள்முதலின் போது தள்ளுபடி கூப்பன்களைத் தேடித் தரும் ஒரு Browser Extension செயலியாக இயங்குகிறது. வாடிக்கையாளர்கள் இந்தச் செயலி பரிந்துரைக்கும் கூப்பன்களைப் பயன்படுத்திப் பொருட்களை வாங்கும் போது, விற்பனையாளர்களுக்கு இந்தத் தகவல் தெரிவிக்கப்பட்டு ஃபியா நிறுவனத்திற்கு கமிஷன் தொகையாகப் பணம் கிடைக்கும்.

Phoebe Gates
Phoebe Gates

ஆனால், வாடிக்கையாளர்கள் ஃபியா செயலியை பயன்படுத்தாமல் பொருள் வாங்கினாலும், அவர்கள் வாங்கும் பொருட்களுக்குத் தானாகவே போலியாக 'குக்கீ' என்ற கண்காணிப்புக் கோப்புகளைப் பதிவு செய்து மோசடியாக பணத்தைப் பெறுவதே 'குக்கீ ஸ்டஃப்பிங்' மோசடி எனப்படுகிறது.

இந்த விவகாரம் குறித்து கிவ்னர் லா நிறுவனத்தின் முதன்மை வழக்கறிஞர் ஏரியல் கிவ்னர், ``அமெரிக்க நீதிமன்றங்களில் இது பொதுவாக Federal Wire Fraud -ஆக கருதப்படும். இந்த குற்றத்திற்கு அதிகபட்சமாக 20 ஆண்டுகள் சிறைத்தண்டனையுடன், அபராதம் அல்லது இழப்பீடு வழங்க வேண்டிய நிலையும் ஏற்படலாம்" எனத் தெரிவித்திருக்கிறார்.

முன்னதாக ஜூலை மாதத்தில், இந்தச் சிக்கல் குறித்து தங்களுக்கு 24 மணி நேரத்திற்கு முன்பாகத்தான் தெரியவந்தது என்றும், இது மென்பொருளில் ஏற்பட்ட ஒரு தொழில்நுட்பக் கோளாறு என்றும் ஃபியா நிறுவனம் கூறியிருந்தது. ஆனால், நிறுவனத்தின் நிறுவனர்களுக்கு இது பற்றி குறைந்தது ஏழு மாதங்களாகவே தெரிந்திருந்தது என்று ப்ளூம்பெர்க் (Bloomberg) செய்தி நிறுவனம் தற்போது அறிக்கை வெளியிட்டுள்ளது.
உள்நாட்டு Slack உரையாடல்கள் மற்றும் நம்பத்தகுந்த வட்டாரங்களை மேற்கோள் காட்டி வெளியாகியுள்ள அந்த அறிக்கையில், ஃபியா நிறுவனத்தின் பெரும்பான்மையான வருவாய்க்கு இந்த முறைகேடே காரணமாக இருந்துள்ளது.

Phoebe Gates
Phoebe Gates

ஜூலை மாதத்தில் இந்த வசதிகள் முடக்கப்பட்ட பிறகு, நிறுவனத்தின் சராசரி தினசரி வருவாய் 80,000 டாலரிலிருந்து 28,000 முதல் 10,000 டாலராகக் குறைந்தது. கடந்த ஜூன் மாதத்தில், ஃபியா நிறுவனம் உரிமை கோரிய மொத்த விற்பனை மதிப்பில் சுமார் 51% இந்த 'குக்கீ ஸ்டஃப்பிங்' மூலமாகவே கிடைத்துள்ளது எனத் தெரிவித்திருக்கிறது.

இது குறித்து ஃபியா நிறுவனத்தின் செய்தித் தொடர்பாளர் கூறுகையில், ``தவறான முறையில் வருவாய் ஈட்டக் காரணமான அனைத்து வசதிகளும் ஜூலை 7-ம் தேதியே உடனடியாக நீக்கப்பட்டுவிட்டன. அனைத்துப் பணப் பரிவர்த்தனைகளையும் நாங்கள் மறுபரிசீலனை செய்து வருகிறோம்.

இந்தத் தவறான வழிகளால் கிடைத்த தொகையை அந்தந்த பிராண்டுகளுக்கே திருப்பிச் செலுத்தும் பணிகளைத் தொடங்கிவிட்டோம். மேலும், இதுபோன்ற தவறுகள் மீண்டும் நடக்காமல் இருக்க ஒரு அதிகாரியை நியமிக்க உள்ளோம். நிறுவனத்தின் வருவாய் குறைந்ததற்குக் காரணம் வணிகமயமாக்கல் முயற்சிகள் நிறுத்தப்பட்டதே. ப்ளூம்பெர்க் நிறுவனத்தின் தரவு பகுப்பாய்வு மிகைப்படுத்தப்பட்டது." எனத் தெரிவித்தார்.

ஆட்டோ வாங்கி கொடுத்தும் `திருந்தாத’ குடிகாரக் கணவன் - சேர்ந்து வாழ மறுத்ததால் பெண் போலீஸ் கொலையா?

வேலூர் மாவட்டம், குடியாத்தம் அருகேயுள்ள எர்த்தாங்கல் கிராமத்தைச் சேர்ந்தவர் ஸ்ரீராம். இவரது மகள் தாமரைச்செல்வி (40). இவர், குடியாத்தம் நகரக் காவல் நிலையத்தில் தலைமைக் காவலராக பணிபுரிந்து வந்தார். இவரு... மேலும் பார்க்க

கரூர்: `திருமணம் மீறிய உறவில் மனைவி' - த.வெ.க நிர்வாகி மீது புகார்; தற்கொலைக்கு முயன்ற கணவர்

கரூர் மாவட்டம், குளித்தலை அடுத்த பாலவிடுதி அருகே பெருமாள்கோவில்பட்டியைச் சேர்ந்தவர் ராஜலிங்கம். லாரி டிரைவராக பணியாற்றி வருகிறார். இவருக்கும், தனலட்சுமி என்பவருக்கும் கடந்த ஆறு ஆண்டுகளுக்கு முன்பு திர... மேலும் பார்க்க

உதவிய காதலன்; மயக்க மருந்து கலந்து கொடுத்து மர்ம உறுப்பில் மின்சாரம் பாய்ச்சி கணவனை கொன்ற மனைவி

டெல்லியின் தெற்கு பகுதியில் உள்ள சங்கம் விஹாரில் வசித்து வந்தவர் முன்னாலால்(55). கடந்த 10ம் தேதி முன்னா லால் சங்கம் விஹாரின் ரதியா மார்க் பகுதியில் உள்ள சாலையில் ரத்த வெள்ளத்தில் கிடந்தார். அன்று அதிக... மேலும் பார்க்க

`சிறையில் செல்போன் பயன்படுத்தும் பிரஜ்வல் ரேவண்ணா' - போன், பென் டிரைவ் பறிமுதல் செய்த அதிகாரி

பாலியல் வன்கொடுமை வழக்கில் கைது செய்யப்பட்ட முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் பிரஜ்வல் ரேவண்ணா, பரப்பன அக்ரஹாரா மத்திய சிறைச்சாலையில் அடைக்கப்பட்டிருக்கிறார். அவர் தங்கியிருக்கும் அறையில் இருந்து கைபேசி,... மேலும் பார்க்க

டிஜிட்டல் மோசடியில் கிடைத்த ரூ.10 கோடி; 5435 வங்கி கணக்குகளுக்கு மாற்றிய சோசியல் மீடியா பிரபலம் கைது

இந்த ஆண்டு ஜனவரி மாதம் சிபிஐ அதிகாரிகளாக தங்களைக் காட்டிக் கொண்ட ஒரு கும்பல் புனேயைச் சேர்ந்த முதியவரை டிஜிட்டலில் கைது செய்து ரூ.10 கோடியைப் பறித்தது. முதியவர் ஒரு வழக்கில் குற்றம் சாட்டப்பட்டுள்ளதாக... மேலும் பார்க்க

சீருடையில் பெண் போலீஸ் கொடூரக் கொலை; கணவன் வெறிச்செயல் - வேலூர் அருகே பேரதிர்ச்சி!

வேலூர் மாவட்டம், குடியாத்தம் அருகேயுள்ள எர்த்தாங்கல் பகுதியைச் சேர்ந்தவர் தாமரைச்செல்வி. இவர், குடியாத்தம் நகரக் காவல் நிலையத்தில் தலைமைக் காவலராக பணிபுரிந்து வருகிறார். இன்று இரவு பணிமுடித்துவிட்டு இ... மேலும் பார்க்க