செய்திகள் :

“புற்றுநோய் மீண்டும் பரவலாம்; நான் பிரதமராக இருக்கும் வரை...” - ஈரான் குறித்து நெதன்யாகு பேச்சு

post image

இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு செய்தி நிகழ்ச்சி ஒன்றில் ஈரான் போர் குறித்துப் பேசியுள்ளார்.

ஈரான் போருக்கு அமெரிக்காவை அழைத்ததே இஸ்ரேல்தான் என்று தொடர்ந்து கூறப்பட்டு வருகிறது. இந்த நிலையில், நெதன்யாகு ஈரான் போர் குறித்து...

“நான் கிட்டத்தட்ட 40 ஆண்டுகளாக ஈரானைக் கையாண்டு வருகிறேன்.

ஈரானை நேரடியாக எதிர்கொள்ள நமது பாதுகாப்பு அமைப்பைச் சம்மதிக்க வைக்க எனக்கு நீண்ட காலம் பிடித்தது.

அமெரிக்காவையும் இந்தப் புரிதலுக்குக் கொண்டு வர எனக்குப் பல காலம் தேவைப்பட்டது.

ஈரான்
ஈரான்

அமெரிக்கத் தொலைக்காட்சிகளில் நான் கிட்டத்தட்ட ஆயிரம் மணி நேரத்திற்கும் மேலாகப் பேசியதால்தான் என்னால் அதைச் சாதிக்க முடிந்தது.

ஈரான் இன்னும் அணுசக்தித் திட்டத்தைக் கைவிடவில்லை. அதைச் சற்று பின்னுக்குத் தள்ளியுள்ளோம். அவ்வளவுதான். ஆனால் அணுகுண்டுகளைத் தயாரிப்பதற்காகத் தங்கள் அணுசக்தித் திட்டத்தை மீண்டும் புதுப்பிக்கவே ஈரான் விரும்புகிறது.

எனவே, அச்சுறுத்தல் இன்னும் முற்றிலும் மறைந்துவிடவில்லை. புற்றுநோயை வேரோடு அழிக்காவிட்டால் மரணம் நிச்சயம் என்பது உங்களுக்கே தெரியும். அதைத்தான் செய்தோம்.

ஆனால், புற்றுநோய் உடலின் பிற பகுதிகளுக்கும் பரவக்கூடும். அப்படிப் பரவினால், அது மீண்டும் ஒரு மிகப்பெரிய அச்சுறுத்தலாக உருவெடுக்கலாம்.

ஈரான் தனது அணுசக்தித் திட்டத்தை மீண்டும் தொடங்க விரும்புகிறது. நான் பிரதமராக இருக்கும் வரை அவர்கள் அதைச் செய்யாமல் மீண்டும் தடுத்துக்கொண்டேதான் இருப்பேன்” என்று பேசியுள்ளார்.

'ஹார்முஸில் கண்ணிவெடிகள்' - ஈரானை அமெரிக்கா தாக்கியது ஏன்? ஈரானின் பதிலடி என்ன?

கடந்த திங்கட்கிழமை (ஆகஸ்ட் 24) தான், அமெரிக்கா, ஈரான் மீது ‘ஆபரேஷன் எக்கனாமிக் அவுட்காஸ்ட்’-ஐ அறிவித்தது. இது ஈரான் மீதான பொருளாதாரத் தடை ஆகும்.ஈரான் போர் அப்போதிலிருந்து ராணுவ நடவடிக்கைகளில் இருந்து ... மேலும் பார்க்க

"அது தவெக-வின் விருப்பம்; ஆனால் மக்களுக்கான ஆட்சியை ராகுல் காந்திதான் தர முடியும்" - விஜய் வசந்த் MP

தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டி அருகேயுள்ள ஈராச்சி கிராமத்திலுள்ள பரிமேழலகர் இந்து நடுநிலைப்பள்ளியின் நூற்றாண்டு விழா நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் கன்னியாகுமரி மக்களவைத் தொகுதி உறுப்பினர் விஜய் வ... மேலும் பார்க்க

"ஜன நாயகன் படம் ரிலீஸ் ஆன தியேட்டர்கள் காத்து வாங்கியது" - எடப்பாடி பழனிசாமி பேச்சு

"சட்டமன்றத்தில் ஆளும்கட்சியினரும், எதிர்க்கட்சியினரும் தங்கள் சொந்தப் பிரச்னைகளைத்தான் பேசி வருகிறார்கள். மக்கள் பிரச்னைகளைப் பற்றி அதிமுக மட்டும்தான் பேசுகிறது" என்று அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி ... மேலும் பார்க்க

"ராகுல்தான் பிரதமர்; தவெக உடன்படாவிட்டால் ராஜினாமா செய்வோம்"- காங்கிரஸ் அமைச்சர் ராஜேஷ்குமார் சபதம்!

தமிழக காங்கிரஸ் தலைவராக மாணிக்கம் தாகூர் பொறுப்பேற்ற நிலையில் புதிதாக பல நிர்வாகிகளை நியமித்து வருகிறார். அதன் ஒரு பகுதியாக கன்னியாகுமரி மாவட்ட காங்கிரஸ் கட்சியின் புதிய தலைவர்களை அவர் நியமித்தார். அத... மேலும் பார்க்க

திமுக: தமிழகத்தைப் போல புதுச்சேரியிலும் புதிய மாவட்டங்கள்! - கருத்து கேட்க ஸ்டாலின் முடிவு

தமிழ்நாடு 2026 சட்டமன்றத் தேர்தலில் தி.மு.க ஆட்சியைப் பறிகொடுத்த நிலையில், கட்சியை வலுப்படுத்தும் வகையில் தி.மு.க-வில் பல்வேறு மாற்றங்களைக் கொண்டு வந்தார் அக்கட்சியின் தலைவர் ஸ்டாலின். அதன் ஒரு பகுதிய... மேலும் பார்க்க