Mammootty: "சினிமாவில் 10 ஆண்டுகால இடைவெளி ஏன்?" - அடூர் கோபாலகிருஷ்ணன் பதில்
`பெண் பிள்ளையை ஏன் கிரிக்கெட்டுக்கு அனுப்புறீங்க?'- உலக சாதனை படைத்த தீப்தி சர்மாவின் நெகிழ்ச்சி கதை
2026 மகளிர் ஆசிய கோப்பை போட்டியில் தாய்லாந்து அணிக்கு எதிராக 0 ரன்னுக்கு 3 விக்கெட்டுகளை வீழ்த்தி உலக சாதனை படைத்துள்ளார் தீப்தி சர்மா. இதன்மூலம் சர்வதேச மகளிர் டி20 கிரிக்கெட்டில் அதிக விக்கெட்டுகள் (171*) வீழ்த்திய வீராங்கனை என்ற உலக சாதனைப் படைத்திருக்கிறார்.
தீப்தி சர்மாவிற்கு பலரும் வாழ்த்துகளைத் தெரிவித்து வரும் நிலையில் அவரது கிரிக்கெட் பயணம் எப்படி தொடங்கியது என்பது குறித்து பார்ப்போம்.
தீப்தி சர்மா தலைநகர் டெல்லியின் ஆக்ராவின் அவத்பூரி பகுதியை சேர்ந்தவர். 8 வயதில் தன் அண்ணன் சுமித் சர்மா கிரிக்கெட் பயிற்சிக்கு சென்றபோது அவருடன் சென்றிருக்கிறார்.

அப்போது ஒரு நாள் பந்து ஒன்று அவர் பக்கம் உருண்டு வந்திருக்கிறது. அப்பந்தை மிக துல்லியமாக திருப்பி வீசியிருக்கிறார். அந்த ஒரு பந்துவீச்சு தான் அவரது வாழ்க்கைப் போக்கையே மாற்றியிருக்கிறது.
"பெண் பிள்ளையை ஏன் கிரிக்கெட் அனுப்புறீங்க, படிக்க வச்சு டாக்டர் , இன்ஜினியர் ஆக்கலாமே" என்று அக்கம்பக்கத்தினர் அவர் அப்பாவிடம் கூறியிருக்கின்றனர். ஆனால், அப்பா பகவான் சர்மா யாரையும் பொருட்படுத்தாமல் மகளுக்கு ஆதரவாக நின்றிருக்கிறார்.
அப்பாவோடு சகோதரர் சுமித் சர்மாவும் தங்கைக்கு ஆதரவாக நின்றிருக்கிறார். சுமித் ஒரு வேக பந்துவீச்சாளராக UP- அணிக்கு விளையாடியவர். 2012-ல் தீப்தியின் தொடர் பயிற்சி குறைவதைப் பார்த்து, தன் வேலையை விட்டுவிட்டு முழுநேரமாக தங்கைக்கு பயிற்சி கொடுக்க முடிவு செய்திருக்கிறார்.
உறவினர்கள் 'படித்த பையன் ஏன் ஒரு பொண்ணு கிரிக்கெட்டுக்காக வேலையை விடணும்' என்று விமர்சித்திருக்கின்றனர். அந்த 2 வருடங்கள் தான் தீப்தியின் முக்கியமான காலகட்டமாக இருந்திருக்கிறது.
ஆரம்பத்தில் மிதவேக பந்து வீச்சாளராக இருந்த தீப்தி சுமித் அறிவுரையை கேட்டு ஆஃப் ஸ்பின்னுக்கு மாறியிருக்கிறார். இதுவே அவருக்கு கேம் சேஞ்சார் ஆனது. 2014, சர்வதேச ஒரு நாள் போட்டியில் இந்தியாவில் இரண்டாவது சிறந்த பெண் பந்துவீச்சாளராக தீப்தி சர்மா தனது வெற்றிப் பயணத்தை தொடங்குகிறார்.

2016-ல் இலங்கைக்கு எதிராக 6/20 எடுத்து, ஒருநாள் சர்வதேசப் போட்டியில் இந்திய வரலாற்றிலேயே ஐந்து விக்கெட்டுகளை வீழ்த்திய மிக இளம் வயது வீராங்கனை என்ற சாதனையையும் படைத்தார்.
அதன்பிறகு, 2025 ODI உலக கோப்பை இறுதி போட்டியில் தென் ஆப்பிரிக்காக்கு எதிராக 58 + 5/39 எடுத்து இந்தியாவின் முதல் மகளிர் உலக கோப்பை வெற்றிக்கு காரணமானார்.
தவிர அவர் தனது கல்வியையும் கைவிடவில்லை, ஆக்ரா கல்லூரியில் தனது பட்டபடிப்பை முடித்தார். அதைதொடர்ந்து, காவல்துறையில் துணைக் காவல் கண்காணிப்பாளராக பணியாற்ற தொடங்கினார். இன்று சர்வதேச மகளிர் டி20 கிரிக்கெட்டில் அதிக விக்கெட்டுகள் (171*) வீழ்த்திய வீராங்கனை என்ற உலக சாதனைப் படைத்து, இளம் வீராங்கனைகளுக்கு இன்ஸ்பிரேஷனாக இருக்கிறார்.
வாழ்த்துகள் தீப்தி.!




















