செய்திகள் :

புதுக்கோட்டை: பசியில் போலி டோக்கன் கொடுத்த பெண் தாக்கப்பட்டாரா? சர்ச்சை வீடியோவின் பின்னணி என்ன?

post image

புதுக்கோட்டை மாவட்டம், கோட்டைப்பட்டினத்தைச் சேர்ந்த ரஹ்மத்துல்லா என்பவரின் மனைவி ஜெரினா ( வயது: 50 ). அம்மாபட்டினத்தில் உள்ள பள்ளிவாசலில் மெகராஜ் இஸ்லாமிய விழாவிற்காக டோக்கன் கொடுத்து உணவு வழங்கப்பட்டது.

இந்நிலையில், அங்கு உணவு வாங்குவதற்குக் கொடுக்கப்பட்ட டோக்கனை ஜெரினா, ஜெராக்ஸ் எடுத்துக்கொண்டு சென்று உணவை வாங்கியதாகச் சொல்லப்படுகிறது.

தாக்குதல்
தாக்குதல்

அப்போது, அதைக் கண்ட நிர்வாகிகள் பசிக்காகப் போலி டோக்கன் கொடுத்து உணவு வாங்குவது தவறு என்று கூறி, அவரை நிற்க வைத்து கேள்வி கேட்பது போலவும், பர்தவைக் கழட்டச் சொல்லி மிரட்டுவது போலவும் வீடியோ ஒன்று வெளியானது.

அந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலான நிலையில், அது குறித்து பலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

இதற்கிடையில், பாதிக்கப்பட்டதாகச் சொல்லப்படும் அந்தப் பெண் மணமேல்குடி அரசு மருத்துவமனையில் சிகிச்சைபெற்று வருவதாகச் சொல்லப்படுகிறது. இந்நிலையில், இந்த விவகாரம் குறித்து பேசிய சமூக ஆர்வலர்கள் சிலர்,

"தவறு செய்த ஜெரினா என்ற பெண்ணை போலீஸில் ஒப்படைத்திருக்கலாம். அல்லது அந்தக் குடும்பத்தாரிடம் சொல்லி அதனைக் கண்டித்து இருக்கலாம். ஆனால், அந்தப் பெண்ணின் பர்தாவைப் பிடித்து கிழித்து அடித்து மானபங்கப்படுத்தி இருக்கிறார்கள்.

ammapattinam
ammapattinam

தனது வயிற்றுப்பசியைப் போக்க ஒருவேளை உணவிற்காகத் தவறு செய்த பெண்ணைத் தண்டிக்கும் இந்த ஜமாத்தார்கள் செயலை தமிழக காவல்துறை தாமாக முன்வந்து நடவடிக்கை எடுக்க வேண்டும். அந்தப் பெண் தவறே செய்திருந்தாலும், பர்தாவைப் பிடித்து இழுத்து அவமானப்படுத்தியது கண்டிக்கத்தக்கது.

உணவுக்காக யாரையும் கையேந்த விடக்கூடாது. ஆனால், அந்த உணவைத் தானாக வந்து கேட்ட பெண்ணை இப்படி அவமானப்பாடுத்தியது, அந்தப் பெண்ணின் மனநிலையை எவ்வளவு பாதித்திருக்கும்?" என்றார்கள்.

இந்நிலையில், அம்மாபட்டினம் பகுதியைச் சேர்ந்தவர்களோ,

"அந்தப் பெண்மணியைத் தாக்கவெல்லாம் இல்லை. உணவு வழங்க வழங்கப்பட்ட டோக்கனை ஜெராக்ஸ் எடுத்து வந்ததால், போலியாக உணவு டோக்கனை யாரேனும் அச்சடித்துக் கொடுக்கிறார்களோ என்ற சந்தேகத்தில்தான் அந்தப் பெண்ணின் பர்தாவைக் கழற்றச் சொன்னார்கள்.

பர்தாவைப் பிடித்து கிழிக்கவெல்லாம் இல்லை. இங்குள்ள பா.ஜ.க-வைச் சேர்ந்த சிலர் சாதாரணமாக நடந்ததிந்த நிகழ்வு குறித்த இந்த வீடியோவை சமூக வலைத்தளங்களில் பரப்பி, தேவையில்லாத பரபரப்பை ஏற்படுத்திவிட்டார்கள்.

attack
attack

எல்லோருக்கும் உணவு கொடுக்க வேண்டும் என்ற அடிப்படையில் தான் அந்த விழாவையே நடத்துகிறார்கள். அப்படி இருக்கையில் உணவு கேட்டு வந்த பெண்ணை அவமானப்படுத்துவார்களா? போலி டோக்கன் என்று சந்தேகப்பட்டு கேள்வி கேட்கப் போய், இப்படி வீண் பரபரப்பாகிவிட்டது" என்றார்கள்.

ஆனாலும், சமூக வலைத்தளங்களில் இந்த வீடியோ பதிவினைப் பார்த்த பலரும், அப்பெண்ணின் ஆடையைக் கிழித்து, அவரை அடித்து துன்புறுத்தினார்களா என்று போலீஸார் விசாரணை மேற்கொண்டு நடவடிக்கை எடுக்க வேண்டுமென எதிர்பார்க்கிறார்கள்.

செல்போன் வெடித்து 27 பேர் பலியானதாக பரவும் ஆடியோ - எச்சரித்த தூத்துக்குடி போலீஸார்!

தூத்துக்குடி மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக சுமார் 17 விநாடிகள் மட்டுமே ஒரு சிறுவன் பேசுவது போன்ற ஆடியோ ஒன்று சமூக வலைதளங்களில் வைரலாகியும் வேகமாக பகிரப்பட்டும் வருகிறது. அதில் பேசும் சிறுவன், “தூத்த... மேலும் பார்க்க

மும்பை கட்டடத்தில் துப்பாக்கிச்சூடு நடத்தியது ஏன்? - பாலிவுட் நடிகர் கமால் கானிடம் போலீஸார் விசாரணை!

பாலிவுட் நடிகர் கமால் கான் மும்பை லோகண்ட்வாலா பகுதியில் வசித்து வருகிறார். அவர் வசித்து வந்த பங்களாவிற்கு அருகில் உள்ள நாலந்தா கட்டடத்தில் இரண்டு நாட்களுக்கு முன்பு துப்பாக்கியால் சுடும் சத்தம் கேட்டத... மேலும் பார்க்க

சத்தீஷ்கர்: ஒரே இரவில் மாயமான இரும்பு பாலம் - 5 பேர் கைது; மூளையாக செயல்பட்ட பழைய இரும்பு வியாபாரி!

இந்தியாவில் அவ்வப்போது இரும்பால் கட்டப்பட்ட பாலங்கள் காணாமல் போய்விடுகிறது. இதற்கு முன்பு பீகாரில் ஷெட்டில் நிறுத்தி இருந்த ரயிலைக்கூட ஒவ்வொரு பகுதியாக கழற்றி எடுத்துச்சென்று விற்பனை செய்துள்ளனர். இப்... மேலும் பார்க்க

சேலம்: ஓடும் ரயிலில் இளம்பெண்ணுக்குப் பாலியல் தொல்லை; கைதுசெய்யப்பட்ட முதியவர்!

சென்னையில் இருந்து திருவனந்தபுரம் நோக்கி அதிவிரைவு ரயில் நேற்று சென்று கொண்டிருந்தது. அந்த ரயிலின் முன்பதிவுப் பெட்டியில் கேரள மாநிலத்தைச் சேர்ந்த 25 வயது பெண் ஒருவர் பயணம் செய்தார். அந்த ரயில் நேற்று... மேலும் பார்க்க

சென்னை: திமுக முன்னாள் எம்.பி-யின் காரை சேதபடுத்திய வழக்கு - தலைமறைவான அதிமுக நிர்வாகி!

சென்னை வேளச்சேரி செக் போஸ்ட் நேரு நகரைச் சேர்ந்தவர் ராஜேஸ்வரன். இவர் தி.நகர் ஹபிபுல்லா சாலையில் தி.மு.க-வின் முன்னாள் எம்.பி ஜெயதுரைக்குச் சொந்தமான ஆயுர்வேத மருத்துவமனையில் மேலாளராகப் பணியாற்றி வருகிற... மேலும் பார்க்க

குடிபோதையில் விழுந்த கணவன்; காய்கறி வெட்டிய கத்தியுடன் பிடித்த மனைவி - டெல்லியில் சோகம்

டெல்லி அருகில் உள்ள குருகிராம் என்ற இடத்தில் வசித்து வந்தவர் சுனில் குமார். கடற்படையில் பணியாற்றி ஓய்வு பெற்று தனியார் நிறுவனம் ஒன்றில் பணியாற்றி வந்தார். சுனில் குமார் மனைவி மம்தா. சுனில் குமார் வழக்... மேலும் பார்க்க