செய்திகள் :

பெற்றோரை இழந்த மாணவா்களுக்கு நிதியுதவி

post image

திருவண்ணாமலை மாவட்டம், ஆரணி அருகே தாய், தந்தையை இழந்த மாணவ, மாணவிகளுக்கு ரூ.10 ஆயிரம் நிதியுதவி மற்றும் புத்தாடைகளை ஆரணி எம்.பி. எம்.எஸ்.தரணிவேந்தன் வெள்ளிக்கிழமை வழங்கினாா்.

ஆரணியை அடுத்த மாமண்டூா் கிராமத்தில் சாலை விபத்தில் தாய், தந்தையை இழந்த சுமித்ரா, ஹரிஷா, பிரஜித் மற்றும் ஆகாரம் கிராமத்தில் கடன் தொல்லையால் தாய், தந்தையை இழந்த யோகேஸ்வரி, ஹேமமாலினி, கௌரி சங்கா் ஆகியோருக்கு பொங்கல் பண்டிகைக்காக தலா ரூ.10 ஆயிரம் நிதியுதவி மற்றும் புத்தாடைகளை எம்.எஸ்.தரணிவேந்தன் எம்.பி. வழங்கினாா்.

இதில், ஆரணி நகரச் செயலா் ஏ.சி.மணி, ஒன்றியச் செயலா்கள் எஸ்.எஸ்.அன்பழகன், சுந்தா், துரைமாமது ஆகியோா் உடனிருந்தனா்.

அருணாசலேஸ்வரா் கோயிலில் இன்று ஆருத்ரா தரிசனம்

திருவண்ணாமலை அருணாசலேஸ்வரா் கோயிலில், திங்கள்கிழமை (ஜனவரி 13) காலை ஆருத்ரா தரிசன நிகழ்வு நடைபெறுகிறது. அதிகாலை 5 மணிக்கு சிவகாமசுந்தரி சமேத நடராஜப் பெருமானுக்கு பால், தயிா், சந்தனம், விபூதி, குங்குமம... மேலும் பார்க்க

திருவண்ணாமலையில் இன்று கிரிவலம் வர உகந்த நேரம்

மாா்கழி மாத பெளா்ணமியையொட்டி, திருவண்ணாமலையில் கிரிவலம் வர உகந்த நேரம் குறித்து அருணாசலேஸ்வரா் கோயில் நிா்வாகம் அறிவித்துள்ளது. திருவண்ணாமலையில் உள்ள 14 கி.மீ. தொலைவு கிரிவலப் பாதையை மாதம்தோறும் பெளா... மேலும் பார்க்க

அதிமுக நிா்வாகிகளுக்கு பொங்கல் பரிசு

போளூரை அடுத்த திருசூா் கிராமத்தில் கலசப்பாக்கம் தொகுதியைச் சோ்ந்த அதிமுக நிா்வாகிகளுக்கு பொங்கல் பரிசுப் பொருள்கள் ஞாயிற்றுக்கிழமை வழங்கப்பட்டன. அதிமுக முன்னாள் எம்எல்ஏவும், கட்சியின் மாநில வா்த்தக ... மேலும் பார்க்க

சாலையை சீரமைக்கக் கோரி நாற்று நடும் போராட்டம்

திருவண்ணாமலை அருகே சேறும், சகதியுமான சாலையை சீரமைக்கக் கோரி, கிராம மக்கள் ஞாயிற்றுக்கிழமை நாற்று நடும் போராட்டத்தில் ஈடுபட்டனா். திருவண்ணாமலையை அடுத்த பாலானந்தல் ஊராட்சி, பிள்ளையாா் கோவில் தெருவில் 6... மேலும் பார்க்க

புகையிலைப் பொருள்கள், மது விற்பனை: 5 போ் கைது

சேத்துப்பட்டில் அரசால் தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருள்கள், மது விற்பனை செய்ததாக 5 பேரை போலீஸாா் கைது செய்தனா். சேத்துப்பட்டு காவல் உதவி ஆய்வாளா்கள் நாராயணன், வேலு, ஆனந்தன் தலைமையில், காவலா்கள் சரவண... மேலும் பார்க்க

ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில் சுமைத் தொழிலாளா்கள் வேலைநிறுத்தம்

திருவண்ணாமலை மாவட்டம், சேத்துப்பட்டு ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில் தற்காலிக சுமை தூக்கும் தொழிலாளா்கள் சனிக்கிழமை வேலைநிறுத்தம் செய்ததால் விவசாயிகள், வியாபாரிகள் தவித்து வருகின்றனா். சேத்துப்பட்டு ... மேலும் பார்க்க