செய்திகள் :

‘மகளிருக்கு மாதம் ரூ.2,500 எப்போது வழங்கப்படும்?’ – அமைச்சர் அருண்ராஜ் விளக்கம்!

post image

கோவை அரசு மருத்துவக் கல்லூரி வளாகத்தில் சுகாதாரத் துறை அமைச்சர் அருண்ராஜ் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது பேசிய அவர், “கோவையில் எய்ம்ஸ் மருத்துவமனைக்கு இடம் பார்ப்பது தொடர்பாக வந்திருக்கிறோம். தகுதியான இடம் குறித்து மாவட்ட ஆட்சியரிடம் பேசி இருக்கிறோம். முதல்வர் விஜய்  பிரதமரை சந்திக்கும் போது, கோவை எய்ம்ஸ் மருத்துவமனைக்கு அனுமதி கேட்கப்பட்டு இருந்தது. கூடிய விரைவில் இது குறித்து அறிவிப்போம். இடத்தை கண்டறிந்து விட்டு, எந்த இடம் என்பதை சொல்கிறோம். மதுரை எய்ம்ஸ் மருத்துவமனையை தொடர்ந்து ஆய்வு செய்து கொண்டு இருக்கிறோம். பல வருடங்களுக்கு பின்னர் பணிகள் துவங்கி இருக்கிறார்கள். பணிகள் நடந்து கொண்டு இருக்கிறது.

தமிழகத்தை பொறுத்தவரை பிற மாநிலங்களை விட மருத்துவ வசதிகள் சிறப்பாக இருக்கிறது. ஆனால் தேவைகள் இருக்கிறது. அனைத்து தரப்பு மக்களுக்கும் தரமான மருத்துவ சேவைகள் கிடைக்க வேண்டும் என்பதுதான் முதல்வரின்  லட்சியம். போதுமான மருத்துவர்கள், செவிலியர்கள் மட்டுமின்றி, மருத்துவ பயனாளிகளின் அனுபவமும் சுத்தமாக சிறப்பாக இருக்க வேண்டும்  என்பதில் கவனம் செலுத்துகிறோம். நீட் தேர்வு காரணமாக இரு குழந்தைகள் உயிரிழந்தது மிகவும் வருந்தக்கூடிய விஷயம். இரு குழந்தைகளை இழந்திருக்கிறோம். நீட் தேர்வு வேண்டாம் என்பது தமிழக வெற்றிக் கழகத்தின் உறுதியான நிலைப்பாடு. நீட் மாநில உரிமைகளுக்கு எதிரானது. இதற்கு நிரந்தர தீர்வாக கல்வியை மாநில பட்டியலுக்கு கொண்டு வர வேண்டும். ஆளூநர் உரையிலும் இதை சொல்லி இருக்கிறோம்.

அருண்ராஜ்
அருண்ராஜ்

இது போன்ற தவறான முடிவுகளுக்கு செல்ல வேண்டாம். மாணவர்களுக்கு கோரிக்கை விடுக்கிறோம். கண்டிப்பாக மாணவர்களுக்கு மன உளைச்சல்  இருக்கிறது. அதை ஒப்புக்கொண்டு தான் ஆக வேண்டும். ஒரு முறை தேர்வு வைத்து , ரத்து செய்து மீண்டும் தேர்வு வைப்பது என்பது மாணவர்களுக்கு மன உளைச்சல் ஏற்பட்டு இருக்கிறது என்பது உண்மை. தமிழக அரசு பிரத்யேகமாக 104 என்ற உதவி மையம் வைத்திருக்கிறோம். அதில் மனநல நிபுணர்கள் இருப்பார்கள். இதை பயன்படுத்திக் கொள்ளலாம். நீட் தேர்வு எழுதும் அனைத்து மாணவர்களுக்கும் முதல்வர் சார்பாக வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறோம்.

மருத்துவம் ஒரு படிப்பு தான். கிடைக்கவில்லை என்றால் வாழ்க்கை முடிந்து போகவில்லை. நீட் பிரச்சினைக்கு தீர்வு காண சட்டமன்றத்தில் தீர்மானம் மட்டுமல்ல,  சட்ட ரீதியிலும் அனைத்து வழிகளையும் ஆலோசனை  செய்வோம். தமிழகத்தில் மருத்துவமனை கட்டடங்கள் நிறைய பாழடைந்து இருக்கிறது. அதை சரி செய்ய நடவடிக்கை எடுக்கப்படும்” என்றார்.

இதற்கு முன்னதாக அன்னூர் பகுதியில் ஒரு நிகழ்ச்சியில் பங்கேற்ற அருண் ராஜிடம் மகளிருக்கு மாதம் ரூ.2,500 எப்போது வழங்கப்படும் என செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு, “வெள்ளை அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது. அது படிப்படியாக செயல்படுத்த வேண்டும். அதனை செயல்படுத்த அவகாசம் தேவை. மாநிலத்தின் நிதிநிலை அந்தளவில் உள்ளது” என பதிலளித்தார்.

சர்வதேச யோக தினம்: '50 வயதில் இருந்ததை விட 70 வயதில்.!' - மோடி பேசிய 6 முக்கிய புள்ளிகள்!

இன்று 12-வது சர்வதேச யோக தினம். இந்த ஆண்டு இந்திய பிரதமர் மோடி கொல்கத்தாவில் நடந்த யோக நிகழ்வில் கலந்துகொண்டிருக்கிறார். அந்த நிகழ்வில் மோடி பேசிய முக்கிய விஷயங்கள்...> ஒட்டுமொத்த நாடும் யோகாவின் ஆ... மேலும் பார்க்க

ட்ரம்ப் VS மெலோனி: மோதிக்கொள்ளும் தலைவர்கள்; சிக்கலில் மெலோனியின் சர்வதேச அதிகாரம்!

நெருங்கமான நட்பு!ஒரு காலத்தில் சர்வதேச அரங்கில் மிகவும் நெருங்கிய அரசியல் கூட்டாளிகளாகக் கருதப்பட்ட அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் மற்றும் இத்தாலி பிரதமர் ஜியோர்ஜியா மெலோனி ஆகிய இருவருக்கும் இடையேயா... மேலும் பார்க்க

ஒப்பந்தத்தை மீறிய இஸ்ரேல்: மீண்டும் மூடப்பட்ட ஹார்மூஸ் வழித்தடம்! - என்ன காரணம்!

மத்திய கிழக்கு நாடான லெபனான் மீது இஸ்ரேல் தொடர்ந்து நடத்தி வரும் தாக்குதல்கள் காரணமாக, அமெரிக்கா மற்றும் ஈரான் இடையே சமீபத்தில் எட்டப்பட்ட அமைதி ஒப்பந்தம் முறியும் நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளது. லெபனான்... மேலும் பார்க்க

ஹார்முஸ் நீர்ச்சந்தியை 'மீண்டும்' மூடிய ஈரான் - ஏன்?; சுங்க வரி ஈரான் வசூலிக்கலாமா? - ட்ரம்ப் பதிவு

ஈரான், அமெரிக்கா இடையே புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தாகிய பின்னும், நேற்று ஹார்முஸ் நீர்ச்சந்தி மூடப்பட்டுள்ளது. இதற்கு மிக முக்கியக் காரணம் - இஸ்ரேல் லெபனான் மீது நடத்தி வரும் தொடர் தாக்குதலே. புர... மேலும் பார்க்க

ஓமனில் உயிரிழந்த கப்பல் மாலுமி; மனைவிக்கு கருணை அடிப்படையில் பணி வழங்கிய அமைச்சர் ஸ்ரீநாத்

ஓமன் நாட்டின் துறைமுகம் அருகே நிறுத்தப்பட்டிருந்த ”எம்.டி செலஸ்டியல்” என்ற கப்பலில் பணிபுரிந்து வந்த தமிழகத்தின் தூத்துக்குடியைச் சேர்ந்த நிஷாந்த் உயிர்த்த நாதன் (வயது 35) என்ற இரண்டாம் நிலை அதிகாரி, ... மேலும் பார்க்க

’நான் தன்னந்தனி ஆளு’ - மருத்துவக் கல்லூரி பட்டமளிப்பு விழாவில் ஒலித்த தவெக கட்சி பாடலால் சர்ச்சை!

கோவை சிங்கநல்லூர் பகுதியில் உள்ள இ.எஸ்.ஐ அரசு மருத்துவக் கல்லூரியின் பட்டமளிப்பு விழா நடைபெற்றது. இவ்விழாவில் மாவட்ட ஆட்சியர் பவன குமார், இ.எஸ்.ஐ மருத்துவக் கல்லூரி முதல்வர் வீரமணி மற்றும் மருத்துவ பே... மேலும் பார்க்க