செய்திகள் :

மகப்பேறு மருத்துவர் டு பவானி ஆற்றின் மீட்பர்! - 92 வயதில் காலமான சூழலியல் போராளியின் சாதனை பின்னணி!

post image

ஈரோடு மாவட்டம் கோபிச்செட்டிப்பாளையம் பகுதியைச் சேர்ந்தவர் மகப்பேறு மருத்துவர் சத்தியசுந்தரி. உள்ளூர் மக்களின் நம்பிக்கைக்குரிய மருத்துவரான இவர், 30 ஆயிரத்திற்ம் மேற்பட்ட பெண்களுக்கு மகப்பேறு மருத்துவம் அளித்தவர். தனது மருத்துவமனைக்கு வரும் பெருவாரியான நோயாளிகள் அனைவரும் ஒரே மாதிரியான குறிப்பிட்ட உடல்நல பாதிப்புகளுடன் வருவதை கவனித்த இவர், மிக மோசமான நச்சுக் கழிவு கலக்கப்பட்ட தண்ணீரைப் பயன்படுத்துவதால் இத்தகைய நோய் பாதிப்புகள் மக்களுக்கு ஏற்படுவதைக் கண்டறிந்திருக்கிறார். மேட்டுப்பாளையம் அருகில் உள்ள சிறுமுகை பகுதியில் இயங்கி வந்த 'சவுத் இந்தியன் விஸ்கோஸ்' (South Indian Viscose - SIV) என்கிற தனியார் செயற்கை நூலிழை தயாரிக்கும் தொழிற்சாலையின் சுத்திகரிக்கப்படாத ஆபத்தான வேதிப் பொருட்களை நேரடியாக பவானி ஆற்றில் கலந்து வந்ததே இந்த நோய்களுக்கெல்லாம் காரணம் என்பதை அறிவியல் பூர்வமாகக் கண்டறிந்தவர்.

சூழலியல் போராளி சத்தியசுந்தரி

1980-களின் இறுதியில் கட்சி பாகுபாடின்றி பொதுமக்கள், விவசாயிகள் மற்றும் சுற்றுச்சூழல் ஆர்வலர்களை ஒன்றிணைத்து 'பவானி நதி நீர் பாதுகாப்புக் கூட்டமைப்பு' என்ற சக்திவாய்ந்த மக்கள் இயக்கத்தை உருவாக்கியிருக்கிறார். மருத்துவர் ஜீவானந்தம், தோழர் பி.எல். சுந்தரம், வழக்கறிஞர்கள் மற்றும் சமூக ஆர்வலர்களுடன் இணைந்து வீதியில் இறங்கி போராட்டங்களை நடத்தியது மட்டுமின்றி, நீதிமன்றங்கள் மூலமாகவும் நீண்ட சட்டப் போராட்டங்களை முன்னெடுத்திருக்கிறார். இவரின் இடைவிடாத போராட்டங்களின் விளைவாக, நீதிமன்ற உத்தரவின் அடிப்படையில் அந்தத் தனியார் தொழிற்சாலை மூடப்பட்டு பவானி ஆற்றில் நச்சுக் கழிவுநீர் கலப்பதற்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டுள்ளது. மக்களின் வாழ்வாதாரமாக விளங்கி வரும் பவானி ஆற்றை மீண்டும் தன் இயல்பு நிலைக்கு கொண்டு வந்த சூழலியல் போராளி மருத்துவர் சத்தியசுந்தரி தன்னுடைய 92- வது வயதில் நேற்றிரவு காலமானார். இவரின் சூழலியல் போராட்டத்தை பலரும் நினைவு கூர்ந்து போராடி வருகின்றனர்.

கோவையில் தாயைப் பிரிந்து பரிதவித்த குட்டி யானை; கோழிகமுத்தி முகாமிற்கு மாற்றம்

கோவை மாவட்டத்தில் மேற்குத் தொடர்ச்சி மலையை ஒட்டிய வனப்பகுதிகளில் காட்டு யானை, சிறுத்தை உள்ளிட்ட வனவிலங்குகள் உள்ளன. குறிப்பாக சிறுமுகை வனப்பகுதியில் அதிக அளவிலான காட்டு யானைகள் உள்ளன.இந்த நிலையில் கடந... மேலும் பார்க்க

கோவை: மின்சாரம் தாக்கி காட்டு யானை உயிரிழப்பா? – வனத்துறை விசாரணை!

கோவை மாவட்டத்தில் மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டிய வனப்பகுதியில் உள்ள காட்டு யானை உள்ளிட்ட வனவிலங்குகள் உணவு மற்றும் தண்ணீர் தேடி கிராமங்களுக்குள் நுழைந்து வருகின்றன. இந்த நிலையில் தடாகம் அருகேயுள்ள 24-வ... மேலும் பார்க்க

அதிக நாவல் பழ விளைச்சல்! வருங்கால வறட்சிக்கு எச்சரிக்கை மணியா? - தாவரவியல் வல்லுநர்கள் சொல்வதென்ன?

"இந்தாண்டு நாவல் பழத்தின் அதிகப்படியான விளைச்சல் என்பது அடுத்து வரப்போகும் பெரிய வறட்சிக்காக இயற்கை நமக்குக் கொடுத்திருக்கும் எச்சரிக்கை மணி..!" — கடந்த சில வாரங்களாக வாட்ஸ்அப், ஃபேஸ்புக், இன்ஸ்டாகிரா... மேலும் பார்க்க

போர்க்களத்திலும் குறையாத கடல் ஆமைகள் மீதான கரிசனம்; உலகை உலுக்கிய சுற்றுச்சூழல் ஆர்வலர் மரணம்!

லெபனான் நாட்டில் நடக்கும் பயங்கரமான போருக்கு மத்தியிலும், தான் நேசித்த கடற்கரையையும், அங்கு வாழும் ஆமைகளையும் காப்பாற்ற நினைத்த ஒரு பெண்ணின் கதை சோகமாக முடிந்துள்ளது.லெபனானின் புகழ்பெற்ற சுற்றுச்சூழல்... மேலும் பார்க்க

`சுற்றுச்சூழலின் Bio Indicators'- தனித்துவமான புலி வண்டுகள் குறித்து விளக்கும் பல்லுயிர் ஆய்வாளர்கள்

இவ்வுலகில் வாழும் அத்தனை உயிர்களும் சூழலியலோடு ஒன்றி இயங்குவதோடு மட்டுமன்றி, சுற்றுச்சூழலின் நிலையையும் உயிர் காட்டியாக (Bio indicators) இருந்து சுட்டுகின்றன.மழை வருவதை முன்கூட்டியே உணர்த்தும் தும்பிக... மேலும் பார்க்க

``தென்மேற்கு பருவமழைக் காலத்தில் 'El Nino' தீவிரம் அடைய வாய்ப்பு" - வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை

மத்திய மற்றும் கிழக்கு பசிபிக் பெருங்கடல் பகுதியில் 'எல் நினோ' (El Nino) காலநிலை மாற்றம் அதிகாரப்பூர்வமாகத் தொடங்கியுள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் (IMD) உறுதிப்படுத்தியுள்ளது. தற்போது தீவிரமடைந்து ... மேலும் பார்க்க