செய்திகள் :

பேருந்தில் நகை திருட்டு : மீண்டும் கைது செய்யப்பட்ட முன்னாள் ஊராட்சி மன்றத் தலைவி!

post image

தங்க நகை திருட்டு வழக்கில் முன்னாள் ஊராட்சி மன்றத் தலைவி, மீண்டும் கைது செய்யப்பட்டுள்ள சம்பவம் கிருஷ்ணகிரி மாவட்டத்தில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கைது

கிருஷ்ணகிரி மாவட்டம் பர்கூரிலுள்ள சகோதரி வீட்டு நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக, திருப்பத்தூர் மாவட்டம் ஜோலார்பேட்டையைச் சேர்ந்த மல்லிகா (66) என்பவர், கடந்த 19-ந் தேதி நாட்றம்பள்ளியில் கிருஷ்ணகிரி செல்லும் தனியார் பேருந்தில் ஏறினார்.

பர்கூரில் இறங்கியவர் அங்கிருந்து ஆட்டோ மூலம் தொகரப்பள்ளி பகுதியில் உள்ள தன் சகோதரி ஜெயலட்சுமி வீட்டுக்கு சென்று பார்த்தபோது, தன் கைப்பையில் வைத்திருந்த பர்ஸ் மற்றும் எட்டரை பவுன் தங்க நகை திருடு போயிருப்பது தெரியவந்தது.

இதுகுறித்து அவர் பர்கூர் போலீசில் புகார் செய்தார். வழக்குப் பதிவு செய்த போலீசார், மல்லிகா பயணம் செய்த பேருந்திலுள்ள கண்காணிப்பு கேமரா, பர்கூர் பேருந்து நிலையப்பகுதியிலுள்ள கண்காணிப்பு கேமராக்களை ஆய்வு செய்ததில் மல்லிகாவின் பின்புற இருக்கையில் அமர்ந்திருந்த பெண் மீது சந்தேகம் ஏற்பட்டுள்ளது.

அந்த பெண், மல்லிகாவுடன் பர்கூர் பேருந்து நிலையத்தில் இறங்கி, அங்கிருந்து ஆட்டோவில் ஏறிச்சென்ற காட்சிகள் பதிவாகி இருந்தன.

பாரதி

இதையடுத்து சந்தேகத்திற்குரிய பெண்ணை போலீசார் தீவிரமாக தேடி வந்த நிலையில் கடந்த 22 ஆம் தேதி பிற்பகல் பர்கூர்-வாணியம்பாடி கூட்ரோடு பகுதியில் பர்கூர் இன்ஸ்பெக்டர் அன்பழகன் தலைமையில் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டபோது, போலீசாரை பார்த்ததும் திரும்பிச் செல்ல முயன்ற பெண்ணிடம் விசாரித்தபோது முன்னுக்குப்பின் முரணாக பதிலளித்துள்ளார். சந்தேகம் வலுக்கவே, காவல் நிலையத்துக்கு அழைத்து சென்று தீவிர விசாரணை நடத்தியதில், மல்லிகாவிடம் இருந்து நகைகளை திருடியதை அப்பெண்மணி ஒப்புக்கொண்டிருக்கிறார்.

அவர், ஆம்பூர் அருகே நரியம்பட்டைச் சேர்ந்த பாரதி (57) என்பதும், முன்னாள் ஊராட்சி மன்ற தலைவியான இவர், ஏற்கனவே நகை திருடிய வழக்கில் கைது செய்யப்பட்டவர் என்பதும் தெரிய வந்தது. அவரிடமிருந்த எட்டரை பவுன் நகைகளை பறிமுதல் செய்து, நீதிமன்றத்தில் ஆஜர் செய்து சிறையில் அடைத்தனர்.

குமரி: ரயில் பெட்டியில் பெண் படுகொலை; 7.30 மணிநேரம் அதே பெட்டியில் இருந்த கொலையாளி - அதிர்ச்சி தகவல்

நாகர்கோவில் சந்திப்பு ரயில் நிலையத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த ரயிலின் மாற்றுத்திறனாளிகள் பெட்டியில் 50 வயது மதிக்கத்தக்க பெண் ஒருவர் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு, கொடூரமாகக் கொலை செய்யப்பட்ட சம... மேலும் பார்க்க

குமரி: இரவு முழுவதும் சித்ரவதை; 72 வயது தந்தையை கழுத்தை நெரித்துக் கொன்ற மகன்!

கன்னியாகுமரி மாவட்டம், பூதப்பாண்டி அருகே உள்ள அழகியபாண்டியபுரம் வாட்ஸ்புரம் பகுதியைச் சேர்ந்தவர் சுவாமிதாஸ் (வயது 72). சுவாமிதாஸ் மனைவி மற்றும் பிள்ளைகளுடன் வசித்து வந்தார். இந்த நிலையில் வீட்டில் மயங... மேலும் பார்க்க

குளித்துக் கொண்டிருந்த சிறுமிக்குப் பாலியல் தொல்லை; போக்சோவில் சிறையில் அடைக்கப்பட்ட இளைஞர்!

தஞ்சாவூர் மாவட்டம், ஒரத்தநாடு பகுதியில் உள்ள ஒரு கிராமத்தைச் சேர்ந்த 14 வயது சிறுமி, அங்குள்ள அரசு பள்ளி ஒன்றில் பத்தாம் வகுப்பு படித்து வருகிறார். வீட்டுக்குப் பின்புறம் அமைக்கப்பட்ட மறைவிடத்தில் சிற... மேலும் பார்க்க

காட்பாடி: வங்கி மேலாளர் வீட்டில் கைவரிசை; ரூ.1 கோடி நகைகளை அள்ளிச் சென்ற முகமூடி கொள்ளையர்கள்!

வேலூர் மாவட்டம், காட்பாடி அடுத்த கார்ணாம்பட்டில் `மே ஃப்ளவர்’ குடியிருப்புப் பகுதி அமைந்திருக்கிறது. இங்கு ஓய்வுபெற்ற வங்கி மேலாளரான எட்வின் என்பவர், தனது மனைவியும் மருத்துவருமான கிறிஸ்டியானாவுடன் வசி... மேலும் பார்க்க

கோவை : பெட்ரோல் பங்கில் நிலத்தடி டேங்க் வெடித்து ஆட்டோ ஓட்டுநர் உயிரிழப்பு – 5 பேர் கைது!

கோவை கணபதி பகுதியைச் சேர்ந்த சந்தோஷ் என்பவருக்கு சொந்தமான இந்தியன் ஆயில் பெட்ரோல் பங்க், கோவை சங்கனூர் எரு கம்பெனி சந்திப்பு பகுதியில் இயங்கி வருகிறது. அங்கு கடந்த இரண்டு மாதங்களுக்கு முன்பு புதிதாக ப... மேலும் பார்க்க

திருச்சி: நகைக்கடையில் ரூ. 12 லட்சம் மோசடி; இளைஞரைத் தேடும் போலீஸ்; பின்னணி என்ன?

நாகப்பட்டினம் மாவட்டம், கீழ்வேளூர் பகுதியைச் சேர்ந்தவர் முகமது போஸ் (வயது: 37). இவர், திருச்சி- கரூர் பைபாஸ் ரோட்டில் அண்ணாமலை நகரில் உள்ள ஒரு தங்க நகைக்கடையில் கிளை மேலாளராக வேலை செய்து வருகிறார். இத... மேலும் பார்க்க