செய்திகள் :

புதுச்சேரி: `ஹோட்டல்னு நினைச்சி தூங்கிட்டோம்'- ஆளுநரை அலற வைத்த போதை இளைஞர்; பதறிய போலீஸ்!

post image

புதுச்சேரி செயிண்ட் மார்ட்டின் வீதியில் இருக்கும் பழமையான ஆளுநர் மாளிகையில் கடந்த சில மாதங்களாக பராமரிப்புப் பணி நடைபெற்று வருகிறது.  அதனால், கடற்கரை சாலையில் கலாசார மையத்துக்காக கட்டப்பட்ட கட்டடத்தை தற்காலிக ஆளுநர் மாளிகையாக மாற்றி, அங்கு குடும்பத்துடன் குடியேறினார் துணைநிலை ஆளுநர் கைலாஷ்நாதன். துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்பு, 24 மணி நேரக் கண்காணிப்பு என அந்த இடமே ஒரு கோட்டை போலக் காட்சியளிக்கும்.

புதுச்சேரி ஆளுநர் மாளிகை

நேற்று நள்ளிரவு மது போதையில் கடற்கரை சாலையில் நடந்து வந்த இரண்டு இளைஞர்கள், ஆளுநர் மாளிகையின் அழகைப் பார்த்து வியந்திருக்கிறார்கள். அத்துடன் நிற்காமல் அதன் சுவரில் ஏறிக் குதித்து ஆளுநர் மாளிகைக்குள் சென்று, அங்கிருந்த அறைகளை திறந்து திறந்து பார்த்திருக்கிறார்கள். அனைத்திலும் உயர்தர படுக்கைகளுடன் ஐந்து நட்சத்திர விடுதி அறைகளைப் போல இருந்ததால், உற்சாகமான அவர்கள் ஆடைகளை கலைந்துவிட்டு அந்த படுக்கையில் அயர்ந்து தூங்கியிருக்கிறார்கள். அவர்களில் ஒருவர் மீண்டும் ஆளுநர் மாளிகையின் சுவர் ஏறிக் குதித்து வெளியில் சென்றிருக்கிறார்.

இவர்கள் தூங்கிய அறைக்குப் பக்கத்து அறையில் ஆளுநர் மகன் தூங்கிக் கொண்டிருந்திருக்கிறார். அப்போது பக்கத்து அறையில் கேட்ட பேச்சு சத்தத்தில் எழுந்த அவர், அந்த அறைக் கதவை திறந்து பார்த்திருக்கிறார். அங்கு போதையில் தூங்கிக் கொண்டிருந்த அந்த நபரைப் பார்த்து அதிர்ச்சியடைந்த அவர், பாதுகாப்புப் பணியில் இருந்த போலீஸாரை அழைத்து அவர் யார் என்று கேட்டிருக்கிறார். அதிர்ந்து போன போலீஸார், அந்த நபரை எழுப்பி விசாரித்திருக்கிறார்கள். ஆனால் மது போதையில் இருந்த அவரால் சரியாக பேச முடியவில்லை. இந்த கலகலப்பில் ஆளுநர் கைலாஷ்நாதனும் அங்கு வந்துவிட்டிருக்கிறார்.

புதுச்சேரி ஆளுநர் கைலாஷ்நாதன்

அதனால் அவரை அலேக்காக தூக்கிய போலீஸார், முத்தியால்பேட்டை காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்று போதையை `தெளிய’ வைத்திருக்கிறார்கள். தொடர்ந்து முத்தியால்பேட்டை காவல் நிலையத்துக்கு விரைந்து சென்ற காவல்துறை உயரதிகாரிகள், அந்த நபரிடம் விசாரணை செய்திருக்கின்றனர். அப்போது, `நானும் என் ஃபிரண்டும்தான் நைட் அந்த இடத்தைப் பார்த்தோம். ஹோட்டல் மாதிரி இருந்ததால் உள்ளே போய் படுத்து தூங்கிட்டோம். என்னுடன் வந்த என் ஃபிரண்ட் மறுபடியும் சுவர் ஏறி குதித்து வெளியில் போயிட்டான். உண்மையாவே நாங்க தூங்கத்தான் போனோம்’ என்று கூலாக கூறியிருக்கிறார் அந்த போதை நபர்.

`தவெக-வுடன் கூட்டணியா? டீயும் காபியும் எப்போதும் ஒன்று சேராது..!' - அண்ணாமலை பதில்

அதிமுக- பாஜக கூட்டணியில் விஜய்யின் தவெக-வை இணைக்க பேச்சுவார்த்தை நடைபெறுவதாகத் தகவல்கள் வெளியாகி வருகிறது. இந்நிலையில் சென்னையில் செய்தியாளர்களைச் சந்தித்த தமிழக பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலையிடம், இத... மேலும் பார்க்க

`என்.டி.ஏ கூட்டணியில் தவெக-வா?' - செய்தியாளர்களின் கேள்விக்கு சி.டி.ஆர்.நிர்மல் குமார் பதில்!

தமிழ்நாட்டில் விரைவில் சட்டமன்றத் தேர்தல் நடைபெறவிருக்கிறது. அதற்காக அரசியல் கட்சிகள் தீவிரமாகப் பணியாற்றி வருகின்றன. கூட்டணிப் பேச்சுவார்தை தொடங்கி, தொகுதிப் பங்கீடு, வேட்பாளர் அறிவிப்பு என, தீயாக இர... மேலும் பார்க்க

பிரதமரின் தமிழ்நாடு வருகை; ரூ.5,650 மதிப்பிலான திட்டங்களைத் தொடங்கி வைக்கிறார் மோடி!

தமிழ்நாடு மற்றும் கேரளாவில் சட்டமன்றத் தேர்தல்கள் விரைவில் நடைபெற உள்ள நிலையில், பிரதமர் மோடி நாளை (மார்ச் 11, 2026) தமிழ்நாடு மற்றும் கேரள மாநிலங்களுக்குச் சுற்றுப்பயணம் மேற்கொள்கிறார். இப்பயணத்தின் ... மேலும் பார்க்க

கலைஞர் கனவு இல்லம்: ஐந்து ஆண்டுகளில் ரூ.19,694 கோடியில் ஏழை மக்களுக்காக 4,29,394 வீடுகள்!

தென்கடல் வளாகம் பொதுமை இன்றிவெண்குடை நிழற்றிய ஒருமை யோர்க்கும்நடுநாள் யாமத்தும் பகலும் துஞ்சான்கடுமா பார்க்கும் கல்லா ஒருவருக்கும்உண்பது நாழி உடுப்பது இரண்டேபிறவும் எல்லாம் ஓரோக் கும்மே! -என்று புறநான... மேலும் பார்க்க

"சமையல் எரிவாயு தட்டுப்பாட்டை போக்க திமுக அரசின் திட்டம் என்ன?"- அன்புமணி ராமதாஸ் கேள்வி

ஈரான்- இஸ்ரேல் , வளைகுடா நாடுகளுக்கு இடையே நடைபெற்று வரும் போர் காரணமாக பெட்ரோலிய பொருள்களை இந்தியாவுக்கு கொண்டுவருவதில் பல்வேறு சிக்கல்கள் ஏற்பட்டுள்ளன. இதன் காரணமாக வணிக மற்றும் தொழிற்சாலை பயன்பாட்ட... மேலும் பார்க்க

திருச்சி: `கிரிக்கெட்டில் முதல் பந்தில் இருந்தே ரன் அடிப்பது முக்கியம்தான்; ஆனால்..!' - ஸ்டாலின்

திராவிட முன்னேற்றக் கழகத் தலைவரும் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சருமான திரு.மு.க.ஸ்டாலின் அவர்கள் நேற்று (09-03-2026) திருச்சி சிறுகனூரில் நடைபெற்ற ‘ஸ்டாலின் தொடரட்டும் – தமிழ்நாடு வெல்லட்டும்’ கழகத்த... மேலும் பார்க்க