செய்திகள் :

பெற்ற மகளைப் பாலியல் வன்கொடுமை செய்ததால் பிறந்த குழந்தை - தந்தைக்கு ஆயுள் தண்டனை விதித்த நீதிமன்றம்

post image

விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டிக்கு அருகிலுள்ள கிராமத்தைச் சேர்ந்தவர் 57 வயதான கந்தன் (பெயர் மாற்றப்பட்டிருக்கிறது). இவரின் மனைவி உடல்நலக்குறைவு காரணமாக கடந்த 2018-ம் ஆண்டு உயிரிழந்தார்.

அதையடுத்து தன்னுடைய 14 வயது மகளை மிரட்டி, கடந்த 2023 ஆம் ஆண்டு முதல் தொடர் பாலியல் வன்கொடுமை செய்திருக்கிறார் கந்தன்.

அதனால் 2025-ல் அந்தச் சிறுமிக்கு குழந்தை பிறந்தது. அதையடுத்து அந்தச் சிறுமி, ``என்னுடைய அம்மா இறந்தபிறகு அப்பா தினமும் மிரட்டி பாலியல் வன்கொடுமை செய்கிறார்.

யாரிடமாவது சொன்னால் கொலை செய்துவிடுவேன் என்றும் மிரட்டினார். அவரால் எனக்குக் குழந்தை பிறந்திருக்கிறது. எனக்கு உடல்நிலை சரியில்லை என்று சொன்னாலும், மிரட்டி பாலியல் வன்கொடுமை செய்கிறார்" என்று கடந்த 09.02.2025 அன்று செஞ்சி அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகாரளித்தார்.

போக்சோ வழக்கு
போக்சோ வழக்கு

அதையடுத்து கந்தனை போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்த போலீஸார், குழந்தையை டி.என்.ஏ பரிசோதனைக்கு உட்படுத்தினர். அதில் குழந்தையின் தந்தை கந்தன்தான் என்பது உறுதியானது. இந்த வழக்கின் அரசு தரப்பு சாட்சிகள் அனைத்தும் விசாரிக்கப்பட்டுவிட்டதால், நேற்று விழுப்புரம் போக்சோ நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது.

அப்போது, ``கந்தன் மீதான குற்றம் ஆதாரப்பூர்வமாக நிரூபிக்கப்பட்டிருப்பதால், அவர் வாழ்நாள் முழுவதும் சிறைத் தண்டனை அனுபவிக்க வேண்டும் என்பதுடன் ரூ.7,000 அபராதம் செலுத்த வேண்டும். அதேபோல பாதிக்கப்பட்ட சிறுமிக்கு அரசு ரூ.10 லட்சம் இழப்பீடாக வழங்க வேண்டும்" என்று உத்தரவிட்டார் நீதிபதி வினோதா.

தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு வழக்கு: குற்றஞ்சாட்டும் தவெக; சவால்விடும் திமுக; காத்திருக்கும் நீதி

முந்தைய அ.தி.மு.க ஆட்சியில் 2018, மே 22-ம் தேதி தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிரான மக்கள் போராட்டத்தில் ஏற்பட்ட கலவரத்தில், 2 பெண்கள் உட்பட 13 பேர் போலீஸாரால் கொல்லப்பட்டனர். 100-க்கும் மேற்பட்டோர... மேலும் பார்க்க

கேரளம்: ஒரு வயது குழந்தையின் கழுத்தை அறுத்து கொன்ற தாய்; திருமண நாளில் இளம்பெண் செய்த கொடூரம்

கேரள மாநிலம் ​திருவனந்தபுரம் மாவட்டம் விளவூர்க்கல் பொற்றா பகுதியைச் சேர்ந்தவர் அபிஜித். மருத்துவப் பிரதிநிதியாகப் பணியாற்றி வருகிறார். இவரது மனைவி கிறிஸ்டி (29). இவர்களுக்கு நான்கு ஆண்டுகளுக்கு முன்பு... மேலும் பார்க்க

காட்பாடி: தேவாலய கட்டுமானப் பணி விபத்தில் 3 பேர் பலி; ஒப்பந்ததாரர் மீது வழக்குப் பதிவு!

வேலூர் மாவட்டம், காட்பாடி அடுத்த ஆந்திர மாநில எல்லையில் மந்தி கிருஷ்ணாபுரம் கிராமம் உள்ளது. இந்த கிராமத்தில், புதிதாக சி.எஸ்.ஐ தேவாலயம் கட்டும் பணிகள் நடைபெற்று வந்தன. இந்த நிலையில், நேற்று மாலை கான்க... மேலும் பார்க்க

ஈரோடு: 3.50 ஏக்கர் நிலத்தை ரிஜிஸ்டர் செய்ய ரூ.7 லட்சம் லஞ்சம்; சப்-ரிஜிஸ்டர், பத்திர எழுத்தர் கைது

ஈரோடு மாவட்டம் கவுந்தப்பாடி ராயர் பாளையத்தைச் சேர்ந்தவர் விவசாயி கார்த்திக். இவருக்குச் சொந்தமான மூன்றரை ஏக்கர் நிலத்தைப் பதிவு செய்வதற்காக கவுந்தப்பாடி சப்-ரிஜிஸ்டர் சங்கரை அணுகியுள்ளார். 3.50 ஏக்கர்... மேலும் பார்க்க

சென்னை: 'ஆபாச செய்கை, போட்டோ மார்பிங்' - GST பெண் ஆபீஸருக்கு செக்ஸ் டார்ச்சர்; சக அதிகாரி கைது

சென்னை முகப்பேரில் ஜி.எஸ்.டி அலுவலகம் செயல்பட்டு வருகிறது. இந்த அலுவலகத்தில் அதிகாரியாக ஆந்திராவைச் சேர்ந்த இளம்பெண் ஒருவர் பணியாற்றி வருகிறார். இவருடன் மேற்கு வங்காளத்தைச் சேர்ந்த சவுரவ் என்பவரும் அத... மேலும் பார்க்க

பிரதீப் ராஜ் கொலை: 'கந்துவட்டி பிரச்னை; விநாயகர் சிலை' - சென்னை துணை நடிகர் கொலையின் பின்னணி என்ன?

சென்னை திருவொற்றியூர் மேற்கு மாடவீதியைச் சேர்ந்தவர் ராணி. இவரின் மகன் பிரதீப்ராஜ் (34). இவர் துணை நடிகராகவும் சென்னை துறைமுகத்தில் ஒப்பந்த அடிப்படையிலும் வேலைப்பார்த்து வந்தார். இந்தநிலையில் சில தினங்... மேலும் பார்க்க