செய்திகள் :

`பென்ஸ், எட்டியோஸ், டிகார்... சொந்தமாக கார் இருந்தும்!' - எம்எல்ஏ-க்கள் குறித்து வெளியான தகவல்!

post image

தமிழ்நாடு சட்டப்பேரவைக் கூட்டத்தொடர் நடைபெற்று வருகிறது. சில தினங்களுக்கு முன்பு விசிக சட்டமன்ற உறுப்பினர் ஜோதிமணி, ``நான் 250 கி.மீ தூரத்திலிருந்து வருகிறேன். கார் வசதி இல்லை. வாடகை வாகனத்தையே நம்பவேண்டிய சூழல் இருக்கிறது. எனவே, சட்டமன்ற உறுப்பினர்களுக்கு காரும், ஒரு உதவியாளரும் வழங்க வேண்டும்." எனக் கோரியிருந்தார்.

இந்தக் கோரிக்கையை ஏற்ற முதல்வர் விஜய், `` அனைத்துச் சட்டமன்ற உறுப்பினர்களுக்கும் கார் வசதி செய்து கொடுக்கப்படும். காரைப் பராமரிக்க மாதம் ரூ.75,000 மற்றும் அலுவலகப் பணிகளுக்கு உதவியாளரை நியமிக்க ரூ.25,000 வழங்கப்படும்" என்றும் அறிவித்தார்.

முதல்வர் விஜய்
முதல்வர் விஜய்

முதல்வரின் இந்த அறிவிப்பைத் தொடர்ந்து, த.வெ.க எம்.எல்.ஏ-க்கள் சபரி ஐங்கரன், `` என்னிடம் கார் இல்லாததால் ஆட்டோவில் வருகிறேன். முதல்வரின் இந்த உத்தரவு மகிழ்ச்சியளிக்கிறது. முதல்வருக்கு நன்றி." எனத் தெரிவித்திருந்தார்.

எம்.எல்.ஏ சண்முகன், ``இன்னோவா காராகக் கொடுத்தால் நன்றாக இருக்கும் எனக்கு பின்னால் இருக்கும் சில பேசுகிறார்கள்" என தெரிவித்திருந்தார்.

இந்த நிலையில், கார் வசதிகேட்ட எம்.எல்.ஏ-க்களின் தேர்தல் பிரமாணப் பத்திரங்கள் தற்போது வைரலாகி வருகிறது.

சட்டப்பேரவையில் கார் இல்லை என்று கூறிய சபரி ஐங்கரன், தனது தேர்தல் பிரமாணப் பத்திரத்தில் தன்னிடம் 'டாடா டிகார்' கார் மற்றும் இரண்டு இருசக்கர வாகனங்கள் இருப்பதாகக் குறிப்பிட்டுள்ளார்.

மேலும், அவரிடம் ரூ.30 லட்சம் வங்கி இருப்பு உள்ளதும் தெரியவந்துள்ளது. இதேபோல், கார் வசதி கோரிய விசிக எம்.எல்.ஏ ஜோதிமணி, தன்னிடம் 'டொயோட்டா எட்டியோஸ்' கார் இருப்பதாகத் தேர்தல் ஆணையத்திடம் தெரிவித்துள்ளார். இதுதவிர, தனது மனைவியிடம் ரூ.25 லட்சம் மதிப்புள்ள நகைகளும், தன்னிடம் ரூ.50 லட்சம் மதிப்புள்ள அசையா சொத்துகளும் இருப்பதாகக் குறிப்பிட்டுள்ளார்.

இன்னோவா கார் குறித்து பேசிய ய்தவெக எம்.எல்.ஏ சண்முகனோ, ஏற்கெனவே இரண்டு பென்ஸ் கார்கள் உள்ளிட்ட மொத்தம் நான்கு கார்களை வைத்துள்ளார் என்பது தெரிய வந்துள்ளது.

எம்.எல்.ஏ ஜோதிமணி
எம்.எல்.ஏ ஜோதிமணி

ஏற்கெனவே கார் உள்ளிட்ட சொகுசு வசதிகளைக் கொண்ட எம்.எல்.ஏ-க்கள், சட்டப்பேரவையில் தங்களுக்கு கார் வேண்டும் என்று கூறியது பொதுமக்கள் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. மக்கள் பிரதிநிதிகள் உண்மையை மறைத்துப் பொதுச் சொத்தை தங்களுக்குச் சாதகமாகப் பயன்படுத்திக் கொள்ள முயற்சிப்பதாகப் பலரும் சமூக வலைதளங்களில் தங்களது கண்டனங்களைப் பதிவு செய்து வருகின்றனர்.

ஏற்கனவே சொத்துக்கள் இருந்தும், கார் இல்லை என்று கூறி, அரசு சலுகைகளைப் பெறுவது தார்மீக அடிப்படையில் சரியா என்ற விவாதமும் தற்போது மக்களிடையே எழுந்துள்ளது.

அதிரடிக்கு தயாராகும் ஸ்டாலின் - தனிக்கவனம் பெற்ற வன்னிஅரசு - நெருக்கடியில் நயினார்! | கழுகார்

அட்டூழியம் செய்யும் காவல் அதிகாரி!"வி.ஐ.பி-க்குத்தான் வேலை செய்வேன்..."தாம்பரம் கமிஷனர் அலுவலகத்தில் பணிபுரியும் 'முருகக் கடவுள்' அதிகாரி, பொதுமக்களை சந்தித்து புகார்களை வாங்குவதில்லையாம். அதோடு, தனக்... மேலும் பார்க்க

எம்.ஜி.ஆருக்கு ’புரட்சித் தலைவர்’ பட்டம் சூட்டிய கே.ஏ கிருஷ்ணசாமி மகன் அதிமுக-வில் இருந்து விலகல்!

தவெக ஆட்சி அமைந்ததைத் தொடர்ந்து அதிமுக-வில் முக்கியப் பதவிகளில் இருந்த சிலர் அங்கிருந்து விலகி தவெகவில் சேர்ந்து வருவது தொடர்ந்து நடந்து வருகிறது.எம்.எல்.ஏ க்களாக இருந்த விஜயபாஸ்கர்கள் தொடங்கி கட்சியி... மேலும் பார்க்க

`அடுத்த பிரதமர் விஜய்?' - திமுக எம்பி கனிமொழி சொன்ன பதில் என்ன?

இந்தியாவின் அடுத்த பிரதமர் விஜய் தான் என்று தவெகவினர் கூறிவரும் நிலையில், 'இதற்கு காங்கிரஸ் கட்சியினர் தான் பதில் சொல்ல வேண்டும்' என்று திமுக துணைப் பொதுச்செயலாளரும், எம்பியுமான கனிமொழி கூறியிருக்கிறா... மேலும் பார்க்க

``முதல்வர் விஜய் கர்நாடக முதல்வரைச் சந்திக்கும் வாய்ப்பு ஏற்பட்டால்.!" - வைகோ நம்பிக்கை!

மத்திய உள்துறை அமைச்சகம் சார்பில் ஒவ்வொரு ஆண்டும் தென்மாநில முதலமைச்சர்கள் மாநாடு நடத்தப்பட்டு வருகிறது. கடந்த 2022-ம் ஆண்டுக்கு பிறகு இந்த மாநாடு நடைபெறாமல் இருந்தது. இந்த நிலையில், மத்திய உள்துறை அம... மேலும் பார்க்க

கல்லூரி மாணவிகளின் செலவுக்கு மாதம் ரூ.2000; மேற்படிப்பை ஊக்கப்படுத்த மகாராஷ்டிரா அரசு புது திட்டம்

மகாராஷ்டிரா அரசு கல்லூரிகளில் படிக்கும் மாணவிகளின் படிப்பை ஊக்கப்படுத்தும் விதமாக அவர்களுக்கு நிதியுதவி செய்ய முடிவு செய்துள்ளது. மாணவிகள் படித்துக்கொண்டே சம்பாதிக்கும் திட்டத்தில் இத்திட்டம் அறிமுகம்... மேலும் பார்க்க

4 மாதத்தில் 22 பேருக்கு மரண தண்டனை தீர்ப்பு; நீதிபதி திவாகரிடமிருந்து திரும்ப பெறப்பட்ட 97 வழக்குகள்

உத்தரப்பிரதேச மாநிலம் முஜாபர்நகரில் நீதிபதியாகப் பணியாற்றிய ரவிக்குமார் திவாகர் கடந்த 4 மாதத்தில் 22 பேருக்கு மரண தண்டனை வழங்கி உத்தரவிட்டது பெரிய அளவில் பேசப்பட்டது. அதுவும் 10 வழக்குகளில் 22 பேருக்க... மேலும் பார்க்க