செய்திகள் :

'புல்வாமா, தொடர்பான பணம் உங்க வங்கி கணக்கிற்கு வந்துள்ளது' - ஓய்வு நீதிபதியிடமே ரூ.2.50 கோடி பறிப்பு

post image

ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூர் தெற்கு ஜோதி நகர் சத்யவிஹார் காலனியைச் சேர்ந்தவர் கணபத் சிங் பண்டாரி (90). ஓய்வுபெற்ற நீதிபதியான இவரைத் தொடர்புகொண்ட மர்ம நபர் ஒருவர், தான் சி.பி.ஐ அதிகாரி என அறிமுகப்படுத்திக் கொண்டு வாட்ஸ்அப் வீடியோ அழைப்பு மூலம் பேசினார். அப்போது, புல்வாமா பயங்கரவாத தாக்குதலுடன் தொடர்புடைய ரூ.50 கோடி ஹவாலா பணப்பரிவர்த்தனையில், கணபத் சிங்கின் வங்கிக் கணக்கிற்கு ரூ.40 லட்சம் வந்துள்ளதாகவும், இதனால் அவரை கைது செய்ய நேரிடும் எனக்கூறி, டிஜிட்டல் அரஸ்ட் செய்து மிரட்டினார். அடுத்த நாளே, ரிசர்வ் வங்கி மேலாளர் என்ற போர்வையில் மற்றொரு நபர் பேசி, வழக்கிலிருந்து தப்பிக்க வங்கிக் கணக்கு விவரங்களைத் தருமாறு கேட்டுள்ளார். அதிகாரிகள் என்ற போர்வையில் வந்த தொடர் மிரட்டல்களால் அச்சமடைந்த முன்னாள் நீதிபதி, தனது வங்கிக் கணக்கு விவரங்களை அவர்களிடம் அளித்ததுடன், அவர்கள் கூறியபடி ஆகஸ்ட் 6 முதல் 10 வரையிலான ஐந்து நாட்களில் 9 தவணைகளாக மொத்தம் ரூ.2.50 கோடியை பல்வேறு வங்கிக் கணக்குகளுக்கு அனுப்பி வைத்தார்.

டிஜிட்டல் கைது (சித்தரிப்புப் படம்)
டிஜிட்டல் கைது (சித்தரிப்புப் படம்)

இறுதியாக, தனது பி.பி.எஃப் கணக்கில் இருந்த பணத்தையும் எடுப்பதற்காக அவர் வங்கிக்குச் சென்றார் ஓய்வுபெற்ற நீதிபதி. அங்கு அவரது பதற்றமான நிலையைக் கண்டு சந்தேகமடைந்த வங்கி மேலாளர், காரணத்தைக் கேட்டறிந்தார். அவர் கூறிய காரணங்களை வைத்து சைபர் மோசடி வலையில் ஓய்வுபெற்ற நீதிபதி சிக்கியது தெரியவந்தது. வங்கி மேலாளரின் வழிகாட்டுதல்படி ஜோதி நகர் காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டு வழக்குப் பதிவு செய்யப்பட்டது. வழக்கை விசாரித்த ராஜஸ்தான் காவல்துறையினர், பறிக்கப்பட்ட பணத்தின் பரிவர்த்தனைகளைக் கண்காணித்தபோது, ரூ.2.50 கோடியில் ரூ.5 லட்சம் கேரளாவைச் சேர்ந்த ஒருவரது வங்கிக் கணக்கிற்குச் சென்றது தெரியவந்தது. உடனடியாக களமிறங்கிய ராஜஸ்தான் போலீஸ் குழு, எர்ணாகுளம் மத்திய காவல் உதவி ஆணையர் சிபி டாம் தலைமையிலான தனிப்படையின் உதவியை நாடியது.

கைதுசெய்யப்பட்ட ஆனந்த்பாபு

இரு மாநில காவல்துறையினரும் இணைந்து நடத்திய தீவிரத் தேடுதலில், கொச்சி பினானிபுரத்தில் உள்ள வாடகை வீட்டில் பதுங்கியிருந்த எர்ணாகுளம் வரப்புழா மண்ணந்துருத்தைச் சேர்ந்த ஆனந்தபாபுவை நேற்று மதியம் அதிரடியாகக் கைது செய்தனர். தனது கணக்கிற்கு வந்த ரூ.5 லட்சத்தைக் காசோலை மூலம் எடுத்து மோசடிக் கும்பலிடம் வழங்கி கமிஷன் பெற்ற இவர், நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு மேல் விசாரணைக்காக ட்ரான்சிட் வாரண்ட் மூலம் ராஜஸ்தானுக்கு அழைத்துச் செல்லப்பட்டார்.

மெத் கடத்தல்: ”செய்தியில CM விஜய் போட்டோ போட்ட, காலி பண்ணிடுவேன்”- நிருபர்களை மிரட்டும் தவெக-வினர்

நாகப்பட்டினம் மாவட்டம் சிந்தாமணியைச் சேர்ந்தவர் பூபாலன். வழக்கறிஞரான இவர் தவெக-வில் செயற்குழு உறுப்பினராக இருந்தார். இவரது மனைவி பிரேமியா இலங்கைத் தமிழர். வேளாங்கண்ணி அருகே உள்ள பிரதாபராமபுரத்தைச் சேர... மேலும் பார்க்க

மும்பையில் மீண்டும் துப்பாக்கி சத்தம் : நிழல் உலக காலியிடத்தைநிரப்பும் வட இந்திய கேங்ஸ்?

மும்பையில் 2000ம் ஆண்டு வரை இருந்த ரவுடிசம் மற்றும் மாபியா போன்ற நிழலுக தாதாக்கள் தொடர் என்கவுண்டர் மூலம் பெரும் முயற்சிகளுக்கு பின் ஒழிக்கப்பட்டனர். இதனால் கடந்த 20 ஆண்டுகளாக புதிதாக எந்த ஒரு ரவுடியோ... மேலும் பார்க்க

பெருந்துறை:தாலிக்கொடிக்காக இளம்பெண் துடிதுடிக்க கொலை - செவிலியர் கொலை வழக்கில் அதிர்ச்சி திருப்பம்

திருப்பூர் மாவட்டம் பல்லக்கவுண்டன் பாளையத்தில் வசித்து வந்த செவிலியர் உத்ரா பெருந்துறையில் உள்ள தனியார் மருத்துவமனை ஒன்றில் பணியாற்றி வந்த நிலையில், கடந்த 14- ம்‌ தேதி மாலை திடீரென காணாமல் போனார். பணி... மேலும் பார்க்க

பயணிகளை அரிவாளால் வெட்டிய போதை ஆசாமிகள்; திருச்சி ரயில் நிலையத்தில் அதிர்ச்சி... கைது செய்த போலீஸ்!

புதுக்கோட்டை மாவட்டத்தைச் சேர்ந்த பெரிய தம்பி என்பவரின் மகன் கோவிந்தராசு (வயது: 46). இவர், தனது நண்பர் மகாதேவனோடு திருப்பூரில் இருந்து மங்களூர் விரைவு வண்டியில் பொதுப்பெட்டியில் பயணம் செய்து திருச்சி ... மேலும் பார்க்க

``நூதன முறையில் இந்திய ரகசியங்களை பெற்ற சீனா?'' - ராணுவ அதிகாரி மனைவி கைதின் அதிர்ச்சி பின்னணி!

ஜம்மு - காஷ்மீரில் பணியாற்றி வரும் மூத்த இந்திய ராணுவ அதிகாரி ஒருவரின் மனைவி சீனா உள்ளிட்ட வெளிநாட்டு உளவு அமைப்புகளின் முகவர்களிடம் நாட்டின் பாதுகாப்பு தொடர்பான முக்கியமான தகவல்களைப் பகிர்ந்ததாக ஜம்ம... மேலும் பார்க்க

ஆந்திர சிறுமிக்கு கேரள ஸ்பாக்களில் நடந்த கொடூரம்; பாலியல் தொழில் கும்பலிடம் விற்ற சித்தி கைது!

ஆந்திர மாநிலத்தைச் சேர்ந்த 16 வயது சிறுமி, தாய்-தந்தை இருவரும் உயிரிழந்ததைத் தொடர்ந்து தனது சித்தியின் பாதுகாப்பில் இருந்து வந்துள்ளார். ஆனால், பணத்திற்கு ஆசைப்பட்டு ஆதரவற்ற அச்சிறுமியை பாலியல் நெட்வொ... மேலும் பார்க்க