செய்திகள் :

"பி.டி.உஷா சாதனையை முறியடித்தும் முழு மகிழ்ச்சி வரவில்லை" - வித்யா ராம்ராஜ் சொல்லும் காரணம் என்ன?

post image

ஜப்பானில் நடைபெற்ற ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் கோவையைச் சேர்ந்த தடகள வீராங்கனை வித்யா ராம்ராஜ் தங்கம், வெள்ளி மற்றும் வெண்கலம் ஆகிய 3 பதக்கங்களை வென்று அசத்தினார்.

மேலும் 400 மீட்டர் தடை தாண்டும் ஓட்டத்தில் 42 ஆண்டு கால பி.டி. உஷாவின் தேசிய சாதனையையும் வித்யா ராமராஜ் முறியடித்தார். இதையடுத்து இன்று கோவை திரும்பிய வித்யா ராம்ராஜ்க்கு, கோவை விமான நிலையத்தில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.

பின்னர் செய்தியாளர்களுக்குப் பேட்டியளித்த வித்யா ராம்ராஜ், ”செண்ட்ரல் கவர்மெண்ட், ஸ்டேட் கவர்மெண்ட் ரெண்டு பேரும் சப்போர்ட் பண்ணுறாங்க. அதனாலதான் நான் இங்க இருக்கேன். என் கோச் நேபாள்சிங்க்கு நன்றி. கோச் இல்லாமல் இலக்கு நோக்கி செல்வது கஷ்டமாக இருந்தது. அவரது அர்ப்பணிப்பு மிக்க பயிற்சி எனக்கு உதவிகரமாக இருந்தது.

ஆசியன் கேம்ஸில் நாங்கள் சாதித்தது ரொம்ப ஹேப்பியா இருக்கு. எங்க கோச் கூட இருந்து சப்போர்ட் பண்ணினார். கடைசி சீசனை விட இந்த சீசனில் நாங்க ரொம்ப கஷ்டப்பட்டு இருக்கிறோம். அதன் பலன்தான் எங்களை இவ்வளவு தூரம் கொண்டு வந்துள்ளது.

வித்யா ராம்ராஜ்
வித்யா ராம்ராஜ்

பி.டி.உஷாவின் சாதனையை நான் முறியடித்தது ரொம்ப ஹேப்பி. 43 ஆண்டுகளாக உடைக்கப்படாமல் இருந்த சாதனையை முறியடித்து, இந்திய மக்கள் இன்னும் மேலே செல்ல முடியும் என்பதை காட்டியுள்ளோம். 2023-யிலேயே அவரது சாதனையைச் சமன் செய்தேன். அது அவரது சாதனையை முறியடிக்க முடியுமென்ற நம்பிக்கையைத் தந்தது.

இந்த சீசனில் அந்தச் சாதனையை முறியடிக்க வேண்டுமென நினைத்தேன். நாங்க மெடலை ஏய்ம் செய்யவில்லை. ரெக்கார்டை பிரேக் பண்ண வேண்டுமென ஏய்ம் செய்யவில்லை. எங்க டார்க்கெட்டே டைமிங். கோச்சும், நானும் மெடல், ரெக்காட் பற்றி யோசிக்காமல், டைமிங்கில் கவனம் செலுத்தினோம்.

இந்திய அளவில் கூட ஃபைட் பண்ண போட்டியாளர்கள் யாரும் கிடையாது. இண்டர்நேசனல் லெவல் போனால்தான், நம்மகூட ஃபைட் பண்ணும் அளவிற்கு இருப்பார்கள். அதனால் இது உனக்காக ஸ்டேஜ், இதை நீதான் பார்க்க வேண்டுமென எனக் கோச் சொன்னார். அதற்காகத்தான் நாங்க அங்க போனோம். டைமிங்காக மட்டும்தான் ஓடினோம். அது மெடலைத் தந்தது, ரெக்கார்டை பிரேக் பண்ண வைத்தது.

வித்யா ராமராஜ்
வித்யா ராம்ராஜ்

ஒலிம்பிக் ரெக்கார்ட் 50 செகண்ட்ஸ் ஆக உள்ளது. நான் இப்போது 54 செகண்ட்ஸ் வந்துள்ளேன். இந்தியா இன்னும் கீழேதான் உள்ளது. நாம் உலகத்தரத்தில் ஃபெர்பாமன்ஸ் பண்ணணும். இந்த ஆசியன் கேம்ஸ் எங்களுக்கு என்னதான் அச்சிவ் கொடுத்தாலும், அது இன்னும் முழுமையான மகிழ்ச்சி தரவில்லை. இன்னும் உலகத்தரத்திற்கு நாம் செல்லவில்லை. ஆசியன் கேம்ஸ் அளவிற்குத்தான் போயுள்ளோம்.

அடுத்த ஆண்டு வேர்ல்ட் சாம்பியன்ஷிப், அதற்கு அடுத்த ஆண்டு ஒலிம்பிக்ஸ் வருகிறது. நான் 54 செகண்டில் இருந்து 53, 52 செல்ல வேண்டும். அதைச் செய்தால்தான் நான் ஒலிம்பிக்கில் பைனலுக்குச் செல்ல முடியும். ஸ்டேட் கவர்மெண்ட் சப்போர்ட் பண்ண தயாராக இருக்கிறார்கள். எனக்கு எல்லா சப்போர்ட்டும் கிடைக்கிறது.

ஒரு அத்லெட் டீச்சர், கோச் இல்லாமல் ஃபெர்பமான்ஸ் பண்ண முடியாது. இப்போ எங்கு பார்த்தாலும் மெடல் வாங்கிய எங்க பெயர்தான் உள்ளது. ஆனால் கோச் பெயர் எங்கும் தெரியவில்லை. எங்களுக்குத் தரும் முக்கியத்துவத்தை கோச்களுக்கும் தர வேண்டும் என விளையாட்டுத்துறை அமைச்சரிடம் கூறினேன். இதை முதலமைச்சர் கவனத்திற்கு எடுத்துச் சென்று, சி.எம். அவார்ட்ஸ் தரும்போது, கோச்களுக்கும் மெடல் தருவோம் என்றார்” என்றார்.

உலக ஸ்கேட்டிங் களத்தில் வெள்ளிப் பதக்கம்; சென்னையின் செல்லப்பிள்ளை ஆனந்தகுமாருக்குப் பாராட்டு!

பராகுவேயில் நடைபெற்ற உலக ஸ்கேட்டிங் போட்டியில் 1000 மீட்டர் ஸ்பிரிண்ட் பிரிவில் வெள்ளி, 500 மீட்டரில் வெண்கலம் என இரட்டைப் பதக்கங்களைக் குவித்திருக்கிறார் சென்னையைச் சேர்ந்த வீரர் ஆனந்தகுமார் வேல்குமா... மேலும் பார்க்க

கோயம்புத்தூரில் தொடங்கிய கனவு! சானியா மிர்சாவின் 22 ஆண்டுகால சாதனையை முறியடித்த மாயா ராஜேஷ்வரன்

சானியா மிர்சாவின் சாதனையை முறியடித்த கோயம்புத்தூர் இளம் நட்சத்திரம்... ஒற்றையர், இரட்டையர் என இரட்டிப்பு மகிழ்ச்சியுடன் இந்தியாவுக்குப் பெருமை சேர்த்த நம்பிக்கை நாயகி!சர்வதேச டென்னிஸ் களத்தில் இந்தியா... மேலும் பார்க்க

IND vs WI: “வெஸ்ட் இண்டீஸை சாதாரணமா நினைக்கக் கூடாது, ஏன்னா.!” – ஸ்ரேயாஸ் ஐயர் கூறியதென்ன?

“வெஸ்ட் இண்டீஸ் அணியைச் சாதாரணமாக எடுத்துக்கொள்ள முடியாது. அந்த அணியில் ஆட்டத்தின் போக்கையே மாற்றக்கூடிய வீரர்கள் இருக்கிறார்கள்!” – வெஸ்ட் இண்டீஸுக்கு எதிரான மூன்றாவது டி20 போட்டியில் இந்தியா வெற்றி ... மேலும் பார்க்க

67 வயதில் தடகள போட்டியில் தங்கம் - கலக்கும் கவுந்தப்பாடி புதூர் சண்முகம்!

சிறுவயதிலிருந்தே ஆர்வம்என் பேரு சண்முகம். நான் ஈரோடு மாவட்டம் கவுந்தப்பாடி புதூரில் வசிக்கிறேன்.எனக்கு சின்ன வயசுல இருந்தே கபடி,ஓட்ட போட்டியில பெரிய ஆர்வம் இருந்துச்சு.ஆனா என்னோட பள்ளிக்கூட படிப்ப கூட... மேலும் பார்க்க

"நான் ஆவலோடு காத்திருக்கிறேன்"- புதிய கேப்டனாக நியமிக்கப்பட்ட ஸ்மிருதி மந்தனா நெகிழ்ச்சி!

இந்திய மகளிர் கிரிக்கெட் அணியின் கேப்டன் பொறுப்பில் இருந்து விலகுவதாக ஹர்மன்ப்ரீத் கவுர் நேற்று அறிவித்திருந்தார். இதனைத் தொடர்ந்து இந்திய மகளிர் அணியின் புதிய கேப்டனாக ஸ்மிருதி மந்தனா நியமிக்கப்பட்டி... மேலும் பார்க்க

`தலைமைப் பொறுப்பு புதிதல்ல; எனினும் முன் நிற்கும் சவால்கள்.!' - இறங்கி அடிப்பாரா ஸ்மிருதி மந்தனா?!

இந்திய மகளிர் கிரிக்கெட் அணியின் கேப்டன் பொறுப்பில் முக்கியமான மாற்றம் ஏற்பட்டுள்ளது. நீண்ட காலமாக அணியை வழிநடத்திய ஹர்மன்ப்ரீத் கவுர் கேப்டன் பதவியில் இருந்து விலகியதைத் தொடர்ந்து, இந்திய அணியின் புத... மேலும் பார்க்க