செய்திகள் :

மகரம் | 2026 ராகு-கேது பெயர்ச்சி: கடன்கள் தீரும் காலம் இது! - 11 பலன்கள் | கே.பி.வித்யாதரன்

post image

1. உழைப்பே வெற்றிக்கான விதை என்பதைப் புரிந்துகொண்டு, புதுப்புது வாய்ப்புகளைப் பயன்படுத்தி முன்னேற்றப்பாதையில் நகர்வீர்கள். சிலர், இடவசதியான வீட்டிற்கு மாறுவீர்கள். குடும்பத்தில் மகிழ்ச்சி தங்கும். சிலருக்குக் குழந்தைப் பாக்கியம் உண்டாகும்.

ராகு கேது பெயர்ச்சி பலன்கள் மகரம்

2. பிள்ளைகளின் எதிர்காலம் குறித்து முக்கிய முடிவுகள் எடுப்பீர்கள். உங்கள் ஆரோக்கியத்தில் அக்கறை காட்டவேண்டும். தலை வலி, சைனஸ் பிரச்னை, தோள்பட்டையில் வலி வந்து போகும். குடும்பத்துடன் குலதெய்வக் கோயிலுக்குச் சென்று வருவதன் மூலம் மன நிம்மதி கிட்டும்.

3. வேலை வாய்ப்புக்காகக் காத்துக் கொண்டிருப்பவர்களுக்கு நல்ல தகவல் வந்துசேரும். புகழ்பெற்ற நிறுவனங்களில் வாய்ப்பு கிடைக்கும். ஷேர் மூலம் பணம் வரும். மற்ற வகையிலும் எதிர்பார்த்தபடி பண வரவு அதிகரிக்கும். பழைய கடன்கள் தீரும். போட்டிகளில் ஜெயிப்பீர்கள். செலவுகளைக் கட்டுப்படுத்துவீர்கள்.

4. ராகு செவ்வாயின் நட்சத்திரத்தில் செல்லும்போது (5.12.26 முதல் 11.3.27 வரை) வீண் அலைச்சல், டென்ஷன் வரக்கூடும். தாயாரின் உடல்நலம் பாதிக்கும். வாகனம் செலவு வைக்கும்.

5. சந்திரனின் நட்சத்திரத்தில் செல்லும்போது (11.3.27 முதல் 18.12.27 வரை) கணவன் - மனைவிக்குள் விட்டுக்கொடுத்துப் போங்கள். சூரியனின் நட்சத்திரத்தில் ராகு செல்லும்போது (18.12.27 முதல் 23.6.28 வரை) சில காரியங்களை அலைந்து திரிந்துதான் முடிப்பீர்கள்.

6. கேது பகவான் உங்கள் ராசிக்கு 7-ம் வீட்டில் அமர்ந்து பலன் தரப்போகிறார். பிரச்னைகளை எதிர்கொள்ளும் ஆற்றல் கிடைக்கும். அதேநேரம் வீட்டில் சிற்சில வாக்குவாதங்கள் வந்துபோகும். உறவுகள் மத்தியில் வாழ்க்கைத் துணைவருக்காக வாதாட வேண்டி இருக்கும். பிள்ளைகளால் மகிழ்ச்சி உண்டு.

7. உறவினர்கள் இடையேயான மனஸ்தாபங்கள் விலகும். மகான்கள், சித்தர்களின் ஆசி கிட்டும். அரசுக் காரியங்களில் வெற்றியுண்டு. சிலர் இருக்கும் வீட்டை விரிவுபடுத்த வாய்ப்பு அமையும். சொத்துப் பிரச்னை, பங்காளிச் சண்டைக்காக நீதிமன்றம் செல்ல வேண்டாம். பலரையும் நம்பி ஏமாந்த நிலை மாறும். பிரபலங்களின் அறிமுகமும் அவர்களால் ஆதாயமும் கிடைக்கும். அயல்நாட்டுப் பயணங்கள் தேடி வரும்.

8. கேது புதன் நட்சத்திரத்தில் சஞ்சரிக்கும்போது (5.12.26 முதல் 14.8.27 வரை) திடீர் பணவரவு உண்டு. தடைப்பட்ட வேலைகள் முழுமையடையும். சனியின் நட்சத்திரத்தில் (14.8.27 முதல் 22.4.28 வரை) செல்லும்போது, பேச்சில் நிதானம், ஆரோக்கியத்தில் கவனம் தேவை.

9. குருவின் நட்சத்திரத்தில் செல்லும்போது (22.4.28 முதல் 23.6.28 வரை) பிரச்னைகளுக்குத் தீர்வு கிட்டும். மனக்குழப்பங்கள் நீங்கும். இல்லத்தரசிகளுக்கு ஆரோக்கியம் மேம்படும். குடும்பத்தில் மதிப்பு உயரும்.

10. வியாபாரத்தில் திடீர் லாபம் அதிகரிக்கும். இரும்பு, கெமிக்கல், ரியல் எஸ்டேட் வகைகளால் ஆதாயம் உண்டு. அரசாங்க கெடுபிடிகள் குறையும். புது ஒப்பந்தங்கள் கையெழுத்தாகும். பங்குதாரர்களிடம் வளைந்துகொடுத்துப் போவது நல்லது.

11. உத்தியோகத்தில் பதவி உயர்வு தேடி வரும். சக ஊழியர்கள் மதிப்பார்கள். கணினித் துறையினருக்கு வேலைப்பளு இருந்தாலும் சம்பள உயர்வும் கிடைக்கும். கலைத்துறையினர் தகுந்த வாய்ப்பைப் பயன்படுத்திக்கொள்ளுங்கள்.

தனுசு | 2026 ராகு-கேது பெயர்ச்சி: செலவுகளில் கவனம் தேவை! - 11 பலன்கள் | கே.பி.வித்யாதரன்

1. வாக்குஸ்தானத்தில் ராகு நுழைந்திருப்பதால், சங்கடங்களில் சிக்காதபடி சமயோசிதமாகப் பேசவேண்டும். உங்களின் முன்கோபத்தால் சிலரின் நட்பை இழக்கவேண்டியது வரும். வெளிநாடு செல்ல விசா கிடைக்கும். புதிய முயற்சிக... மேலும் பார்க்க

விருச்சிகம் | 2026 ராகு-கேது பெயர்ச்சி: `சந்தோஷ செய்தி உண்டு!' - 11 பலன்கள் | கே.பி.வித்யாதரன்

1. ராகு பகவான் 3-ம் இடத்தில் அமர்வதால், எதிலும் வெற்றி உண்டாகும்; முயற்சிகளில் முட்டுக்கட்டைகள் விலகும். பணவரவு உண்டு. குடும்பத்தில் சுப காரியங்கள் தடபுடலாக நடக்கும். கணவன்-மனைவிக்குள் விட்டுக் கொடுத்... மேலும் பார்க்க

துலாம் : 2026 ராகு-கேது பெயர்ச்சி: இனி தொட்டது துலங்கும்! - 11 பலன்கள் | கே.பி.வித்யாதரன்

1. விலகிச்சென்றவர்கள் எல்லாம் உங்களைத் தேடி வரும் சூழல் உண்டாகும். உங்கள் அருமையை எல்லோரும் புரிந்து கொள்வார்கள். குடும்பத்தில் சுபநிகழ்ச்சிகள் நல்லவிதத்தில் முடியும். கணவன்-மனைவிக்குள் அந்நியோன்யம் அ... மேலும் பார்க்க

கன்னி |2026 ராகு-கேது பெயர்ச்சி: திடீர் யோகம் தேடி வரும்! - 11 பலன்கள் | கே.பி.வித்யாதரன்

1. இந்த ராகு-கேது பெயர்ச்சியில் உங்களின் மதிப்பும் அந்தஸ்தும் உயரும். எனினும், சொந்த பந்தங்களிடம் அதிகம் உரிமை எடுத்துக் கொள்ள வேண்டாம். எவ்விதமான பிரச்னைகளையும் பேசித் தீர்க்கப் பாருங்கள். குடும்பத்த... மேலும் பார்க்க

சிம்மம் |2026 ராகு-கேது பெயர்ச்சி : உத்தியோகத்தில் திடீர் முன்னேற்றம் - 11 பலன்கள்| கே.பி.வித்யாதரன்

1. இந்த ராகு-கேது பெயர்ச்சியில் மனச்சோர்வுகள் நீங்கி உற்சாகம் பெறுவீர்கள். செயல்களில் உத்வேகம் பிறக்கும். குடும்பத்தில் ஒற்றுமை ஓங்கும். வீண் சந்தேகம், ஈகோவால் பிரிந்திருந்த கணவன்-மனைவி ஒன்றுசேர்வார்க... மேலும் பார்க்க

கடகம் | 2026 ராகு-கேது பெயர்ச்சி: பணவரவு திருப்தி; பேச்சில் கவனம்.! - 11 பலன்கள் | கே.பி.வித்யாதரன்

1. இந்த ராகு-கேது பெயர்ச்சிக் காலத்தில் குடும்பத்தில் உங்களுக்கு முக்கியத்துவம் பெருகும். நல்ல வேலை கிடைக்கும். எனினும், எதிலும் சுயமாகச் சிந்தித்து முடிவெடுக்கப் பாருங்கள். ஜாமீன், கேரண்டி என்று கையெ... மேலும் பார்க்க