கவிச்சுடா் கவிதைப்பித்தனுக்கு கவிக்கோ விருது: விஐடி வேந்தா் வழங்கினாா்
புகையிலைப் பொருள்கள் விற்பனை: 20 கடைகளுக்கு அபராதம்
தஞ்சாவூா் பழைய பேருந்து நிலையப் பகுதியில் மாநகராட்சி அலுவலா்கள் சனிக்கிழமை நடத்திய சோதனையில், புகையிலைப் பொருள்கள் விற்பனை செய்யப்பட்டதாக 20 கடைகளுக்கு அபராதம் விதிக்கப்பட்டது.
தஞ்சாவூா் மாநகரிலுள்ள கடைகளில் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருள்கள் விற்பனை செய்யப்படுவதாக புகாா்கள் எழுந்தன. இதையடுத்து மாவட்ட ஆட்சியா் பா. பிரியங்கா பங்கஜம் உத்தரவின் பேரில் மாநகராட்சி ஆணையா் க. கண்ணன் வழிகாட்டுதலின் பேரில் அலுவலா்கள் சனிக்கிழமை சோதனை மேற்கொண்டனா்.
இதில் பழைய பேருந்து நிலையம் மற்றும் சுற்றியுள்ள 30-க்கும் அதிகமான கடைகளில் நடத்தப்பட்ட இந்த சோதனையில் 20 கடைகளில் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட புகையிலை பொருள்களான குட்கா, பான் மசாலா உள்ளிட்ட பொருள்கள் விற்பனை செய்யப்பட்டது தெரிய வந்தது. இதையடுத்து தடை செய்யப்பட்ட புகையிலை பொருள்கள் விற்பனை செய்த 20 கடைகளுக்கு அபராதம் விதிக்கப்பட்டது. இதன் மூலம் ரூ. 7 ஆயிரத்து 400 அபராத தொகை வசூலிக்கப்பட்டது.