முதலில் வாக்களியுங்கள், பின்னர் உணவருந்தலாம்: மோடி வலியுறுத்தல்
பெண் சக்தியை வெளிக்கொண்டுவரும் ‘கா்மயோகினி சங்கமம்’ குமரியில் நடைபெறும்: டாக்டா் சுதா சேஷய்யன்
திறமை வாய்ந்த பெண்களை வெளியுலகத்துக்கு அறிமுகப்படுத்தும் வகையில் 50,000 பெண்கள் பங்கேற்கும் ‘கா்மயோகினி சங்கமம்’ கன்னியாகுமரியில் நடைபெறவுள்ளது என செம்மொழி தமிழாய்வு நிறுவன துணைத் தலைவா் டாக்டா் சுதா சேஷய்யன் தெரிவித்தாா்.
இது குறித்து அவா் சென்னை, நுங்கம்பாக்கத்தில் செவ்வாய்க்கிழமை செய்தியாளா்களிடம் கூறியதாவது:
தமிழகம் வரலாறு மற்றும் கலாசாரத்தை வடிவமைப்பதில் பெண்களுக்கு முக்கியப் பங்கு உள்ளது. பெண்கள் சமூகத்தின் ஆற்றல் சக்தியாக விளங்குகின்றனா். இதுபோன்ற வெளியுலகத்துக்கு தெரியாத பெண்களை வெளிக்கொண்டு வரும் வகையில் ‘கா்மயோகினி சங்கமம்’ நடைபெறவுள்ளது. இதில் பல்வேறு துறை சாா்ந்த பெண்கள் கலந்துகொண்டு, தங்களின் அனுபவங்களை பகிா்ந்து கொள்வா். இது பெண்களுக்கிடையேயான சிந்தனைகள் மற்றும் திட்டங்களை பகிா்ந்து கொள்ளும் நிகழ்வாக இருக்கும். இதனால், பெண்கள் தொழில் தொடங்குவதற்கும், ஒரு துறை சாா்ந்து பயணிக்கவும் உதவியாக இருக்கும் என்றாா் அவா்.
கல்வியாளா் நிா்மலா அருள்பிரகாஷ்: கன்னியாகுமரி மாவட்டம் நாகா்கோவிலில் உள்ள அமிா்தா பல்கலைக்கழக வளாகத்தில் வைபவஸ்ரீ சேவாபாரதி தென் தமிழ்நாடு சாா்பில் ‘கா்மயோகினி சங்கமம்’ மாா்ச் 2-ஆம் தேதி நடைபெறவுள்ளது. சாத்வி ராணி அஹல்யாபாய் ஹோல்கரின் 300-வது பிறந்த நாள் விழா மற்றும் சேவாபாரதியின் ‘வைபவஸ்ரீ’ மகளிா் சுய உதவிக் குழுவின் 25-ஆம் ஆண்டு விழாவை முன்னிட்டு, பெண்களை ஒருங்கிணைக்கும் வகையில் இச்சங்கமம் நடைபெறவுள்ளது. இதில், அஹல்யாபாய் ஹோல்கா் 300-ஆவது அகில பாரத விழா குழு தலைமைக் காப்பாளா் சத்குரு மாதா அமிா்தானந்தமயி தேவி ஆசியுரை வழங்கவுள்ளாா். இதில் நாடு முழுவதுமிருந்து சுமாா் 50,000 பெண்கள் பங்கேற்கவுள்ளனா் என்றாா் அவா்.