செய்திகள் :

புதுக்கோட்டை: முன்னாள் அமைச்சரின் மகன்கள் மோதல்: தம்பியை கத்தியால் குத்தி கொடூரமாகக் கொன்ற அண்ணன்!

post image

புதுக்கோட்டை மாவட்டம், ஆலங்குடி தொகுதி முன்னாள் அதிமுக அமைச்சரான மறைந்த வெங்கடாசலத்தின் மகன்களுக்கு இடையே ஏற்பட்ட சொத்து தகராறில், தம்பியை அண்ணனே கொடூரமாகக் கொலைசெய்த சம்பவம், அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ஜெயலலிதா ஆட்சிக் காலத்தில் 2001 ஆம் ஆண்டில் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சராக இருந்தவர் வெங்கடாசலம். ஆலங்குடி பகுதியில் மிகுந்த செல்வாக்குப் பெற்றிருந்த இவரை 2010 , அக்டோபர் 7 ஆம் தேதி 5 பேர் கொண்ட கும்பல் அவருடைய வீட்டில் வைத்து வெட்டிக் கொலை செய்தது.

முன்னாள் அமைச்சர் வெங்கடாசலத்தின் மூத்த மனைவியின் மகன் ராஜபாண்டியன். இவர் அதிமுக ஜெ பேரவை நிர்வாகி ஆவார். இளைய மனைவியின் மகன் ராஜராஜன் விவசாயி.

இவர்களுக்கு இடையே குடும்பச் சொத்து ஏற்கனவே பிரிக்கப்பட்டுவிட்ட நிலையிலும், தனக்கு பங்கு இருப்பதாகக் கூறி தம்பி ராஜராஜனை வீட்டிற்குள் விடாமல் ராஜபாண்டியன் மிரட்டி வந்துள்ளார்.

இதனால் வீட்டைப் பூட்டி ராஜராஜனை வெளியேற்றியதால், அவர் குடும்பத்துடன் உறவினர் வீட்டில் தங்கி வந்தார். பின்னர் வீட்டை மீட்க நீதிமன்றம் சென்று உத்தரவு பெற்ற ராஜராஜன், நேற்று (செப்டம்பர் 2) போலீஸாரிடமிருந்து வீட்டின் சாவியைப் பெற்றார்.

இன்று (வியாழக்கிழமை) காலை ராஜராஜன் வீட்டைச் சுத்தம் செய்துகொண்டிருந்தபோது, அங்கு வந்த ராஜபாண்டியன் அரிவாளால் வெட்டப் பாய்ந்துள்ளார். உயிரைக் காப்பாற்றிக் கொள்ள ஓடி அருகில் இருந்த ஒரு வீட்டிற்குள் பதுங்கிய தம்பியை விடாமல் துரத்திய அண்ணன் ராஜபாண்டியன், கத்தியால் குத்தியதுடன், அங்கிருந்த சிலிண்டரைத் தூக்கி தலையில் போட்டுவிட்டுத் தப்பியோடிவிட்டார்.

இதில் ராஜராஜன் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.

தம்பியைக் கொலை செய்த அண்ணனை கைது செய்யக்கோரி உறவினர்களும் பொதுமக்களும் பட்டுக்கோட்டை - புதுக்கோட்டை சாலையில் திடீர் மறியலில் ஈடுபட்டனர்.

போலீஸார் உடலைக் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்து, வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

இரவு பார்ட்டிக்கு எதிர்ப்பு, கேமரா மூலம் கண்காணிப்பு: ஆத்திரத்தில் மாமனாரை ஆள்வைத்து கொன்ற மருமகள்!

உத்தரப்பிரதேச மாநிலம், கான்பூரைச் சேர்ந்தவர் வினீத் மினோச்சா (63). தொழிலதிபரான இவரின் மருமகள் பெயர், ஷாலு. சம்பவத்தன்று வினீத் அவரது வீட்டில் 26 முறை கத்தியால் குத்திக் கொலைசெய்யப்பட்டார். இது தொடர்பா... மேலும் பார்க்க

நெல்லை: மது பாட்டிலுக்கு ஆசைப்பட்டு கார் கடத்திய இளைஞர்கள் - போதை தெளிந்ததும் சிறை சென்ற சோகம்!

நெல்லை டவுன், கல்லத்தி முடுக்கு தெருவைச் சேர்ந்தவர், சூர்ய சரவணன். பட்டப் படிப்பை முடித்த இவர், வேலை தேடிவருகிறார். தன் தந்தை குமரகுரு ராமலிங்கத்தின் காரை, சூர்ய சரவணன் பயன்படுத்தி வந்தார்.வீட்டுக்குள... மேலும் பார்க்க

`Will Kill Sugar Daddy Soon' - மனைவியைக் கொன்று தலையை ஃபிரிட்ஜில் வைத்த இளைஞர் `பகீர்' தகவல்!

அஸ்ஸாம் மாநிலம், கவுகாத்தியில் உள்ள அடுக்கு மாடிக் குடியிருப்பில் ஒரு வீட்டிலிருந்து வந்த துர்நாற்றத்தைத் தொடர்ந்து, பக்கத்து வீட்டுக்காரர்கள் இது குறித்து போலீஸாருக்குத் தகவல் கொடுத்தனர். போலீஸார் வி... மேலும் பார்க்க

குழந்தை திருமணங்களால் மூன்று சிறுமிகள் கர்ப்பம்! – போக்சோ வழக்கில் இளைஞர்களை தேடும் கடலூர் போலீஸ்

கடலூர் மாவட்டம், குறிஞ்சிப்பாடி அருகே இருக்கும் ஒரு கிராமத்தைச் சேர்ந்த 16 வயது சிறுமி, செவிலியர் கல்லூரியில் படித்து வருகிறார். சில தினங்களுக்கு முன்பு உடல்நிலை சரியில்லை என்று மருத்துவமனைக்குச் சென்... மேலும் பார்க்க

மும்பை விமான நிலையத்தில் பயணிகள் பேக்கில் தொடரும் பணம், நகை திருட்டு! குற்றவாளிகளை பிடிக்க தனிப்படை

மும்பை விமான நிலையத்தில் பயணிகளின் பேக்கில் இருந்து அடிக்கடி திருட்டு நடக்கிறது. சமீபத்தில் மும்பையில் இருந்து நியூயார்க் சென்ற மாணவர் ஒருவரின் பேக்கில் இருந்து 5 ஆயிரம் அமெரிக்க டாலர் திருட்டு போனது.... மேலும் பார்க்க

வீட்டிக்கு வெளியில் மது அருந்தியதை தட்டிக்கேட்ட மணிப்பூர் பாடகர் - அடித்து கொன்ற ஹோட்டல் ஊழியர்கள்

மணிப்பூரை சேர்ந்த பாடகர் விக்ரம் சிங் என்பவர் டெல்லி அருகில் உள்ள கிலோகரி என்ற கிராமத்தில் பல ஆண்டுகளாக வசித்து வந்தார். அவரது வீட்டிற்கு அருகில் ஒரு ஹோட்டல் இருக்கிறது. அங்குள்ள விக்ரம் சிங் வீட்டிற்... மேலும் பார்க்க