`ஒரு நம்பர் பிளேட் விலை ரூ.1.17 கோடியா?' - ஹரியானாவில் நடந்த ஏலமும் வைரல் வாகன ந...
பெண்களே உங்கள் உணவில் வைட்டமின் `கே' இருக்கிறதா?
''கொழுப்பில் கரையக்கூடிய வைட்டமின்களில் வைட்டமின் கே-வும் ஒன்று. ரத்த உறைதலுக்கு மிகவும் தேவையான ஊட்டச்சத்து இது. வெளிநாடுகளில், வைட்டமின் கே குறைபாட்டால் பலர் பாதிக்கப்படுகின்றனர்.
இந்தியாவில், நம் உணவுப்பழக்கம் காரணமாக வைட்டமின் கே தேவையான அளவு கிடைத்துவிடுகிறது. தற்போது, வெளிநாட்டு நுகர்வுக் கலாசாரம் காரணமாக உணவுப் பழக்கத்தில் ஏற்பட்டுள்ள மாற்றம், இந்தியர்களுக்கும் வைட்டமின் கே பற்றாக்குறையை அதிக அளவில் ஏற்படுத்திவருகிறது'' என்கிறார் சென்னையைச் சேர்ந்த ஸ்போர்ட்ஸ் நியூட்ரிஷியன் மற்றும் டயட்டீஷியன் ஷைனி சுரேந்திரன்.

''வைட்டமின் 'கே' இயற்கையாகவே தாவரங்கள் மற்றும் பாக்டீரியாக்களில் இருந்து கிடைக்கிறது. இதை, வைட்டமின் கே 1, வைட்டமின் கே 2 என இரு வகைப்படுத்தலாம்.
தாவரங்களில் இருந்து கிடைக்கும் பைலோகுயினோன் (Phylloquinone) ‘வைட்டமின் கே 1’ என்றும், விலங்கினங்களில் பாக்டீரியாக்களில் இருந்து கிடைக்கும் மெனாகுயினோன் (Menaquinone) ‘வைட்டமின் கே 2’ என்றும் வகைப்படுத்தப்படுகின்றன.
நமது வயிற்றில் நன்மை செய்யக்கூடிய பாக்டீரியாக்கள் உள்ளன. இவை, மெனாகுயினோன் எனும் வைட்டமின் கே 2-வை உற்பத்தி செய்கின்றன. வைட்டமின் கே 1, வைட்டமின் கே 2 இரண்டுமே மனிதர்களுக்கு அவசியம் தேவையான வைட்டமின்களே.
உடலில் உள்ள கால்சியம் மற்றும் புரதம் ஆகியவற்றை எலும்புகள் தேவைக்கு ஏற்ப பயன்படுத்திக்கொள்ள உதவுகிறது.
பெண்களுக்கு மெனோபாஸ் நிலையில் எலும்பு அடர்த்தி குறைந்து, எலும்பு பலவீனமடையத் தொடங்கும். வைட்டமின் கே ஆஸ்டியோபொரோசிஸ் வருவதைத் தடுக்கிறது.

வைட்டமின் கே குறைபாடு ஏற்பட்டால், ஏதாவது சிறிய காயம் ஏற்பட்டாலும் ரத்தம் வெளியேறிக்கொண்டே இருக்கும். தேவையான நேரத்தில் ரத்தத்தை உறைய வைப்பதற்கும் வைட்டமின் கே-தான் உதவுகிறது. ரத்தம், உடலின் தேவைக்கு ஏற்ப பாய்வதற்கு உதவுகிறது.
பால், உருளைக்கிழங்கு, கேரட், தக்காளி, ஆரஞ்சு, முட்டை, வெண்ணெய், சீஸ், சூரியகாந்தி எண்ணெய், ஓட்ஸ், பட்டாணி, காலிஃபிளவர், புரொக்கோலி, முட்டைகோஸ், கீரைகள்...
தாவரத்தில் இருந்து கிடைக்கும் வைட்டமின் கே 1 அதிகமானால், நஞ்சாகிவிடும். இதனால், ஹைப்பர்பிலிரூபினிமியா (Hyperbilirubinemia) எனும் பிரச்னை ஏற்பட்டு தீவிர மஞ்சள் காமாலை நோய் வரலாம்'' என்கிறார் ஷைனி சுரேந்திரன்.














