செய்திகள் :

புதுக்கோட்டை: 'பேய் விரட்டும்' போராட்டம்; எலுமிச்சம்பழம், தாயத்து, சிலுவை கட்டிய த.வா.க-வினர்!

post image

புதுக்கோட்டை மாவட்டம் விராலிமலை சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட அன்னவாசல் ஒன்றியம் மாங்குடி கிராமத்தில் கடந்த 1995-ஆம் ஆண்டு அரசு துணை சுகாதார நிலையம் திறக்கப்பட்டது. சுமார் 5,000 மக்கள் தொகை கொண்ட இந்த கிராமத்தில், கர்ப்பிணிகள், குழந்தைகள் மற்றும் முதியவர்கள் அவசர மருத்துவ உதவிக்காக இந்த மையத்தையே நம்பியிருந்தனர்.

இந்த நிலையில், கடந்த பல மாதங்களாக இந்த சுகாதார நிலையம் பூட்டியே கிடந்தது. இதனால் அவசர மருத்துவ உதவிக்கு வரும் பொதுமக்கள் தினமும் ஏமாற்றத்துடன் திரும்பிச் சென்றனர். இதுகுறித்து மாவட்ட சுகாதார அதிகாரிகளிடம் பொதுமக்கள் மனு அளித்தபோதெல்லாம், அங்கு 3 செவிலியர்கள் பணியில் இருப்பதாக வருகைப் பதிவேட்டைக் காட்டி அதிகாரிகள் கூறி வந்தனர்.

த.வா.க. வினோத ஆர்ப்பாட்டம்!

ஆனால், நேரில் யாரும் பணிக்கு வரவில்லை. இதனிடையே, சமீபத்தில் நடந்த கிராம சபைக் கூட்டத்தில் ஒரு செவிலியர் கலந்துகொண்டு "நான் தான் இந்த மையத்தின் செவிலியர்" எனக் கூறியுள்ளார். எனினும், அவர் தினமும் பணிக்கு வருவதில்லை என்பது கிராம மக்களுக்குத் தெரியவந்தது.

இதையடுத்து, தமிழக வாழ்வுரிமை கட்சியினர் மாங்குடி கிராம மக்களுடன் இணைந்து போராட்டம் நடத்த முடிவு செய்தனர். "அதிகாரிகள் சொல்வது போல் பணியாளர்கள் உள்ளே இருந்தால், மையம் ஏன் பூட்டிக்கிடக்கிறது? ஒருவேளை இங்கு பேய்கள் குடியேறியிருப்பதால் செவிலியர்கள் வர அச்சப்படுகிறார்களா?" எனக் கேள்வி எழுப்பிய அவர்கள், சுகாதார நிலையத்தில் 'பேய் விரட்டும் போராட்டம்' நடத்தப்படும் என அறிவித்தனர்.

அதன்படி, த.வா.க. மாநில இளைஞரணி செயலாளர் நியாஸ் தலைமையில், மும்மத ஆன்மீக தலைவர்கள், கட்சி நிர்வாகிகள் மற்றும் கிராம மக்கள் ( ஆகஸ்ட்- 22,) காலை அங்கு திரண்டனர்.

போராட்டம் அறிவிக்கப்பட்டதைத் தொடர்ந்து, பூட்டிக்கிடந்த அரசு துணை சுகாதார நிலையம் நேற்று அவசர அவசரமாகத் திறக்கப்பட்டுச் செயல்படத் தொடங்கியது.

அப்போது போராட்டத்தில் ஈடுபட்டவர்கள், "நாங்கள் பேய் விரட்ட வருகிறோம் என்றதும் சுகாதார நிலையத்தைப் பிடித்திருந்த பேய்கள் ஓடிவிட்டன.

த.வா.க. வினோத ஆர்ப்பாட்டம்!

இனிமேல் பேய்கள் உள்ளே வராமல் இருக்க, மந்திரிக்கப்பட்ட எலுமிச்சம்பழம், பச்சை கயிற்றில் கட்டப்பட்ட தாயத்து மற்றும் சிலுவையை நுழைவாயில் அருகே சுவரில் தொங்கவிடுகிறோம். இனி பொதுமக்கள் மருத்துவ உதவி பெறலாம்" எனத் தெரிவித்தனர்.

மேலும், "இன்றைய போராட்டத்தை முடக்க மட்டுமே மையத்தைத் திறந்துவிட்டு, நாளை மீண்டும் மூடினால் எங்களது போராட்டம் வேறு விதமாக இருக்கும்" என்றும் எச்சரித்தனர்.

இதுகுறித்து சுகாதாரத் துறை அலுவலர்களிடம் கேட்டபோது, "செவிலியர் பற்றாக்குறை காரணமாக இங்கு பணியாற்றியவர்கள் மாற்றுப் பணிக்குச் சென்றுவிட்டனர். இங்குள்ள காலிப்பணியிடங்களை நிரப்பினால் மட்டுமே இதற்கு முழுமையான தீர்வு கிடைக்கும்" என்று தெரிவித்தனர்.

தமிழ்நாட்டில் பட்ஜெட் கூட்டத்தொடர் நிறைவு; ஆளுநரைச் சந்தித்த JCD பிரபாகர் - என்ன பேசினார்கள்?

தமிழ்நாட்டில் தவெக அரசின் முதல் பட்ஜெட் கூட்டத்தொடர் நடந்து முடிந்துள்ளது. இந்தக் கூட்டத்தொடரில் சபாநாயகர் ஜே.சி.டி.பிரபாகருக்கு அரசியல் கட்சியினர் மற்றும் மக்களிடையே பாராட்டுகள் கிடைத்தன. இன்று சென்ன... மேலும் பார்க்க

மதுராந்தகம், தாராபுரம் இடைத்தேர்தல்: தனித்துக் களமிறங்கும் கம்யூனிஸ்ட் கட்சிகள்! - யார் எங்கே?

வருகிற அக்டோபர் 6-ம் தேதி, தமிழ்நாட்டில் மதுராந்தகம் மற்றும் தாராபுரத்தில் இடைத்தேர்தல் நடக்கவிருக்கிறது. கடந்த சட்டமன்றத் தேர்தலில், இந்த இரு தொகுதிகளிலும் அதிமுக வென்றிருந்தது. மதுராந்தகத்தில் மரகதம... மேலும் பார்க்க

BRICS: "இன்று உலகளவில் பதற்றங்கள் தொடர்ந்து அதிகரித்துக்கொண்டே வருகின்றன" - மோடி பேச்சு

டெல்லியில் நடக்கும் பிரிக்ஸ் மாநாட்டின் நிறைவு நாள் இன்று. மாநாட்டில் இன்று இந்தியப் பிரதமர் மோடி காலநிலை மாற்றம் குறித்து, “இந்திய நாகரிகத்தில், இயற்கை அன்னையாகப் போற்றப்படுகிறது. பல நூற்றாண்டுகளாகவே... மேலும் பார்க்க

"தீமைகள் எந்த ரூபத்தில் தமிழகத்திற்கு வந்தாலும் அது தீயசக்தி திமுகவால் மட்டுமே!” - நிர்மல் குமார்

மிசா சட்டத்தின் கீழ் கைதான திமுக தலைவர் ஸ்டாலினை அவதூறாக பேசியதாக, தமிழ்நாடு முதலமைச்சர் விஜய் மற்றும் தமிழ்நாடு சட்டத்துறை அமைச்சர் நிர்மல் குமாரை எதிர்த்துத் திமுகவினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர். அப்போ... மேலும் பார்க்க

"நீங்கள் திருந்தாவிட்டால் திருத்தப்படுவீர்கள்" - தவெகவிற்கு ஆ.ராசா எச்சரிக்கை

தமிழ்நாடு சட்டப்பேரவையில் தமிழ்நாடு முதலமைச்சர் விஜய் திமுகத் தலைவர் ஸ்டாலின் மிசா சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டது குறித்துச் சர்ச்சையாகப் பேசியிருந்தார். விஜய்யின் இந்தப் பேச்சிற்கு எதிர்ப்புத் தெ... மேலும் பார்க்க

"பாஜக-வை எதிர்க்க பயப்படும் தவெக; பாராட்டியாவது கருத்து சொல்லலாம்!" - தோழர் பாலபாரதி கிண்டல்!

சட்டமன்றக் கூட்டத்தொடரில், காவல்துறை மானியக் கோரிக்கையின்போது முதல்வர் அளித்த ஆவேச உரை, அரசியல் அரங்கில் பலத்த சர்ச்சையையும் விமர்சனத்தையும் உருவாக்கியிருக்கிறது. இந்த நிலையில், த.வெ.க அரசுக்கு ஆதரவு ... மேலும் பார்க்க