செய்திகள் :

"புதிய தலைமைச் செயலகம் கட்ட வேண்டாம் என்று அதிமுக கூறவில்லை; ஆனால்..." - எடப்பாடி பழனிசாமி

post image

பட்டினம்பாக்கத்தில் புதிய தலைமைச் செயலகம் கட்டுவது தொடர்பான அறிவிப்பு வெளியானதில் இருந்து தவெக அரசுக்கு எதிராக எதிர்ப்புகள் கிளம்பி இருக்கின்றன.

அரசியல் தலைவர்கள், பொதுமக்கள் கண்டனம் தெரிவித்து வரும் நிலையில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியும் கண்டனம் தெரிவித்திருக்கிறார்.

இதுதொடர்பாக அவர் வெளியிட்டிருக்கும் பதிவில், "புதிய தலைமைச் செயலகம் கட்டுவதற்காகத் தேர்ந்தெடுக்கப்பட்ட பட்டினப்பாக்கம் கடற்கரையை ஒட்டிய சாந்தோம் சாலையில், காலம் காலமாக வசித்து வரும் மீனவர்கள், பொதுமக்களின் குடியிருப்புகள், பள்ளிகள், வாகன போக்குவரத்து நெரிசல் என்று மிகவும் நெருக்கடியான பகுதியாகும்.

முதல்வர் விஜய்
முதல்வர் விஜய்

இடநெருக்கடி, வாகனப் போக்குவரத்து நெரிசல் இல்லாத இடத்தில் புதிய தலைமைச் செயலகம் அமைக்கப்பட வேண்டும் என்று அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம், ஆட்சியில் இருந்த காலங்களில் புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர். அவர்களும், புரட்சித் தலைவி அம்மா அவர்களும் பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டார்கள்.

விவசாயிகள் பிரச்சனை, பொதுமக்களின் சமூக நலப் பிரச்னைகள் இருக்கும் இத்தருணத்தில், கடுமையான நிதி நெருக்கடி, கடன் சுமையில் சிக்கித் தவிக்கும் இந்த நிலையில், கடன் வாங்கி ரூ. 1,200 கோடி செலவு செய்து பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமைச் செயலகம் கட்டுவது தற்போது அவசியமற்றது.

எடப்பாடி பழனிசாமி
எடப்பாடி பழனிசாமி

புதிய தலைமைச் செயலகம் கட்ட வேண்டாம் என்று அதிமுக கூறவில்லை. தமிழகத்தின் நிதிநிலை சீரான பின்பு, போக்குவரத்து நெரிசலற்ற, மக்களுக்குப் பாதிப்பு இல்லாத இடத்தில் புதிய தலைமைச் செயலகம் கட்ட உத்தேசிக்கலாம். தற்போதைய நிலையில் புதிய தலைமைச் செயலகம் கட்டுவது தேவையற்றது. எனவே, இத்திட்டத்தைக் கைவிட வேண்டும் என்று த.வெ.க. அரசின் முதலமைச்சர் திரு. ஜோசப் விஜய் அவர்களை வலியுறுத்துகிறேன்" என்று தெரிவித்திருக்கிறார்.

"திரை கதாநாயகனாகவோ, வேறு சாதியை சேர்ந்தவனாகவோ இருந்திருந்தால் தூக்கி கொண்டாடி இருப்பார்கள்" - திருமா

திருமண விழாவில் கலந்துகொண்ட விசிக தலைவர் திருமாவளவன் திமுகவின் தோல்வி குறித்து பேசியிருக்கிறார். "திமுகதான் எங்களை கைவிட்டுவிட்டது. நாங்கள் கூட்டணியில் இருந்து வெளியேறவில்லை. மதிமுகவை தனிச் சின்னத்தில... மேலும் பார்க்க

"அடுத்த முதல்வர் திருமாவளவன்தான் என ஆதவ் பிரசாரம் மேற்கொள்ள சொன்னார், ஆனால்..!' - திருமா சொல்வதென்ன?

விசிக தலைவர் தொல். திருமாவளவன் நிகழ்ச்சி ஒன்றில் திமுகவுடான கூட்டணி குறித்து பேசியிருக்கிறார். " தொடர்ச்சியாக திமுகவுடன் நாங்கள் கூட்டணியில் இருந்தோம். 2024 நாடாளுமன்றத் தேர்தலில் இருந்தே திமுகவுடனானக... மேலும் பார்க்க

``மக்களின் தேவைகளையும், உரிமைகளையும் விவாதிக்க வேண்டிய சட்டமன்றம் இன்றைக்கு..." - சீமான் ஆவேசம்

இம்மானுவேல் சேகரனார் நினைவு தினத்தை முன்னிட்டு ராமநாதபுரத்தில் அவருக்கு மரியாதை செலுத்தும் நிகழ்வு நடந்தது. தவெக, திமுக உள்ளிட்ட அரசியல் கட்சித் தலைவர்களும், பிரதிநிதிகளும் இந்த நிகழ்வில் கலந்து கொண்ட... மேலும் பார்க்க

BRICS மாநாடு: புதின், ஜி ஜின்பிங், மசூத் பெசெஷ்கியானை தனிப்பட்ட முறையில் சந்திக்கும் மோடி!

இந்தியா டெல்லியில் பிரிக்ஸ் மாநாடு நாளையும், நாளை மறுநாளும் (செப்டம்பர் 12, 13) நடைபெற இருக்கிறது. ஒவ்வொரு ஆண்டும் சுழற்சி முறையில் பிரிக்ஸ் அமைப்பின் தலைமை மாறும். அப்படி இந்த ஆண்டு பிரிக்ஸ் தலைமை இந... மேலும் பார்க்க

"ஈரான் போரைத் தொடங்கியதற்காக நான் வருத்தப்பட்டதே இல்லை; காரணம்..." - ட்ரம்ப்

ஈரான் போர் இன்னும் தொடர்ந்துகொண்டிருக்கிறது. ஹார்முஸ் நீர்ச்சந்தியும் மூடிதான் இருக்கிறது. குறிப்பிட்ட கப்பல்களுக்கு மட்டும் அவ்வப்போது அனுமதி கிடைத்து வருகிறது. ஹார்முஸ் நீர்ச்சந்தி மூடல் அமெரிக்கா, ... மேலும் பார்க்க