செய்திகள் :

பொறியியல் படிப்பு இல்லை: ஆன்லைனில் பார்த்து பறக்கும் எலக்ட்ரிக் காரை உருவாக்கிய வாலிபர்

post image

வெளிநாடுகளில் பறக்கும் கார்கள் கண்டுபிடிக்கப்பட்டு இருந்தாலும் அவை இன்னும் முழுமையாக பயன்பாட்டிற்கு வரவில்லை. அவை சோதனை மட்டத்திலேயே இருந்து கொண்டிருக்கிறது. இந்நிலையில் உத்தரகாண்ட் மாநிலத்தை சேர்ந்த ஒரு வாலிபர் எஞ்சினியரிங் படிப்பு கூட படிக்காமல் பறக்கும் காரை உருவாக்கி சோதனை செய்து இருக்கிறார். உத்தரகாண்ட் மாநிலம் அல்மோரா மாவட்டத்தைச் சேர்ந்த ரவி தம்தா என்ற அந்த வாலிபர் மின்சார பறக்கும் வாகனத்தை உருவாக்குவதற்கு 13 ஆண்டுகள் எடுத்துக்கொண்டுள்ளார். 13 ஆண்டுகளாக ஆன்லைனில் கிடைத்த தகவல்களை கொண்டு இந்த காரை வடிவமைத்து இருக்கிறார்.

இளங்கலை பட்டம் முடித்துள்ள தம்தா முறையான பொறியியல் கல்வி இல்லாமல் யாரது துணையும் இல்லாமல் இதனை வடிவமைத்துள்ளார். ஒற்றை இருக்கை கொண்ட அந்த பறக்கும் வாகனத்திற்கு HAPIDA SKYNeX என்று பெயர் வைத்து இருக்கிறார். கடந்த ஆகஸ்ட் மாதம் இந்த வாகனத்தை ஓட்டி சோதனை செய்து வெற்றி பெற்றுள்ளார்.

தம்தா இணைய தளத்தில் கிடைத்த தகவல்களை கொண்டு பல வருட பரிசோதனைகள் மற்றும் குடும்பத்தினரின் ஆதரவு மூலம் இந்த பறக்கும் வாகனத்தை உருவாக்கி இருக்கிறார். கல்லூரிகளுக்கு செல்லாமலும் ஆர்வமும் முயற்சியும் இருந்தால் சாதிக்க முடியும் என்பதற்கு தம்தா ஒரு உதாரணம் ஆகும்.

தம்தா ஜாகேஷ்வர் தாமுக்கு அருகிலுள்ள காஃப்லிகான் என்ற இடத்தை சேர்ந்தவர் ஆவார். மலைப்பகுதியில் வசிக்கும் தம்தா அங்கு பயணிப்பதில் உள்ள சவால்கள், குறிப்பாக மருத்துவமனைக்கு செல்லும் வளைந்த சாலைகளில் ஒரு நீண்ட பயணம் மேற்கொள்வதன் மூலம் பலர் இறந்துள்ளனர். எனவேதான் தங்களுக்கு சாலையில் செல்லாமல் வானில் பறந்து செல்ல வேண்டும் என்ற ஆர்வத்தில் புதிய வாகனத்தை உருவாக்கும் முயற்சியில் ஈடுபட்டதாக தம்தா தெரிவித்தார்.

அவர் இதற்கான தனது பயணத்தை 2015ல் தொடங்கினார். ஒரு பறக்கும் காரை உருவாக்க வேண்டும் என்று கனவை நனவாக்கும் வேலையில் இறங்கினார். அவர் இதற்காக Hapida Sky Private Limited என்ற கம்பெனியை உருவாக்கினார்.

ஓடுபாதை இல்லாமல், செங்குத்தாக புறப்பட்டு தரையிறங்கும் வகையில் வாகனம் வடிவமைக்கப்பட்டுள்ளது. இதனை உருவாக்க பல மின்சார மோட்டார்கள் மற்றும் மல்டிரோட்டர் ட்ரோன்களைப் போன்ற தொழில்நுட்பம் பயன்படுத்தி உருவாக்கப்பட்டுள்ளது. இது பேட்டரி மூலம் இயங்கும். விமான எரிபொருள் அல்லது எத்தனால் தேவையில்லை.

இருப்பினும், சோதனை விமானம் பயணிகளை ஏற்றிச் செல்ல அல்லது வணிக ரீதியாக இயக்க இன்னும் தயாராகவில்லை. இந்த பறக்கும் வாகனமானது, தொலைதூரப் பகுதிகள் மற்றும் மருத்துவ அவசரநிலைகளில் பயன்படுத்தவும், கடினமான நிலப்பரப்பில் குறுகிய தூரப் பயணத்தை விரைவாக மேற்கொள்ளும் நோக்கத்தில் உருவாக்கப்பட்டது. தம்தா தனது கிராமத்தில் உள்ள ஜூனியர் உயர்நிலைப் பள்ளியில் பயின்றார், பின்னர் நைனிடாலில் இளங்கலைப் பட்டம் பெற்றார். இவரது தந்தை ஹரிஷ் ராம் ஒரு மெக்கானிக். முறையான பொறியியல் பயிற்சி அல்லது சிறப்பு ஆய்வகம் இல்லாமல், தம்தா தனது யோசனைகளை உருவாக்க ஆன்லைன் தகவல் மட்டுமே பயன்படுத்தினார்.

அவரது முந்தைய படைப்புகளில் மொபைல் போன்களை சார்ஜ் செய்யும் காலணிகள், பார்வை குறைபாடு உள்ளவர்களுக்கான ஸ்மார்ட் வாக்கிங் ஸ்டிக், மூங்கில் பிளக்கும் இயந்திரம் மற்றும் தீயணைப்பு கருவிகள் ஆகியவை அடங்கும். வனத்துறைக்கு தேவையான ஸ்டிக் மொபைல் சார்ஜர் மற்றும் தீயை அணைக்கும் கருவியையும் உருவாக்கியுள்ளார்.

ஸ்பிரிங் தொழில்நுட்பத்துடன் தற்கொலை தடுப்பு மின்விசிறிகள்- சூரத் பல்கலைக்கழகத்தில் புது ஏற்பாடு

கல்லூரி மற்றும் பல்கலைக்கழகங்களில் தங்கி படிக்கும் மாணவர்கள் சில நேரங்களில் மன அழுத்தம் ஏற்பட்டு தற்கொலை செய்து கொள்கின்றனர். இதற்கு பெரும்பாலும் மின்விசிறியைத்தான் பயன்படுத்துகின்றனர். இதையடுத்து இப்... மேலும் பார்க்க

`ஒரு பைத்தியக்காரன் போல் வேலை செய்து உறவுகளை இழந்துவிட்டேன்!' - கண்ணீர் சிந்திய ஆமீர் கான்

பாலிவுட் நடிகர் ஆமீர் கான் சிங்கப்பூர் சர்வதேச திரைப்பட விழாவில் கலந்து கொண்டார். இதில் ஆமிர் கானுக்கு விருது வழங்கி கெளரவிக்கப்பட்டது. இவ்விழாவில் சிங்கப்பூர் காமெடியன் ரிஷி புத்ரானியுடன் கலந்துரையாட... மேலும் பார்க்க

'விவசாயிகளுக்கு வெளிநாட்டுக்கு விவசாயச் சுற்றுலா' - கடுமையான வறட்சிக்கு இடையிலும் அறிவித்த மகா. அரசு

மகாராஷ்டிராவில் இந்த ஆண்டு போதிய அளவு பருவ மழை பெய்யவில்லை. இதனால் மாநிலத்தின் 75 சதவீதத்திற்கும் அதிகமான பகுதியை வறட்சி பாதித்த பகுதியாக மாநில அரசு அறிவித்து இருக்கிறது. பீட் உட்பட சில மாவட்டங்களில் ... மேலும் பார்க்க

`தாயார் குணமடைவதற்கு சிவனிடம் கொடுத்த வாக்குறுதி இது...' - தினமும் 50 கிலோமீட்டர் ஓடும் இளைஞர்!

பிச்சைக்காரன் படத்தில் தனது தாயார் குணமடைய வேண்டும் என்பதற்காக படத்தின் ஹீரோ ஒரு மண்டலத்திற்கு யாசகம் செய்து பிழைப்பு நடத்துவார். அது போன்று அதேசமயம் சற்று வித்தியாசமாக பீகாரைச் சேர்ந்த ஒரு வாலிபர் தன... மேலும் பார்க்க

`என் உலகத்தையே இழந்துவிட்டேன்' - 5 வயது மகளை கொன்ற மனைவி; இறுதிச்சடங்கிற்கு நிதி உதவி கோரும் தந்தை!

நியூயார்க்கின் குயின்ஸ் பகுதியில் 5 வயது சிறுமி ஃபபியானா கபெல்லோ உயிரிழந்த வழக்கில், அவரது தாய் ஃபிரான்சிஸ் கபெல்லோ (32) மீது இரண்டாம் நிலைக் கொலைக் குற்றச்சாட்டு பதிவு செய்யப்பட்டுள்ளது. 'நானே என் மக... மேலும் பார்க்க

Tiger Shroff attack: டெல்லி டு மும்பை... டைகர் ஷெராப்பைச் சுட துப்பாக்கி கொடுத்த உ.பி பெண்கள்!

மும்பையில் கடந்த ஞாயிற்றுக்கிழமை பாலிவுட் நடிகர் டைகர் ஷெராப் மீது துப்பாக்கிச்சூடு நடத்தியது தொடர்பாக டெல்லி மற்றும் ஹரியானாவில் நான்கு பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்களில் ராதா மற்றும் பபிதா ஆகிய... மேலும் பார்க்க