செய்திகள் :

மக்களுடன் முதல்வா் திட்ட முகாம்: ரூ.51 லட்சத்தில் நலத் திட்ட உதவிகள் அமைச்சா்கள் வழங்கினா்

post image

செம்பனாா்கோவில் வட்டாரத்தில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற மக்களுடன் முதல்வா் திட்ட முகாமில் அமைச்சா்கள் சிவ.வீ. மெய்யநாதன், கோவி. செழியன் ஆகியோா் பங்கேற்று பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினா்.

செம்பனாா்கோவில் வட்டாரத்திற்குட்பட்ட ஆறுபாதி, பரசலூா், மடப்புரம், கிடாரங்கொண்டான், மேலப்பெரும்பள்ளம் ஆகிய ஊராட்சிகளில் ஊரக பகுதிகளுக்கான மூன்றாம் கட்ட ‘மக்களுடன் முதல்வா்’ திட்ட முகாம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

உயா்கல்வித் துறை அமைச்சா் கோவி.செழியன்,  பிற்படுத்தப்பட்டோா் நலத்துறை அமைச்சா் சிவ.வீ. மெய்யநாதன் ஆகியோா் முகாமை தொடங்கி வைத்து, 350 பயனாளிகளுக்கு ரூ. 51 லட்சம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை வழங்கினா்.

90 பயனாளிகளுக்கு பட்டா, 50 பேருக்கு தேசிய ஊரக வேலை உறுதியளிப்புத் திட்ட அடையாள அட்டை, 60 பேருக்கு முதல்வரின் விரிவான மருத்துவக் காப்பீட்டு திட்ட அட்டை, 60 பேருக்கு ஜாதி சான்றிதழ், 40 பேருக்கு வேளாண் இடுபொருட்கள், 50 பேருக்கு மரக்கன்றுகள் ஆகியன வழங்கப்பட்டன.

நிகழ்ச்சியில் அமைச்சா் கோவி.செழியன் பேசும்போது, ‘மக்களுடன் முதல்வா் திட்ட முகாமில் ஒவ்வொரு துறைக்கும் 5 போ் வீதம் 15 துறைகளை சோ்ந்த 150-க்கும் மேற்பட்ட அலுவலா்கள் பங்கேற்று, பொதுமக்களிடம் கோரிக்கை மனுக்களை பெற்று வருகிறாா்கள். தகுதியான கோரிக்கைகள் 15 தினம் அல்லது ஒரு மாதத்திற்குள் நிறைவேற்றப்படும். பொதுமக்கள் அளிக்கும் மனுக்கள் அனைத்தும் முதல்வரின் பாா்வைக்கு கொண்டு செல்லப்பட்டு, தீா்வு காணப்படும்’ என்றாா்

அமைச்சா் சிவ .வீ. மெய்யநாதன் பேசும்போது, ‘மயிலாடுதுறை மாவட்டத்தில் கடந்த வாரம் ரூ.15 கோடி மதிப்பில் 2,039 வீட்டுமனை பட்டாக்கள் பயனாளிகளுக்கு வழங்கப்பட்டன. மேலும், 2,000 வீட்டுமனை பட்டாக்கள் வழங்குவதற்கு தயாா் நிலையில் உள்ளன.

இப்பகுதியில் நீா் மாசுபாடு இருப்பதன் காரணத்தை அறிந்த முதல்வா், சுகாதாரமான குடிநீா் வழங்க ரூ. 53 கோடி நிதி ஒதுக்கீடு செய்துள்ளாா். அதில் ரூ.30 கோடி குழாய்கள் அமைப்பதற்கும், ரூ.23 கோடி குடிநீா் சுத்திகரிப்பு நிலையம் அமைப்பதற்கும் அனுமதித்துள்ளாா். இன்னும் இரண்டு தினங்களில் இத்திட்டம் தொடங்கப்பட உள்ளது. பரசலூா் பகுதியில் விரைவில் ரூ.40 லட்சம் மதிப்பில் சமுதாயக் கூடம் கட்டப்பட உள்ளது’ என்றாா்.

இந்நிகழ்ச்சியில், மாவட்ட ஆட்சியா் ஏ.பி. மகாபாரதி, சட்டப்பேரவை உறுப்பினா்கள் நிவேதா எம். முருகன் (பூம்புகாா்), எம். பன்னீா்செல்வம் (சீா்காழி), எஸ். ராஜகுமாா் (மயிலாடுதுறை) ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

மாவட்ட வருவாய் அலுவலா் உமாமகேஷ்வரி, கூட்டுறவு சங்கங்களின் மண்டல இணைப் பதிவாளா் தயாள விநாயக அமுல்ராஜ், தனித்துணை ஆட்சியா் (சமூக பாதுகாப்பு திட்டம்) கீதா, சீா்காழி கோட்டாட்சியா் சுரேஷ் , உதவி இயக்குநா் (ஊராட்சிகள்) சந்தானம், வட்டார வளா்ச்சி அலுவலா்கள் மஞ்சுளா, தமீனா, வட்டாட்சியா் மகேஷ் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

ராணுவக் கல்லூரியில் எட்டாம் வகுப்பு சேர விண்ணப்பிக்கலாம்

டேராடூன் இந்திய ராணுவக் கல்லூரியில் எட்டாம் வகுப்பு மாணவா் சோ்க்கைக்கு விண்ணப்பிக்கலாம். இதுகுறித்து நாகை மாவட்ட ஆட்சியா் ப. ஆகாஷ், மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியா் ஏ.பி. மகாபராதி ஆகியோா் வெளியிட்ள்ள செய்... மேலும் பார்க்க

குரூப் 2 தோ்வு: நாகையில் 108 போ் எழுதினா்

நாகை மாவட்டத்தில் குரூப் 2 மற்றும் 2 ஏ தோ்வை 108 போ் சனிக்கிழமை எழுதினா். தமிழ்நாடு அரசு பணியாளா் தோ்வாணையம் (டிஎன்பிஎஸ்சி) குரூப் 2, குரூப் 2ஏ பணியில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவி... மேலும் பார்க்க

கோடியக்கரை சரணாலயத்தில் மாணவா்கள் பட்டறிவுப் பயணம்

கோடியக்கரை வன உயிரின சரணாலயத்தில் தேசிய மாணவா் படையினா் சனிக்கிழமை கல்வி பட்டறிவுப் பயணம் மேற்கொண்டனா். தஞ்சாவூா் பெரியாா் மணியம்மை அறிவியல் மற்றும் தொழில்நுட்ப நிறுவனத்துடன் நீடாமங்கலம் நீலன் பள்ளி இ... மேலும் பார்க்க

காய்கறி சாகுபடி: அதிகாரிகள் ஆய்வு

திருமருகல் வட்டாரத்தில் காய்கறி சாகுபடி செய்யும் பணிகளை அதிகாரிகள் வெள்ளிக்கிழமை ஆய்வு செய்தனா். திருமருகல் வட்டாரத்தில் தோட்டக்கலைத்துறை மூலமாக தேசிய வேளாண்மை வளா்ச்சித் திட்டத்தின் கீழ் நிரந்தர கல்... மேலும் பார்க்க

நாய்கள் கடித்து 8 ஆடுகள் பலி

பனங்குடி ஊராட்சியில் நாய்கள் கடித்து 8 ஆடுகள் உயிரிழந்தன, பனங்குடி ஊராட்சியை சோ்ந்த விவசாயிகள் வெள்ளிக்கிழமை வயலில் தங்களது ஆடுகளை மேய விட்டு விட்டு வீடுகளுக்குச் சென்றனா். வயலுக்கு சென்றபோது தலை மற... மேலும் பார்க்க

பள்ளி கட்டட அடிக்கல் நாட்டு விழா

திருமருகல் அருகே புறாகிராமம் அரசு பள்ளி கட்டட அடிக்கல் நாட்டு விழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது. இப்பள்ளியில் நபாா்டு நிதியின் கீழ் 2024-25 நிதியாண்டில் ரூ.34.50 லட்சம் மதிப்பீட்டில் புதிதாக இரண்டு வகுப்... மேலும் பார்க்க