Haiku: "ஹிப் ஹாப் ஆதி அண்ணா எங்களை பாட வச்ச அந்த மொமன்ட்..!" - அதிர்ச்சி அருண் ப...
புதிய தலைமைச் செயலகம்: 'தமிழ்நாட்டில் நடப்பது மக்கள் ஆட்சியா, ஜோதிடர் ஆட்சியா?'- கனிமொழி கேள்வி
"தமிழ்நாட்டில் நடப்பது மக்கள் ஆட்சியா, ஜோதிடர் ஆட்சியா?" என்று திமுக எம்.பி கனிமொழி ஆளும் தவெக அரசை நோக்கி காட்டமாக கேள்வி எழுப்பியிருக்கிறார்.
இட நெருக்கடியான மற்றும் கடல் வளம் பாதிக்கும் வகையில் பட்டினப்பாக்கத்தில் தலைமைச் செயலகம் அமைக்கக் கூடாது என தங்களது கண்டனத்தை எதிர்க்கட்சிகள் பதிவு செய்தனர்.
மேலும், தங்கள் வாழ்வாதாரம் பாதிக்கப்படும் என மீனவ அமைப்புகளும் கண்டனம் தெரிவித்து போராட்டத்தையும் முன்னெடுத்தனர்.

இப்படி புதிய தலைமைச் செயலகம் தொடர்பாக தொடர் அதிருப்திகள் இருந்துவரும் சூழலில், புதிய தலைமைச் செயலகத்திற்கு பட்டினப்பாக்கத்தில் இடம் தேர்வு செய்தது யார் என RTI மூலம் எழுப்பப்பட்ட கேள்விக்கு தங்களிடம் விவரங்கள் இல்லை என தமிழ்நாடு அரசு பதில் கொடுத்திருக்கிறது.
பட்டினப்பாக்கம் இடத்தேர்வு குறித்த RTI கேள்விக்கு அரசிடம் பதிலில்லாததும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
இதனைச் சுட்டிக்காட்டி கனிமொழி எம்.பி தனது எக்ஸ் தளப் பக்கத்தில், ``புதிய தலைமைச் செயலகத்திற்கு பட்டினப்பாக்கத்தில் இடம் தேர்வு செய்ததற்கான ஆய்வு விவரங்கள் தங்களிடம் இல்லை என்று RTI மூலம் எழுப்பிய கேள்விக்கு தவெக அரசு பதிலளித்திருக்கிறது.
அப்படியென்றால், இடத்தைத் தேர்வு செய்தது யார்? முதலமைச்சர் திரு.விஜய் அவர்களா? இல்லை ஜோதிடரா? தமிழ்நாட்டில் நடப்பது மக்கள் ஆட்சியா, ஜோதிடர் ஆட்சியா?" என்று கேள்வி எழுப்பி இருக்கிறார்.
Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group...
இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்... https://tinyurl.com/2b963ppb
வணக்கம்,
BIG BREAKINGS முதல்... அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.
ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்...https://tinyurl.com/2b963ppb














