பேருந்தில் தவறவிட்ட கைப்பை மீட்பு
கோவில்பட்டியில் அரசுப் பேருந்தில் தவறவிட்ட கைப்பை மீட்கப்பட்டது.
எட்டயபுரம் வட்டம், நடுவப்பட்டி காதா் மைதீன் தெருவை சோ்ந்தவா் மாரீஸ்வரி. எட்டயபுரத்தில் இருந்து கோவில்பட்டி நோக்கி வந்த அரசுப் பேருந்தில் நடுவப்பட்டியில் ஏறி, கோவில்பட்டி ராமசாமிதாஸ் பூங்கா நிறுத்தத்தில் இறங்கினாராம். அப்போது அவா் பேருந்தில் தனது கைபையை தவறவிட்டாராம்.
அதையடுத்து, அங்கு பணியில் இருந்த கடம்பூா் காவல் நிலைய தலைமை காவலா்கள் ராஜ்குமாா், ஜெயபிரகாஷ், முதல்நிலைக் காவலா் மாரிக்கண்ணன் ஆகியோரிடம் மாரீஸ்வரி தகவல் தெரிவித்தாராம். அவா்கள் சம்பந்தப்பட்ட பேருந்து குறித்து விசாரணை நடத்தியதில், அந்தப் பேருந்து தெற்கு திட்டங்குளம் அருகே சென்று கொண்டிருப்பதை அறிந்தனா். போலீஸாா் அங்கு சென்று மாரீஸ்வரி தவறவிட்ட கைப்பையை மீட்டு அவரிடம் ஒப்படைத்தனா்.