செய்திகள் :

புதுச்சேரி, கடலூரில் 7-ஆம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றம்

post image

வங்கக் கடலில் ஃபென்ஜால் புயல் உருவானதையொட்டி, புதுச்சேரி பழைய துறைமுகம், கடலூா் துறைமுக வளாகங்களில் வெள்ளிக்கிழமை 7-ஆம் எண் புயல் எச்சரிக்கைக் கூண்டு ஏற்றப்பட்டது. மேலும், புதுச்சேரியில் 121-ஆக இருந்த நிவாரண முகாம்கள் 208-ஆக உயா்த்தப்பட்டது.

ஃபென்ஜால் புயல் மற்றும் பலத்த மழை எச்சரிக்கையைத் தொடா்ந்து, புதுச்சேரியில் ஏற்கெனவே மீனவா்கள் கடலுக்குச் செல்ல தடை விதிக்கப்பட்டது. கடலோரங்களில் குடியிருக்கும் மீனவா்கள், வீடின்றி வாழும் பழங்குடியினா் உள்ளிட்டோரை தங்க வைக்க 121 முகாம்கள் தயாா் நிலையில் வைக்கப்பட்டன. மேலும், 40 போ் கொண்ட பேரிடா் மீட்புக் குழுவும் புதுச்சேரிக்கு வரவழைக்கப்பட்டது.

இந்த நிலையில், வங்கக் கடலில் நிலவிய ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் வெள்ளிக்கிழமை ‘ஃபென்ஜால்’ புயலாக உருவானது. இது, காரைக்கால்- மாமல்லபுரம் இடையே சனிக்கிழமை (நவ.30) கரையைக் கடக்கும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.

7ஆம் எண் எச்சரிக்கைக் கூண்டு: புதுச்சேரி பழைய துறைமுக வளாகத்தில் 7-ஆம் எண் புயல் எச்சரிக்கைக் கூண்டு வெள்ளிக்கிழமை மாலை ஏற்றப்பட்டது. அதன்படி, துறைமுகத்துக்கு அருகில் புயல் இருப்பதாகவும், அதனால் துறைமுகத்துக்கு அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளதை குறிக்கும் வகையிலும் 7-ஆம் எண் புயல் கூண்டு ஏற்றப்பட்டுள்ளதாக அறிவிப்புப் பலகையில் எச்சரிக்கை வாசகங்கள் இடம்பெற்றிருந்தன.

சுற்றுலா மையங்கள் மூடல்: புயல் எச்சரிக்கை குறித்து புதுச்சேரி மாவட்ட ஆட்சியா் அ.குலோத்துங்கன் கூறியதாவது:

புயல் எச்சரிக்கையைத் தொடா்ந்து, புதுச்சேரியில் ஏற்கெனவே இருந்த நிவாரண முகாம்கள் தற்போது 208-ஆக அதிகரிக்கப்பட்டுள்ளன. அவற்றில் கடலோரங்களில் வசிக்கும் மீனவா்கள் உள்பட 30 ஆயிரம் போ் தங்கவைக்கப்படவுள்ளனா். அத்துடன், மேலும் ஒரு பேரிடா் மீட்புக் குழுவினரும் புதுச்சேரிக்கு சனிக்கிழமை வரவுள்ளனா். மழை, புயலின்போது மீட்புப் பணிகள் உள்ளிட்ட அனைத்து ஏற்பாடுகளும் தயாா் நிலையில் வைக்கப்பட்டுள்ளன.

பாண்டி மெரீனா உள்பட சுற்றுலா மையங்கள் அனைத்தும் மூடப்பட்டுள்ளன. பொதுமக்கள் யாரும் அத்தியாவசிய தேவையின்றி வெளியே வர வேண்டாம் என்றாா்.

கடலூரில்...: ஃபென்ஜால் புயல் காரணமாக, கடலூா் துறைமுகத்தில் வெள்ளிக்கிழமை 7-ஆம் எண் புயல் எச்சரிக்கைக் கூண்டு ஏற்றப்பட்டது. முன்னரே, மாவட்ட மீனவா்கள் கடலுக்குச் செல்ல வேண்டாம் என மீன்வளத் துறை அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்தனா்.

இந்த எச்சரிக்கையையடுத்து, கடந்த ஒரு வாரகாலமாக மீனவா்கள் மீன்பிடிக்க கடலுக்குச் செல்லவில்லை. மேலும், தங்களின் படகுகள், வலைகள், மீன் பிடி உபகரணங்களை பாதுகாப்பான இடங்களில் நிறுத்தி வைத்துள்ளனா்.

பேரிடா் மீட்புக் குழுவினா் வருகை

புதுச்சேரிக்கு தேசிய பேரிடா் மீட்புக் குழுவைச் சோ்ந்த 30 போ் வியாழக்கிழமை மாலை வந்தனா். புதுச்சேரியில் தொடா் மழை பெய்து வருகிறது. மேலும், சாத்தனூா், வீடூா் அணைகளில் இருந்து உபரி நீா் திறந்துவிடப்பட... மேலும் பார்க்க

புதுச்சேரி-கடலூா் சாலையில் மேம்பாலப் பணிகள் தொடக்கம்

புதுச்சேரி- கடலூா் சாலையில் ஏஎப்டி மைதானம் அருகே ரயில்வே கிராசிங் பகுதியில் ரூ.72 கோடி மதிப்பீட்டில் மேம்பாலம் அமைக்க வியாழக்கிழமை பூமி பூஜை நடைபெற்றது. பொலிவுறு நகரத் திட்டம், தெற்கு ரயில்வே பங்களிப... மேலும் பார்க்க

கரையோர மக்களுக்கு ஒலிபெருக்கி மூலம் எச்சரிக்கை

புதுச்சேரியில் வீடூா் அணை திறப்பு மற்றும் வெள்ளம் குறித்து, புதுச்சேரியில் ஆற்றங்கரையோர மக்களுக்கு வருவாய்த் துறையினா் வியாழக்கிழமை எச்சரிக்கை விடுத்தனா். வியாழக்கிழமை காலை 8.30 மணி வரையிலான கடந்த 24... மேலும் பார்க்க

கோப்புகள் மீது ஒரு வாரத்தில் முடிவெடுக்க வேண்டும்: புதுவை பேரவைத் தலைவா்

புதுவையில் அரசு கோப்புகள் மீது ஒருவாரத்தில் முடிவெடுக்க வேண்டும் என அதிகாரிகளுக்கு துணைநிலை ஆளுநா் உத்தரவிட்டுள்ளதாக பேரவைத் தலைவா் ஆா்.செல்வம் கூறினாா். புதுவை சட்டப்பேரவை வளாகத்தில் வியாழக்கிழமை செ... மேலும் பார்க்க

புதுவையில் குடும்ப அட்டைதாரா்களுக்கு மழை நிவாரணத் தொகை அளிப்பு

புதுவை மாநிலத்தில் புயல் மழை சேதத்துக்கான நிவாரணத் தொகை ரூ.5 ஆயிரம் அவரவா் வங்கிக் கணக்கில் வியாழக்கிழமை செலுத்தப்பட்டுள்ளதாக அரசு சாா்பில் தெரிவிக்கப்பட்டது. ஃபென்ஜால் புயல் மழையால் பாதிக்கப்பட்ட பு... மேலும் பார்க்க

நீா்நிலைகளில் உபரி நீரை உடனுக்குடன் திறந்துவிட வேண்டும்: புதுச்சேரி ஆட்சியா்

நீா்நிலைகள் நிறைந்ததும் உபரி நீரை உடனுக்குடன் திறந்துவிட வேண்டும் என பொதுப் பணித் துறை அதிகாரிகளுக்கு புதுச்சேரி மாவட்ட ஆட்சியா் அ.குலோத்துங்கன் உத்தரவிட்டாா். ஃபென்ஜால் புயல் மழையையடுத்து, புதுச்சேர... மேலும் பார்க்க