செய்திகள் :

பெத்லகேம் குடும்ப யூனிட்: "புதுமையானக் கதையை ரசிகர்கள் எப்போதும் கொண்டாடுவார்கள்.!"- பகத் பாசில்

post image

'பிரேமலு' பட இயக்குநர் கிரிஷ் ஏ.டி இயக்கத்தில் வெளியானப் படம் 'பெத்லகேம் குடும்ப யூனிட்'.

நிவின் பாலி, மமிதா பைஜூ நடித்த இந்தப் படம் நல்ல வரவேற்பைப் பெற்றதைத் தொடர்ந்து தமிழிலும் டப் செய்யப்பட்டு வெளியிடப்பட்டது.

'பெத்லகேம் குடும்ப யூனிட்'
'பெத்லகேம் குடும்ப யூனிட்'

பெத்லகேம் குடும்ப யூனிட் படத்தை பகத் பாசில் தனது பாவனா ஸ்டூடியோஸ் நிறுவனம் மூலம் தயாரித்திருந்தார்.

நகைச்சுவை, காதல், குடும்ப உணர்வுகள் மற்றும் நிவின் பாலி, மமிதா பைஜு கூட்டணி ரசிகர்களை கவர்ந்திருந்த நிலையில் இப்படம் நல்ல வசூல் சாதனையையும் படைத்திருக்கிறது.

இந்நிலையில் இப்படத்தின் வெற்றி குறித்து நடிகரும், தயாரிப்பாளருமான பகத் பாசில் பேசியிருக்கிறார். " புதுமையானக் கதையை ரசிகர்கள் எப்போதும் கொண்டாடுவார்கள் என்பதற்கு 'பெத்லகேம் குடும்ப யூனிட்' வெற்றியே மிகப்பெரிய சான்று.

பகத் பாசில்
பகத் பாசில்

நேர்மையான திரைக்கதை, வயது வித்தியாசக் காதல், நகைச்சுவை, படமாக்கப்பட்ட விதம் என எல்லாமே நன்றாக அமைந்திருக்கின்றன. அதோடு, ஓணம் விடுமுறைக்காலத்தில் எங்களுக்கு ஒரு சரியான வெளியீட்டுத் தேதியும் அமைந்தது. இயக்குநர் கிரிஷ், நடிகர் நிவின்பாலி உள்ளிட்ட படக்குழுவினரையே இந்த வெற்றி சேரும்" என்று தெரிவித்திருக்கிறார்.

உண்ணாவிரதம் இருந்து தொல்லை கொடுத்த சினிமா இயக்குநர்; வழக்கு தொடர்ந்த நடிகை மஞ்சு வாரியர்!

திரைப்பட இயக்குநர் சனல்குமார் சசிதரன் இயக்கிய 'கயற்றம்' சினிமாவில் நடிகை மஞ்சு வாரியர் கதாநாயகியாக நடித்திருந்தார். அப்படத்தின் படப்பிடிப்பிற்குப் பிறகு, தன்னை சனல்குமார் பின்தொடர்ந்து தொல்லை செய்வதாக... மேலும் பார்க்க

"அங்கு எல்லாமே கார்ப்பரேட் பாணியில் நடக்கிறது, ஆனால் மலையாள..!"- பாலிவுட் குறித்து பிரித்விராஜ்

சமீபத்தில் மும்பையில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் நடிகர் பிரித்விராஜ் கலந்துகொண்டிருக்கிறார். அப்போது அவரிடம் பாலிவுட் திரையுலகம் மலையாள திரையுலகத்திலிருந்து கற்றுக்கொள்ள வேண்டிய விஷயங்கள் என்னென்ன? என... மேலும் பார்க்க

Sreenath Bhasi: "மனைவியிடம் இருந்து பிரிந்து பெற்றோருடன் வசித்து வருகிறேன்!" - நடிகர் ஶ்ரீநாத் பாஸி

'கும்பளங்கி நைட்ஸ்', 'பீஷ்ம பர்வம்', 'மஞ்சும்மல் பாய்ஸ்' உள்ளிட்ட படங்களில் நடித்த மலையாள நடிகர் ஸ்ரீநாத் பாசி, தனது மனைவி ரீது ஜக்காரியாவுடனான திருமண வாழ்க்கை முடிவுக்கு வந்திருப்பதை பற்றித் தெரிவித்... மேலும் பார்க்க

"அந்த அனுபவத்திற்குப் பிறகு, துல்கர் சல்மானுடன் மீண்டும் பணியாற்ற முடியாது.!" - ஐஸ்வர்யா லட்சுமி

நடிகை ஐஸ்வர்யா லட்சுமி துல்கர் சல்மானுடன் இணைந்து நடித்த 'King of Kotha' படத்தின் அனுபவம் மற்றும் ட்ரோலிங் குறித்து சமீபத்திய பேட்டி ஒன்றில் பேசியிருக்கிறார். ‘King of Kotha’ படம் வெளியாகுவதற்கு முன்ப... மேலும் பார்க்க

Mammootty 75: "எங்களுக்குள் போட்டி மனப்பான்மை இருந்தது இல்லை!" - மம்மூட்டியை வாழ்த்தும் மோகன்லால்

நடிகர் மம்மூட்டிக்கு இன்று 75-வது பிறந்தநாள். அதையொட்டி நடிகர் மோகன்லால், மம்மூட்டியை வாழ்த்தித் தனது சமூக வலைத்தளப் பக்கத்தில் பதிவிட்டிருக்கிறார். அத்தோடு, மலையாள ஊடகத்தின் வாயிலாக மம்மூட்டிக்கு பிற... மேலும் பார்க்க

Mammootty: "சினிமாவில் 10 ஆண்டுகால இடைவெளி ஏன்?" - அடூர் கோபாலகிருஷ்ணன் பதில்

மலையாள சினிமாவின் மூத்த இயக்குநரான அடூர் கோபாலகிருஷ்ணன், 10 ஆண்டு இடைவெளிக்குப் பிறகு மம்மூட்டியை வைத்து ‘பாதயாத்ரா’ படத்தை இயக்கியிருக்கிறார். 2016-இல் வெளியான ‘பின்னையும்’ திரைப்படத்திற்குப் பிறகு இ... மேலும் பார்க்க